மொட்டுக்கள் மலர…….. தொடர் 05



(4) தேவைப்படும் போது பிள்ளைகளை அவர்களின் தாளாத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வளர்த்தல் (Let Them dance to Their own Rhythm).

ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விதமான நடத்தைகளையும் போக்கையும் கொண்டவர்கள்,

 சிலர் அமைதியான சூழலில் மட்டும் தான் படிக்க விரும்புவார்கள்,
 சிலர் எப்போ, எப்படி வேண்டுமென்றாலும் படிப்பார்கள்,
 சிலர் பாடசாலையிலிருந்து திரும்பியதும் வீட்டு வேளைகளை செய்து விடுவார்கள்,
 சிலர் இரவில் மட்டும் செய்வார்கள்,
 சிலருக்கு முதலில் விளையாட வேண்டும்,
 சிலர் காலையில் எழுந்த உடன் படிக்க விரும்புவார்கள்.
இப்படிப்பட்டவர்களை அவர்களின் நடத்தைகளில் அவர்களை விட்டு விட்டு பிடிக்க வேண்டும், ஆனால் எமக்கு தேவை எப்படியாவது அவர்கள் பாடங்களை படிப்பதும் பயிற்சிகளை செய்வதும் தான்.

(5) தண்டனையை பரிசாகக் கொடுத்தல், (Replace Scolding with Selling Benefits!)
எமது பிள்ளைகள் தொலைக்காட்சி மூலமும் ஏனைய விளையாட்டு சாதனங்கள் மூலமும் வெகு விரைவில் தங்களது எண்ணங்களை திருப்பிவிடுகின்றார்கள், அப்போது உடனே அதனை விட்டுவிட்டு புத்தகத்தை எடுத்து படி என்று சொல்லுவது எமது அன்றாட பழக்கமாகிவிட்டது.

“நீ படி அல்லது பரீட்சையில் பெயிலாகிவிடுவாய்” என்று எமது பிள்ளைகளை திட்டுவதை, தண்டிப்பதை விட “நீ நன்றாக படி, நல்ல முறையில் உன்னால் பரிட்சையில் சித்தியடைய முடியும்” “நீ நன்றாக படி, உனது எதிர்கால வாழ்வில் நல்ல முறையில் வெற்றி பெற முடியும்” என்று கூறினால் எமது பிள்ளை வருகின்ற பரீட்சையில் 80 வீத சராசரிக்கு மேல் எடுத்து மிகச் சிறந்த முறையில் சித்தியடைவான்.

திட்டுவதும் சத்தமான வார்த்தைகளை கூறுவது எமது பிள்ளைகளை திருத்துவதற்குரிய சிறந்த மறுந்தல்ல. ஆனால் படிப்பில் வெறுப்புற்றிருக்கும் ஒரு சிறுவனை, சிறுமியை திசை திருப்பி புகழத்தக்க பெறுபேறுகளை எடுக்கச் செய்வதற்கு எம்மிடத்திலிருக்கின்ற அற்புதமான வழிதான் நல்ல முறையில் படித்தால் நல்ல எதிர்காலத்தையும் படிப்பில் கவனக் குறைவாக இருந்தால் எதிர்காலத்தில் மிக மோசமான வாழ்க்கை முறையை சந்திக்க நேரிடும் என்பதை எமது பிள்ளைகளுக்கு உணர்த்துவதுமாகும்.

“எமது பிள்ளைகள் ஏழ்மை வாழ்க்கைக்கு மாறிவிடக் கூடாது”. அதனால் வீணான செயல்களை விட்டுவிட்டு எமது பிள்ளைகளை நான் மேலே சொன்ன இந்த இரகசியத்தை பயன்படுத்துவதனூடாக அவர்களை படிப்பின் பால் தூண்டிவிடலாம்

