மொட்டுக்கள் மலர…….. தொடர் 07


1) அமைதியான மனநிலையை தேடி பிரார்த்தி:
எப்போதும் அல்லாஹ்விடத்தில் எமது கல்வி வளர்ச்சிக்காக பிராத்திக்க வேண்டும். எமது எல்லா தொழுகையின் போதும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட வழிமுறையில் செயற்படுவதற்கும் பிரார்த்திக்க வேண்டும்.

எமது பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க அல்லாஹ் காத்திருக்கின்றான்.

2) எப்போதும் உனக்குள் உன்னை நீ புகழ்பவனாக இரு:
எம்மைப் பற்றி நாம் புகழ்வது அது எமது காதுக்கு கிட்டும் இரசனைமிகு இசையாகும். அது எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
அது துரிதமான முறையில் படிப்பின் பால் எம்மை ஈர்க்கச் செய்யும்.

“நான் ஒரு புத்திசாலி, என்னால் எந்த பாடத்தையும் வெகு விரைவில் விளங்கிக்கொள்ள முடியும், நான் ஒரு ஒழுக்கமான மாணவன், வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் நானும் ஒருவன்”
இப்படிப்பட்ட துரிதமான வார்த்தைகள் எமக்கு, எமது மனதுக்கு தீணிபோட, மின் ஊட்ட உதவும்.
இந்த நிலையைத் தொடர்கின்ற போது எம்மை அறியாமலேயே எமது மூளை எமது பாடப் புத்தகங்களைத் தேடிச்செல்லும்.

இதன் மூலம்,
• உன்னை நீ உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்,
• ஆர்வப்படுத்திக்கொள்ளலாம்
• படிப்பதில் விருப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்
• சாத்தியமான மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளலாம்
• படிக்கும் திறமையை அதிகரிக்க முடியும்.
• இதற்காக எந்தப் பணமும் செலவில்லை

3) உன்னை உனக்குள் வசப்படுத்திக் கொள்:
சில விருப்பமான உணவுகளை, நிகழ்ச்சிகளை, ஆலோசனைகளைக் கொண்டு உன்னை உனக்குள் அடிமைப்படுத்திக் கொள்.

“நான் இந்த ஒப்படை வேலை முடிந்ததும் எமது நண்பர்களுடன் மைதானத்திற்கு செல்வேன்”
“எமது இந்த வீட்டு வேளை முடிந்ததும் குறித்த இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவேன்”

எமது பாடங்களை உரிய நேரத்தில் முடிப்பதற்கும் ஏனைய விடயங்களுக்கு முன்னால் படிப்பை முற்படுத்துவதற்கும் இந்த அமைப்பு உதவும்.

4) பெறுமதியை உணர்ந்து நட:
எந்த விடயத்தில் அதிக வருமானம், இலாபம் கிடைக்கின்றதோ அதற்கு அதிக கவனம் செலுத்துவது எல்லோரிடத்திலுமுள்ள ஒரு இயல்பு.
நாம் மாணவர்கள், எம்மைப் பொறுத்தவரையில் படிப்பின் பெறுமதியை சரிவர உணர்ந்து அதை சரிவரக் கற்பதன் மூலம் தான் எமது எதிர்காலத்தை சரி செய்து கொள்ள முடியும் என்பதைக் கொண்டு கல்விக்கு அதிக பெறுமதியைக் கொடுக்க வேண்டும்.
நடக்கக் கூடிய பரீட்சைகள், தொழில் முயற்சிகள்,
எதிலும் புத்திசாலித்தனம், எதிர்கால வாழ்வு

இவைகளைக் கருத்தில் கொண்டு இவைகளின் பிரயோசனங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

5) போட்டி மனப்பான்மையை உருவாக்குதல்:
மனிதர்களில் உள்ள மிருகத்தனமான ஒரு இயல்புதான் ஒருவருடன் இன்னொருவர் போட்டிபோடுவது.
“எனக்கும் வேண்டும்”, “நான் தான் முதலில்…………..,”
“நான் தான் முதல் வர வேண்டும்”

எந்த ஒன்றுக்கும் இவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு முன்வருவது மனித இயல்பு. இந்த நிலைமைக்கு எமது இளைஞர் சமூகமும் விதிவிலக்கல்ல.
இப்படியாகப் போட்டி போடும் போது
“நான் தான் இந்த பாடத்தை முதலில் வாசிப்பேன்,”
“நான் தான் இந்த ஒப்படையை முதலில் முடிப்பேன்,”
“நான் தான் எனது வகுப்பபில் அதிகமான புள்ளிகளை எடுப்பேன்”
இப்படிப்பட்ட வகையில் எமது போட்டிகள் அமைய வேண்டும். இந்த முறை எமது மனதைத் தூண்டிவிடுவதில் மிகப்பெரும் ஆயுதமாக இருக்கும்.
ஆனால் இந்த ஆயுதத்தை சாத்தியமான முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது;
“நான் இந்த பாடத்தைச் சரியான முறையில் படித்தால்தான் எனது வகுப்பில் ஆசிரியரின் கேள்விக்கு உரிய முறையில் விடையளிப்பேன்,”

“நான் அதிக புள்ளிகளை எடுத்தால் தான் எனது தந்தை எனது ரிப்போடை சந்தோஷமாக பார்ப்பார்,”
“நான் எனது வகுப்பில் ஒழுக்கமான மாணவனான இருப்பேன், அப்போது தான் எனது சக மாணவர்களும் எனது ஆசிரியர்களும் என்னை நல்ல முறையில் மதிப்பார்கள்”.
இந்த விதமான போட்டி நிலை எம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும்.
ஆனால் போட்டி போடும் போது பிறர் எம்மை முந்திவிட்டால் அதை நினைத்துக் கவலைப்படக்கூடாது, போட்டி எப்போது எமக்குள் எமக்காக இருக்க வேண்டும், சென்ற மாதம் நான் எடுத்த புள்ளிகளை விட இந்த முறை அதிக புள்ளிகளை எடுப்பேன், கடந்த வருடப் பரீட்சையை விட இந்த முறை பரீட்சையில் எனது ரிப்போட் சூப்பராக இருக்கும், என்பது போல எமது போட்டிகள் அமைய வேண்டும். இந்த விதமான போட்டி நிலை நாளுக்கு நாள் நாம் உயர்வதற்கும் எம்மை நாம் உயர்த்துவதற்குமுள்ள விட்டமீனாக (Vitamin) அமையும், இன்ஷா அல்லாஹ்.

6) எதையும் முதலில் ஆரம்பித்து வை:
“ஒரு விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால் முதலில் அதனை விளையாடிப்பார்க்க வேண்டும்”
எனக்கு பிடித்த ஒரு வாக்கியம் தான் இது.

அன்பின் தம்பி தங்கைகளே! எமது சிறு பிள்ளை தொடக்கம் முப்பாட்டன் வரை அனைவருக்கும் உள்ள ஒரே ஒரு நோய் தான் எந்த ஒருவிடயத்தையும் ஆரம்பிக்கும் முன் எப்படி ஆரம்பிப்பது?, எப்படி விளையாடுவது?, தோல்வியடைந்துவிடுவேனே? என்ற சந்தேக மனோ பாவம்.
இந்த மோசமான மனோ நிலையை மாற்றி, எதையும் முதலில் செய்துபார்ப்போம் என்ற தைரிய சிந்தனைகளை உருவாக்கிகொள்ள வேண்டும்.

அசாத்தியமான சிந்தனைகளை மாற்றிவைத்துவிட்டு எந்த பாடத்தைக் கஸ்டம் என்று நினைத்தோமோ அதை எடுத்து வாசிக்க ஆரம்பியுங்கள், ஒவ்வொரு சொல்லாக, வரியாக, வாசித்துக்கொண்டே இருங்கள், அதன் கருத்து தெரிகின்றதோ, இல்லையோ தொடருங்கள்.

இந்த ஆரம்பத்தை உங்கள் மொத்த வாழ்க்கையின் ஆரம்பமாக நினையுங்கள்.
மாற்றங்களை வெகு விரைவில் சுவைப்பீர்கள்.

இந்த ஆறு கட்டங்களும் உங்களுடைய வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதை உங்களால் கவனிக்க முடியும்.
• நீங்கள் வெறுத்த பாடத்தில் சிறந்த பெறுபேற்றை ஈட்டித்தரும்.
• வகுப்புகளில் சிறந்த பெறுபேறுகளை எடுக்க உதவும்.
• 100% மனதை ஒருமுகப்படுத்த உதவும்
• நீங்கள் தயார்படுத்தும் நேர சூசி பிரயோசனத்தைத் தரும்.
• தரமான சிறுகுறிப்புக்களை எடுக்க உதவும்.
• “தரமான மாணவன் (Best student)” என்ற இடத்தை வகுத்துக்கொடுக்கும்.
• நல்ல மொழி விருத்தியைக் கொடுக்கும்
• இன்னும் நிறையவே இருக்கின்றது, அவைகளை அனுபவத்தில் பெற்றுக்கொள்வீர்கள்.

மலர்வது தொடர் 08 …………

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: