பரவாயில்லை, இருக்கிறம்நீண்ட நாளைக்கு பின் எனது பழைய நண்பன் ஒருவனை சந்திக்கச் சென்றிருந்தேன்,

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா என்று தொடங்கி,
எப்படி இருக்க?

பரவாயில்லை, இருக்கிறம் என்று பதில் சொன்னான்.

அவனது அந்த இரண்டு வார்த்தைகளுக்குப் பின்னால் நீண்ட, ஆழ்ந்த செய்திகள் உள்ளடக்கியிருந்ததை அவனுடன் தொடர்ந்து கதைக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன்.
அவனை விட்டுப் பிரிந்து செல்லும் போது சில கேள்விகள் எனக்குள் என்னை திகைப்பில் ஆழ்த்தியது.
இந்த உலக வாழ்க்கை என்பது இங்குள்ள இன்பங்களை ருசிப்பதற்கு மட்டும் தான் என்கின்ற நோக்கம்,

ஹலால் ஹராம் எது என்ற பிரிவினை அற்ற நடத்தை,
நினைத்ததை நினைத்த போது செய்யத் துணியும் போக்கு,
நினைத்த நேரம் நினைத்தது நடக்காத போது கடவுளை திட்டித்தீர்க்கின்ற போக்கு…..
வாழ்ந்தால் முழுமையான ஆடம்பரம்………….

காலை முதல் மாலை வரை அன்றாட வாழ்க்கையுடன் தேவையான விடயங்களுக்காகவும் கடமைகளுக்காகவும் ஓடி ஆடி நேரங்களை கடத்துவர்………
தன்னைப் படைத்த கடவுள் தொடர்பாகவும் அவனது கட்டளைகள் தொடர்பாகவும் கவனமற்ற வழக்கு………..

பேசினால் ஆபாசம்,
மூச்சுவிட்டால் மாசுற்ற வார்த்தைகள்,
வாதித்தால் வக்கிரக உணர்வு………..
இவைகளுக்கு அவனிடத்தில் இருந்து சில காரணங்கள் கூட எனக்கு கிடைத்தது.
அவன் இப்படியெல்லாம் சொன்னான்………
வீட்டில் இருக்க முடியவில்லை, வீட்டில் உள்ள டீவியைத் திறந்தால் முழுதும் ஆபாசமாக, தேவையற்ற நிகழ்ச்சி நிரல்கள்………
சினிமாக்களை விளம்பரப்படுத்தும் சினிமாக்காரர்களை ஊக்குவிக்கும் உலகை இசையிக்ஷமாக (musicalizam) மாற்றும் முயற்சி……………

சும்மா கொஞ்சம் டீவி பார்க்கலாம்
என்றுதான் திறந்தேன்
அந்த பெட்டியை….
அய்யகோ
என்ன ஆபாசம்………..?
என்ன அட்டகாசம்?

வீட்டை விட்டு வெளியே சென்றால்……….
மறைத்து வைக்க வேண்டிய
முருக்கேரிய மார்பகங்களை
வெளிக்காட்டி
மானமுள்ள இளைஞர்களாகிய எங்களை
உசுப்பிவிடுகின்ற எங்கள் சூழலில்……. (இது எமது கன்னிப் பெண்கள் கதை)

’புகைத்தல் உடலுக்குக் கேடு’
என்று அறிவித்தலுடன் சேர்த்து,
குறைந்த விலையில் எங்களுக்கு சிகரட் தருகிறார்கள், நாங்கள் எப்படி புகைக்காமல் இருக்க?
(இது புகைபிடிப்பாளர்களின் கேள்வி).

நாடுவிட்டு நாடு பறக்கின்ற விமானங்களில்
விற்கின்றார்கள் மதுபானங்களை
எப்படி தூரமாவது நாங்கள்……
(வெளிநாடு செல்லும் பயணிகளின் அவஸ்த்தை இது).

100 ரூபாய் காரியம் சாதிக்க
1000 ரூபாய் இலஞ்சம் கொடுத்தேன்
அந்த அரச காரியாளயத்தில்.
(இலஞ்சம் ஊழலில் சிக்கியவர்களின் வார்த்தைகள் இது).

எங்களை தீமையில் சிக்க வைக்க
சமூகத் தளங்கள் என்ற பெயரில்
பல புதிய இணையத்தளப் பக்கங்கள்
நாள்தோறும்……
நண்பர்களை தேடச் செய்வது போல்
தீமைகளை சம்பாதிக்கச் செய்கின்றன

நாங்கள் எப்படி நன்றாக இருக்க, வாழ முடியும்? இது இன்று பலரது கேள்வியாக இருந்து வருகின்றது.

இந்த விரக்தியில் தான் பரவாயில்லை இருக்கிறம் என்று வாய் திறந்திருக்கிறார் என் நண்பர்.

நாம் எந்த தீமையில் சிக்கி இருக்கின்றோம் என்பதனை முதலில் அடையாளம் காணவேண்டும்.

இப்படியான தீமைகளை செய்தவர்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற கஸ்டங்களை மீள்பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்,

அவர்களது நடத்தைகளுடன் எமது செயல்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தொடர்கிற தீமைகள் இடைநிருத்தப்படுவதற்கு என்ன வழி என்பதை தேட வேண்டும்.

கிடைக்கின்ற ஆலோசனைகளைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொடரான முயற்சி மட்டுமே பயனளிக்கும் என்பதை நம்பி நடக்க வேண்டும்.

தீமைகளிலிருந்து தவிர்ந்து நடக்க அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

இஸ்லாமிய வாழ்க்கைநெறிமுறை மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் என்பதை தெரிந்து நடப்போம் வாருங்கள்……

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

நன்மைக்கும் தீமைக்குமான வாயில்கள் ஒரே அளவில் திறக்கப்பட்டிருந்தாலும் ... தீமைக்கான வாயில்கள் தான் முதலில் எமது கண்களை எட்டுகின்றன.. அவைதான் மிகவும் கவர்ச்சியானவையாக காணப் படுகின்றன. அந்த நேரத்தில் உங்கள் அறிவுரைகளை பின்பற்றுவது இன்றியாமையாதது
//நாம் எந்த தீமையில் சிக்கி இருக்கின்றோம் என்பதனை முதலில் அடையாளம் காணவேண்டும்.

இப்படியான தீமைகளை செய்தவர்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற கஸ்டங்களை மீள்பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்,

அவர்களது நடத்தைகளுடன் எமது செயல்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தொடர்கிற தீமைகள் இடைநிருத்தப்படுவதற்கு என்ன வழி என்பதை தேட வேண்டும்.
கிடைக்கின்ற ஆலோசனைகளைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.//


ஜஸாக்கல்லாஹு ஹைரன்
(ஷாதா)