தொடர் 20
அப்போது அவர் பகிர்ந்துகொண்ட இரு வேருபட்ட செய்திகள் என்னை இன்னும் உட்சாகப்படுத்தியது.
மந்தைகளுடன் வாழ்ந்த சிங்கத்தையும், கப்பல் செய்யப் போன கப்பல் உரிமையாளரையும் பற்றியாதாக இருந்தது அந்த அனுபவம் நிறைந்த கதைகள்.
வேட்டைக்காகச் சென்றிருந்த ஒருவர் ஒரு சிங்கக் குட்டியை வேட்டையாடி வீட்டுக்குக் கொண்டு வந்திருந்தார்.
அதை எப்படி வளர்ப்பது என்று தெரியாமலே வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே அதனை கவனிக்க ஆரம்பித்தார்.
தன் வீட்டில் இருந்த மந்தைகள் கூட்டத்துடன் இந்த சிங்கக் குட்டியை இணைத்துவிட்டிருந்தார், நீண்ட நாள் ஒன்றாய் வாழ ஆரம்பித்த சிங்கம் அந்த மந்தைகளின் பாஷைகளை-ஆடல் அசைவுகளை கற்று, தன் நடத்தைகளை அதன் இசைவாக்கத்துடன் ஒன்றிணைத்துக் கொண்டு காலம் கடத்த ஆரம்பித்தன.
புல்வெளியில் மேய்ந்து கொண்டு நடந்து சென்ற மாலை நேரம் அது…………
மந்தைக்கூட்டம் திடிரென ஒரு காட்டுச் சிங்கத்தை கண்டு ஓடி மறைய ஆரம்பித்தன, கடைசியாக சிங்கக் குட்டியும் மந்தைகளுடன் சேர்ந்து தப்பி ஓட ஆரம்பித்த போது அந்த காட்டுச் சிங்கம் அதன் அருகே வந்து….……
காட்டுச் சிங்கத்தை கண்டு ம்பே ம்பே.. என்று சத்தமிட்ட குட்டிச் சிங்கம் என்னை திண்டுவிடாதே என்றது…….
இல்லை, நீ எங்கள் இனத்தைச் சார்ந்தவன், காட்டு ராஜா நீ, வா போகலாம் என்று அதன் மாளிகைக்கு அழைத்துச் சென்றது.
’சிங்கம் மந்தையாக இருக்க முடியாது மந்தை சிங்கமாக இருந்தாலும்……’ என்று சொன்ன தந்தையிடத்தில் இதன் விரிவான வியாக்கியாணத்தை வினவினேன்.
உன் நண்பர்கள் மந்தைகள் என்றால் நீ அவர்களுடன் சேர்ந்துகொண்ட சிங்கக் குட்டி
அல்லது
உன் நண்பர்கள் சிங்கங்கள் என்றால் நீ அவர்களுடன் சேர்ந்த மந்தை.
இதில் நீ என்னவாக இருக்கிறாய் என்பதை விளங்கிகொள்ள வேண்டும் என்று என் சிந்தனை ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தார்.
நம் தலைக்கு மேல் பறக்கும் பருந்தை பார்த்திருக்கிறாயா? அது தூரத்தில் வருகிறது என்றாலே கீழே உணவு தேடும் கோழிக்குஞ்சுகள் ஓடி மறைந்துவிடும்.
கண் மூடி கண் திறப்பதற்கு முன்னரே அது எங்கோ ஒரு கோழிக்குஞ்சை தனக்கு இறையாக்கிக் கொள்ளும்.
பறவைகளில் பருந்து என்றால் ஒரு தனிச் சிறப்புத் தான்.
அன்று ஒரு பருந்து, தன் குஞ்சியை அதன் தாய் கூடு மாற்றுவதற்காக ஒரு இடத்திலிருந்து வேரு ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது கீழே விழுந்து விட்டது.
கீழே விழுந்த அந்த பருந்துக் குஞ்சி, அதன் கண்ணுக்கெட்டிய கோழிக் குஞ்சிகளுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தது.
தந்தை கதை சொல்லிக்கொண்டே போகிறார், நான் அந்த கதையை என் மனதில் கற்பனை செய்து கொண்டே, கேட்டுக்கொண்டிருந்தேன்.