எமது சூழலில் படிப்பின் மூலம் நல்ல வாழ்வை தொடர்பவர்களையும் பாடசாலை பருவத்தில் படிப்பை இடைநிறுத்தியவர்களின் கவலைக்குரியவர்களின் நிலைகளை உதாரணங்களாக எமது பிள்ளைகளின் சிந்தனைக்கு கொண்டுவருவதனூடாக அவர்களை உணர்த்தலாம். எப்போது எமது பிள்ளைகளுக்கு படி என்று கடுமையாக திட்டுவதற்கு பதிலாக தாழ்மையான சாத்வீகமான வார்த்தைகளை பாவித்து விளங்கப்படுத்தலாம்,
உதாரணமாக,
“நீ உனது வீட்டு வேலைகளை உரிய நேரத்தில் சரியான முறையில் செய்து முடித்தால் உனது டீச்சரை சிரித்த முகத்துடன் பார்க்க முடியும்”

உதாரணமாக,
“நீ உனது வீட்டு வேளைகளை உரிய நேரத்தில் சரியான முறையில் செய்து முடித்தால் உனது டீச்சரை சிறித்த முகர்த்துடன் பார்க்க முடியும்”
“நன்றாக படி, உனது எதிர்காலத்தை வெற்றிகரமாக கடத்தமுடியும்”
“அதிகமாக படிப்பில் கவனம் செலுத்து, உனது எதிர் கால கனவுகளை நிஜமாக்க முடியும்”
இந்த விதமான தந்திரங்களை பயன்படுத்துவதனூடாக எமது பிள்ளைகளின் மனநிலையை கெடுக்காமலும் அவர்களின் உணர்வுகளை சிதைக்காமலும் விடயங்களை சாதித்துக் கொள்ளலாம். இந்த முறை எல்லா வகையான வயதுடையவர்களுக்கும் உதவும்.

எமது பிள்ளைகள் மிகச் சிறிய வயதுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேறு சில தந்திரங்களையும் கைங்காரியங்களையும் பாவிக்க வேண்டும்.
காரணம் அவர்களின் சிந்தனைகளை மிக வேகமாக திருப்புவது கஸ்டமானதாகும். அவர்களிடத்தில் அவர்களது புத்தகத்தை எடுத்துவரச் சொல்லி இருவரும் ஒன்றாக இருந்து “இன்றைய பாடம் என்ன? எம்பதை பார்ப்போம்” அல்லது “இன்று நாம் இருவரும் சுவாரசியமான ஒரு புதிய பாடத்தை படிப்போம்” “அல்லது பாடத்தில் இடம்பெறுகின்ற ஒருவரின் பெயரைச் சொல்லி “இவருக்கு என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்” என்று அவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டு வியத்தக்க விதத்தில் வழமைக்கு மாற்றமாக அவர்களை படிக்கச் செய்யலாம்.

முடியுமானவரை சாத்வீகமான விதத்தில் பிள்ளைகளை அவர்களின் சிந்தனைகளை கிளறிவிடும் வகையில் அவர்களை புகழ்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி நாளுக்கு நாள் புதிய முறைகளை கையாண்டு படிக்கச் செய்யலாம்.

(6) பிள்ளைகளுக்கு முன்னால் சொல்லுக்கு மாற்றமாக நடந்து கொள்ளக் கூடாது, (Don’t Do Negative Programming in front of children)

“நீ மிகவும் சோம்பேறியாக இருக்கின்றாய், உரிய நேரத்தில் குர் ஆன் ஓதமாட்டாய்” “நீ மந்த நிலையில் இருக்கின்றாய் அதனால் உன்னால் எதையும் ஞாபம் வைத்துக் கொள்ளமுடியாது” “படி அல்லது உன்னை ரூமில் அடைத்து வைத்து விடுவேன்” “உரிய முறையில் படிக்காவிட்டால் நீ கேட்பதை வாங்கிக் கொடுக்க மாட்டேன்”
இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி எமது பிள்ளைகளை படிக்கவைக்க நினைத்தால் அவர்களை கோபத்திற்கும் மன உலைச்சலுக்கும் உள்ளாக்குவோம், எமது இந்த வார்த்தைகளுக்கு பயந்து அவர்கள் புத்தகத்தை எடுத்து படித்தாலும் அவைகள் அவர்களின் மனதில் பதியாது, காரணம் அவர்களின் உள்ளம் அதிர்ச்சியடைந்து கோபமுற்று எதையும் ஏற்க தயாரற்ற நிலையில் இருக்கின்றது.

இந்த முறைகள் எமது பிள்ளைகள் வளர்ந்த பின்னும் அவர்களை பாதிக்கச் செய்யும்.

(7) இலேசான, நுட்பமான கல்வி முறையை கற்றுக் கொடுத்தல், (Help Children in Use better study methods to learn fast and score high)

பிள்ளைகள் படிப்பில் வெற்றி பெறுவது என்பது அவர்களது மூளை, மனதை நல்ல, சாதுவான முறையில் பயன்படுத்துவதிலும் படிப்பதற்கு, படிப்பிப்பதற்கு திறமையான வழிகளை கையாளுவதிலுமே தங்கியிருக்கின்றது.

பல சிறுவர் நல அறிஞர்களின், வைத்தியர்களின் கணிப்பீட்டின் படி எந்த வகையான, குறிப்பாக படிப்பில் தோல்வியடைந்த அல்லது சாதாராண நிலையில் இருக்கும் பிள்ளையையும் நல்ல நிலைக்கு உயர்த்துவதற்கு அவர்களுக்கு சிறந்த கல்விக் கொள்கைகளையும் நல்ல நுட்பங்களையும் அறிமுகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றார்கள்.

எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்தரக் கூடிய சில செயன்முறைகளை இங்கு குறிப்பிட்டிருக்கின்றேன்.

1. தேவையான இலக்கை உருவாக்குதல், (Set Target)

உண்மையில் எமது பிள்ளைகளை அவர்களுக்கு முதலில் ’அடுத்து’ என்ன தேவை என்பதை அவர்களாகவே கண்டுபிடிக்க உதவ வேண்டும்.

அது எதிர்வரும் பரிட்சையில் திறமை சித்தியை பெறும் இலட்சியமாக இருக்கலாம்,
அல்லது அல் குர்ஆன் வகுப்பில் அழகிய குரல் கொண்டு ஓதுவதற்குரிய முயற்சியாக இருக்கலாம்,
அல்லது குறித்த கல்லூரியில் நுழைவுச் சீட்டு கிடைப்பதற்குரிய முயற்சியாக இருக்கலாம்,
அல்லது குறித்த துறையில் நல்ல வேலை கிடைப்பதை இலக்காக கொண்டு செயற்படலாம்.

2. நேர அட்டவணையின் படி செயற்படல் (Create Study Time Table),
பிள்ளைகள் ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலங்கள் படிப்புக்காக ஒதுக்க முடியும் என்பதை அவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஒரு நேர சுசியை தயாரிப்பதற்கு உதவ வேண்டும்.

படிப்பு, ஓய்வு மற்றும் விளையாட்டு ஆகிய இந்த மூன்றையும் கருத்தில் கொண்டு அவர்களின் ஓய்வு நேரங்களை கவனிப்பதன் மூலம் எத்தனை மணித்தியாலம் சரியாக பாடங்களை மீட்டுவதற்கும் வீட்டு பயிற்சிகளை செய்வதற்கும் செலவிடமுடியும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த நேர அட்டவணையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

3. படிப்பதற்காக திட்டமிடல், (Study plan)

எமது பிள்ளைகள் எந்த இலக்கை அடைய வேண்டும் என முயற்சிக்கின்றார்களோ அதனை அடையும் வகையில் படிப்பை மேற்கொள்ள திட்டமிடுவதற்கு நாம் உதவ வேண்டும்.
உதாரணமாக, எதிர்வரும் பரீட்சையில் அதிக அல்லது திறமைச் சித்தி பெறுவதே எமது பிள்ளைகளின் இலக்கு என்றால் அதற்கான திட்டமிடலை உருவாக்குவதற்கு கீழ்வரும் படிமுறைகளை கையாளுங்கள்.

• பாடத்திட்டம்:
எதிவருகின்ற பரிட்சையில் எந்த வகையான பாடத்திட்டம் அல்லது தலைப்புக்கள் வரும் என்பதை இனங்காணல்.

• முக்கியமான தலைப்புக்களை இனங்காணல்:

எந்த தலைப்புக்கள், பாடங்கள் அதிகமான புள்ளிகளை ஈட்டித்தரும் என்பதை இனங்காணல், இதனை பிள்ளைகள் அவர்களின் ஆசிரியர்களிடத்தில் கேட்பதன் மூலம் அல்லது வழமையாக வகுப்புக்கு சமூகமளிக்கும் போது எந்த பாடங்களை ஆசிரியர்கள் “இது முக்கியமான பாடம்” என்று முக்கியப்படுத்துகின்றார்களோ அப்போதே அதனை குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

• எந்த வகையான கேள்விகள் வரும் என்பதை ஊகித்தல்:

எந்த வகையான கேள்விகள் வரலாம் என்பதை தெரிவுசெய்து அதற்கு தகுந்தால் போல் தயாராகி கொள்ளல்.

உதாரணமாக-
ஒரு மொழி தொடர்பான பாடமாக இருந்தால், தந்திருக்கும் பந்தியை சுருக்குக,
மேலே உள்ள பந்திக்கு அமைய கீழ்வரும் சம்பவங்களை விளக்குக, தந்திருக்கும் கேள்விகளுக்கு விரிவாக விடை எழுதுக.
அல்லது இது மாதியான கேள்விகளாக இருக்கலாம்.

* விடையளிப்பதற்கான சரியான முறைகளை தெரிந்துகொள்ளல்:
எப்போது எந்த எந்த மாதிரியான கேள்விகளுக்கு எப்படி எப்படி விடையளிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை ஆசிரியர்களிடத்தில், மேல் வகுப்பு மாணவர்களிடத்தில், அதே வகுப்பில் திறமையாக படிக்கும் சக மாணவர்களிடத்தில் கேட்பதன் மூலமும் பயிற்சிகள் செய்வதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

4. திட்டமிட்டபடி செயற்பட தூண்டுதல், (Take Action)

எமது பிள்ளைகள் எந்த வகையில் செயற்பட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றார்களோ அதனை செயலுருப்படுத்துவதற்கு உதவ வேண்டும்.

• தொடராக படித்தல்:

தயாரித்திருக்கும் நேர சூசிக்கமைய வழமையாக படிப்பதற்கு எமது பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும், இடைவிடாது தொடராக படிப்பது என்பது ஒரு நாளைக்கு குறைந்தது 1-2 மணித்தியாலம் படிப்பது என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய பெறுபேற்றை ஈட்டிக் கொடுக்க உதவும்.

• பாடமீட்டல்:

பாடசாலையில் படிக்கும் பாடங்களை தொடராக மீட்டுவதற்கு உதவ வேண்டும்,

• மாதிரி கேள்விகளுக்கும் பயிற்சிகளுக்கும் விடை எழுத பயிற்றுவித்தல்:
படிக்கின்ற பாடங்களுக்கமைய மாதிரி கேள்விகளை உருவாக்கி அதற்கான விடைகளை எழுத தூண்ட வேண்டும். இந்த முறை எமது பிள்ளைகளை அவசரமாகவும் துல்லியமாகவும் செயற்பட தூண்டும்

• பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கவனித்தல்:

எப்போது பிள்ளைகளில் நல்ல ஆரோக்கியமான உடலமைப்பையும் கனமான மூளையையும் கொண்டிருந்தால் தான் அவர்களின் படிப்பில் அவர்களால் நல்ல விவேகத்தை காண்பிக்க முடியும். அதற்காக தினமும் 8 மணித்தியாலங்கள் உறங்குவதற்கும் 30 நிமிட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வேளைக்கு வேளை நல்ல சக்திவாய்ந்த உணவுகளை. உண்ணுவதற்கும் உதவ வேண்டும்.

மலர்வது தொடர் 06 …………


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

வாஞ்சையுடன் வாஞ்சூர். said...

அருட்கொடையாம் தொழுகை.

தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.