இன்றைய அரசியலில் வெளிபட்டதும் வெளிப்பட வேண்டியதும்


ன்றைய அரசியலில் வெளிபட்டதும் வெளிப்பட வேண்டியதும் (Open and close in Today’s politics)



Subject for discussion:
• சர்வதேச நாடுகளுக்கிடையிலான மோதல்கள்
• அரசியல் தலைவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள்?
• மக்களின் குரல்கள் ஓங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
• 99%ன் பலம்
• சிரியாவின் இன்றைய நிலவரம்
• கிரேக் அரசியல் நகர்வு சொல்லும் பாடம்
• அமெரிக்கவின் உள், வெளி போக்குகள்
• அமெரிக்கவின் இன்றைய உள், வெளி அரசியல் நடத்தைகள்

Open and close in Today’s politics:
Subject for discussion:
• International conflicts
• The lessons for the political leaders
• the features to look out When people raise the voices
• 99% of the strength
• The present situation in Syria
• Greek’s political movement
• America's current internal and external political behaviours

also ... ... ... ... ... .

அறிவியல் யுகம் இது, ஆனால் நீர் இல்லாத தேசத்தில் கூட நீண்ட யுத்தங்கள்….
அதற்கு பின்னால் ஒரு தேசத்தின் அல்லது மனிதனின் இலாப நோக்கு ஆனால் பல உயிர் சேதங்களும் சொத்து இழப்புக்களும்.

சிந்திக்கிறவர்கள் எதிர்க்கிறார்கள், சந்திக்கின்றவர்கள் உயிர்விடுகிறார்கள், திட்டமிடுகிறவர்கள் தூரத்தில் சந்தோக்ஷமாக ஆனந்த புன்னகைகளுடன் வாழ்கின்றார்கள்…….
இந்த வருட ஆரம்பத்தில் நவீன அரசியல் நடவடிக்கைகள் பற்றி ’மாற்றங்கள் தேவை’ யில் எழுதும் போது இந்த ஆண்டை மாற்றத்தின் ஆண்டு என்று வர்ணித்திருந்தோம்.

உண்மையில் வலைகுடா தொட்டு அமெரிக்கா வரை பல அரசியல் மாற்றங்களையும் மாற்றங்களுக்கான ஆரம்ப முயற்சிகளையும் பார்க்க முடிந்தது. அது தொடர்ந்து கொண்டும் இருக்கின்றது.

அறபு தேசத்தில் கசிந்த சுதந்திரத்திற்கான மக்கள் குரல் ஆங்காங்கே அனைத்து நாடுகளையும் பத்திவிடச் செய்திருக்கின்றது.

இந்த மக்கள் புரட்சியில் எதிர்காலத்திற்குத் தேவையான சுதந்திர நகர்வுகளுக்கு விடிவு பிறந்த அதேவேளை, பாரிய உயிர் மற்றும் சொத்துச் சேதங்களுக்கும் வழிவகுத்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வலைகுடாவுக்குள் மக்கள் எழுச்சிக்கான உரத்த சத்தம் எழ ஆரம்பித்தை சாட்டாக எடுத்துக்கொண்ட அமெரிக்கா மனித உரிமைக்கான குரல் (voice for human rights) என்ற பெயரில் மூக்கை நுழைத்து சில உலக நாடுகளையும் சேர்த்துக்கொண்டு நாடகத்திற்கு தயாராகியது,
ஆனால் அதே மனித உரிமைக்கான ஊக்கத்தையும் ஏக்கத்தையும் லிபியாவில் காண்பித்தது போல் ஏனைய சில நாடுகளில் காட்ட மறுத்தது, மறந்தது ஏன் என்று தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது பலருக்கு தெரிந்துவிட்டது.

சிரியாவில் மக்கள் பாதைக்கு வந்தார்கள்,
எமனில் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டினார்கள்,
பஹ்ரைனில் மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்,
அதே தொனியில் தான் லிபிய மக்களும் வந்தார்கள்,

ஆனால் ஏன் இத்தனை நாடுகளையும் கண்டுகொள்ள மறந்த அமெரிக்காவும் UNO, NATOவும் லிபிய மக்களின் உயிர்களிலும் உரிமைகளில் மட்டும் அத்துனை அக்கறை கொண்டது?
காரணத்தை இன்றைய சர்வதேச அறிஞர்கள், அரசியல் ஆய்வாளர்களே சொல்லுகிறார்கள், ……..அது ஒன்னும் இல்லை எண்ணைக்கு மட்டும் தான்…………… என்று.
புரிந்திருக்கும் காரணம்…..
இல்லை இல்லை மக்களின் உரிமை மட்டும் தான் எங்களுக்கு முக்கியம் என்றுதான் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அரசாங்கமும் படையெடுத்து UNO, NATOவையும் துணைக்கு அழைத்து வந்ததெனில் ஏன் ஏனைய நாடுகளுக்கு இதே பாணியை கையாளவில்லை?
இதை அறிந்ததோ என்னவோ அன்று ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பல கூட்டுத் தாக்குதல்களுக்கெதிராக இப்போது ஈராக் மக்களில் பல்லாயிரம் பேர் அமெரிக்காவுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குக்த்தாக்கல் செய்ய முன்வந்திருக்கின்றார்கள்.

மனித உரிமைகள், உலக சமாதானம் என்று அதிகம் பேசும், பேசுவதாக காண்பிக்கும் அமெரிக்கா ஏன் UNESCOவுக்கான பலஸ்தீன நாடு அனுமதி வாக்கெடுப்பில் (General Conference admits Palestine as UNESCO Member- 31.10.2011) எதிர்த்து நின்றதும் அதே அமெரிக்கா வருடா வருடம் வழங்கி வரும் நிதிஉதவியை குறைத்துக்கொண்டதும் என்று கேள்வி எழுப்ப வேண்டிய சந்தர்ப்பம் இது.

உலக சந்தையில் தன்னை தலைசிறந்த சண்டியனாக படம்காட்டி அதனை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் பிரயத்தனங்களுக்கு பாடமாகத்தான், இன்று அதே தேசத்திற்குள் நடந்தேறும் ஆர்ப்பாட்டங்களும் அடுத்தடுத்து நிகழும் இயற்கை அழிவுகளுமோ என்றுகூட பலர் சிந்திக்க தலைப் பட்டுள்ளனர்.

இந்த நிலையை புரிந்து அடுத்த காலடிகளை கவனமாக வைப்பார்கள் என்பது பலரதும் எதிர்பார்ப்பு.

எகிப்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் போராடி அந்த நாட்டில் 4 தசாப்தங்களையும் கடத்திய ஹுஸ்னி முபாரக்கை வீட்டுக்கு அனுப்பிய பின்னும் மீண்டும் அதே மக்கள் கடந்த சில தினங்களாக அந்நாட்டு இராணுவத்துக்கு எதிராக குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அது பல உயிர்ச் சேதங்களுக்கு வழிவகுத்திருக்கின்றது.
(Cairo, Egypt - Since the afternoon of November 19, a steady battle has been raging up and down Mohammad Mahmoud Street at the heart of downtown Cairo. As the mounting flurry of press coverage around this newest phase of Egypt's revolution has noted, the extraordinary events of the past few days have given Mohammad Mahmoud both strategic and symbolic significance: The street is one of the main thoroughfares leading out of the Square in the direction of the Interior Ministry. As the current regime has resorted to ever-more-brutal tactics in its efforts to quash the reoccupation of Tahrir, Mohammad Mahmoud Street has become the frontline in clashes between security forces from the Ministry and protesters fighting to hold the Square. The more the violence unleashed by security resembles or even exceeds the horrific experiences of late January, the more the Interior Ministry becomes a focal point for those who see the revolution as incomplete.)

இது குறித்து ஏன் இன்னும் எந்த சட்டத்தையும் சத்தத்தையும் எழுப்பவில்லை?
சிரியாவில் நிலை மிக மோசமடைந்துள்ளது, சிரியாவின் மன்னரை பதவி விலக கோரி நாடுமுழுவதும் போராட்டங்கள், ஆனால் இங்கு சமாதானத்தை வேண்டி இதுவரைக்கும் அறபு நாடுகள் கூட்டமைப்பு மட்டுமே பேசி வருகின்றது.

இவ்வளவு நாட்களாக தளராது கோஷமிடும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஒதுங்கிச் செல்ல விருப்பமில்லாத அரச தலைவர்கள் குறைந்தது ஏனைய தலைவர்களையாவது முன்னுதாரணமாக எடுத்துச் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

வலைகுடாவில் மட்டும் ஆரம்பித்த மக்கள் போராட்டம் மெதுமெதுவாக மேற்கத்தைய நாடுகளை சூழ்ந்துகொண்டது என்பது தெரிந்ததே,


அண்மையில் கிரேக் மற்றும் இத்தாலியிலும் அந்த நாட்டுத் தலைவர்களை பதவி விலகும்படி மக்கள் குரலை உயர்த்தினார்கள்.
அங்கு என்ன நடந்தது? பலரும் செய்தியை அறிந்திருப்பீர்கள்,
கிரேக்கில் அதன் பிரதமர் ஜோர்ஜ் பாபண்ட்ரியோ பதவி துறந்து வீடு சென்றார் (Greek Prime Minister George Papandreou and opposition leader Antonis Samaras have agreed to form a new coalition government that could save the country's European Union bailout plan.
President Karolos Papoulias organized the 90-minute meeting. His office later said talks will continue Monday to decide who will form the new Cabinet.

Sunday's meeting marked the first step toward breaking the political impasse that has hamstrung a country that is facing bankruptcy -- perhaps as soon as the end of the month.
For two days Papandreou and Samaras had wrangled through the media: the prime minister offering to step down once a coalition government was formed, and the opposition leader adamantly refusing to discuss a coalition until the prime minister resigned.)


இத்தாலியில் சில்வியோ பெர்லஸ்கோனி இராஜினாம செய்துகொண்டார். (Silvio Berlusconi has handed in his resignation as a crowd of several thousand people gathered outside the presidential palace to hurl abuse at Italy’s departing prime minister.
Screams of “buffoon”, “mafioso” and “shame” greeted Mr Berlusconi as his official car arrived at the Quirinale palace where Giorgio Napolitano, head of state, accepted his resignation on Saturday night and prepared to ask Mario Monti, professor of economics and former European commissioner, to form a caretaker government led bytechnocrats.)

இது போன்ற சம்பவங்களை எமன் நாட்டுத் தலைவர் பாடமாக எடுத்துச் செயற்படுவதில் எந்த தவறும் இல்லை.


இப்போது ’99% நாங்கள் தான்’ என்ற கோக்ஷத்துடனான மக்கள் புரட்சி சர்வதேசத்தை ஆட்டிப்போட்டிருக்கின்றது.

மக்கள் போராட்டம் ஜரோப்பிய, மேற்கத்தைய நாடுகளில் நாளுக்கு நாள் புதிய ரூபத்துடன் பாதைக்கு வந்தவண்ணம் உள்ளது,

பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களது கல்வி குறித்து ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்,

தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது தொழில் வாய்ப்புக் குறித்து ஆர்பாட்டம் செய்து வருகின்றார்கள்,

பொதுமக்கள் அவர்களது வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கைச் செலவு உயர்வு குறித்து ஆர்பாட்டங்கள். என்று தொடர்கின்றன அந்த பட்டியல்.
ஆனால் இந்த ஆர்பாட்டங்கள் வழமைக்கு மாற்றமானவை, வரலாற்றில் புதிதும் கூட.




அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம், மக்கள் பூந்தோட்டங்களிலும் பொது இடங்களிலும் கூட அவர்களது பிரச்சினையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது அது குறித்து கவனம் செலுத்துவதையும் அவர்களது பிரச்சினைகள் குறித்து சிந்திக்காமல், நடவடிக்கை எடுக்காமல் அந்த நாட்டின் ஜனாதிபதி அவுஸ்திரரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு ஏனைய நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவது அறிவீனமா?, அறியாமையா? நாகரிகமானதா? அநாகரீகமானதா? என்பதை வாசகர்களாகிய நீங்களே முடிவுவெடுத்துக்கொள்ளுங்கள்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சமூக அக்கறை நிறைந்த பதிவு தொடருங்கள்
வாழ்த்துக்கள்

Anonymous said...

thanks dear,
nice but should in English also to understand western nation.

Waseer Noor

VANJOOR said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாழ்த்துக்கள்.

தொடருங்கள் தொய்வின்றி.


வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

PUTHIYATHENRAL said...

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.