வானில் சிறக்கடித்து பறந்து ஏனைய பறவைகளை மிஞ்சி நிற்கும் ஒரு பருந்து, கீழே கோழிக் குஞ்சிகளுடன் சேர்ந்து தன் தலையை மேலே உயர்த்தி பார்க்காமலே வாழ ஆரம்பித்தது.
தான் எதிர்பார்க்காத அந்த பொழுதில், தனக்கு மேலே பறக்கும் ஒரு இனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து இப்படியும் ஒரு பறவை இனமா என்று தன்னுள் கேள்வி கேட்டு தன்னையே திட்டித் தீர்த்துக் கொண்டது.
அன்றிலிருந்து பறக்க ஆரம்பித்தது.
“உன்னை அறிந்து கொள், அது பிறரை அறிய கற்றுத்தரும்” என்பது தான் தந்தையின் உளவியல்.
தேநீர் குடிப்பவர்கள் குடித்து முடித்த மறுகனமே அது கொடுக்கின்ற உட்சாகத்தை உணர்கிறார்கள்,
அதே போல் காலையிலும் மாலையிலும் உடற் பயிற்சி செய்பவர்கள் அதே நாள் அது பயனளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும்.
உன் முயற்சி, சிந்தனை விரிவாக்கத்திற்கான தியாகம் இன்று பயன்தராமல் இருக்கலாம், அது நாளைய விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் பட்டியலில் உன்னை சேர்த்துவைக்கும்.
அதற்கான எட்டுக்களை தொடர்ந்து தைரியமாக முன்னெடுத்து வை ……..
என்று கூறிய தந்தை, எங்கள் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கப்பலை கைவிரல் நீட்டிக் காட்டினார்.
இதில் என்ன இருக்கிறது என்று ஒரு சிறிய கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டு கண்களை நன்றாக திறந்து காதுகளை விரித்து அவர் வார்த்தைகளை கேட்கலானேன்.
அது நிறைய படிப்பினையையும் பழமைவாய்ந்த அனுபவத்தையும் சுமந்திருப்பதால் அதை மறக்காமல் இங்கு பகிர வேண்டும்.
கடல் பயணத்தில் இருந்த கப்பலின் உரிமையாளர் தனது கப்பலில் ஏற்பட்ட ஒரு கோலாரை திருத்துவதற்காக அந்த பிரதேசத்தில் பெயர் போன ஒரு தொழில் வள்ளுனரை சந்தித்து தனது கப்பலின் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.
கப்பலை முழுமையாக நோட்டமிட்ட அவர் ஒரு திறப்பை எடுத்து குறித்த ஒரு நட்டை திருப்பிவிட்டு கப்பலை ஓட்டிப் பார்த்தார்.
கப்பல் உரிமையாளர் சந்தோஷத்தில் பயணத்தை தொடரும் முன் கப்பலை பழுது பார்த்த கூலியை வழங்குவதற்காக அதற்கான ரசீட்டை தரும்படி தனது உதவியாளரை அனுப்பி இருந்தார்.
அந்த தொழில்வள்ளுனர் கப்பலை பழுதுபார்த்ததற்கான தொகையை விபரமாக எழுதி, கொடுத்தனுப்பினார்.
அங்கு எழுதப்பட்டிருந்த மொத்தத் தொகையை பார்த்த கப்பலின் உரிமையாளர் அதிர்ச்சியுற்றார்யடைந்தார்.
ஏன்? என்று நான் தந்தையிடத்தில் கேள்வி கேட்டேன்.
அந்த ரசீட்டில் எழுதப்பட்டிருந்த விபரத்தை எனக்குச் சொல்லிக் காட்டினார் தந்தை.
நட்டை சரி செய்தமைக்கு ரூபாய் 02
என்ன பிரச்சினை என்பதை தேடி கண்டுபிடித்தமைக்கு ரூபாய் 998
மொத்தம் ரூபாய் 1000/=
இந்த சம்பவம் எனக்கு ஒரு பெரிய படிப்பினையை உணர்த்தியது.
நம்முல் மறைந்து கிடந்த பேராற்றலை இனங்கண்டுகொண்டு அதனை வளர்க்க முயற்சித்து, அதற்காக தியாகங்கள் செய்து முன் செல்கின்ற போது அது தருகின்ற இலாபம் எல்லையற்றது என்பது தான் அது………..!
தொடரும்……
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment