மாஸ்டராக வந்தவர்கள் மாட்டோம் என்று போன விவாத மேடை.


பைபிள் இறை வேதமா....? விவாதம் குறித்த ஒரு பார்வை 

(மாற்றங்கள் தேவையின் வாசக நண்பர் எழுதி கட்டுரையை இங்கு ஒரு புதிய பதிவாக உங்குக்கு வழங்குகின்றோம்.)

அஸ்ஸலாமு அலைக்கும்..

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.

மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான். 

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர் நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study ) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.

சாகிர் நாயகின் அமைப்பின் பிரிவுகளில் ஒன்றான IREF அமைப்பின் பொறுப்பாளர் ஒருவருடன் திரு. ஜெர்ரி தாமஸ் விவாதம் ஒன்றையும் நடத்தியுள்ளார். 

இந்த வகையில், தாங்கள் தான் சரியான கொள்கையை கொண்டுள்ளோம் என்றும், இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிஞராக அவர்கள் எண்ணி வைத்துள்ள சாகிர் நாயகிடமே சவால் விடுத்துள்ளோம் என்றும் இறுமாப்புடன் பிரசாரம் செய்து வந்துள்ளனர் இந்த கூட்டத்தினர்.  கேரளா மாநிலத்தில், அதிகமான திருசபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்கிற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம் , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில் , பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
http://img1.blogblog.com/img/blank.gif
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கில புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாத்தினர், அதற்கும் தயாரானார்கள்.


விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம் இந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்ககூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.
என்ன காரணதால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?

மனித கையாடல் பல, பைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?

இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?


என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.


ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தை கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்தது என்பதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!

சரி, பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.
எப்படி?
தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே, நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே, உங்கள் இறைவன் இவ்வளவு மட்டரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.

இவைகளுக்கு முறையான பதில்களை சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர் ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர் ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை ! பைபிள் இறை வேதம் தான் என்பதை பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.
மேலும், குர் ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.

இது உங்கள் சுயக்கருத்து, இதற்க்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, எந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர் ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்களையும் சொல்லபட்டிருக்கிறது என்றார். 

ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் சகோ. பிஜே.

இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்த கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பை திசை திருப்பி, சகோ, பிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு, இது தவறு என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தன, ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன, எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர்க்கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது, விவாதத்தை கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது.

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், உங்களை விட எல்லாம் மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்

சரி, மறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

உங்கள் சுய சிந்தனையை உபயோகித்து தான் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் ?, உங்களிடம் மறுப்பு இல்லை ! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறேர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டியிருக்கிரோமே, அந்த குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை, என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், சரி, பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே same side goal போட்டு, உங்களுக்கு பாயின்ட் எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.
என்ன வித்தியாசமாக சொல்கிறாரே என்று பார்த்தால், 

பைபிளில், எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் பூ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்த கொள்வார், என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர் வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜே, இதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.

இந்நேரம் வயிற்ரை கலக்கியிருக்கும் அவர்களுக்கு. ஆத்திரத்தில் எடுத்து குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டு காட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். சரி, இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்சனை இல்லை என்றனர் !

இதற்கு பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதை பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜே, இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களை தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீஎங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.

அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார். அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே, அந்த பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும், பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.

வெலெவெலெத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.. இறுதியாக பேசிய சகோ. பிஜே, தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.

பைபிளில் உள்ள ஆபாசங்கள் என்றும் முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிரீர்களே, குர் ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்ப்பதை போன்று அன்று நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை நாங்கள் தருவோம் என்று கூறி முடித்தார்.

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் 

நன்றி
நாஷித் அஹ்மத்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
முழு விவாதத்தையும் அழகிய முறையில் தொகுத்து
இருக்கிறார்கள் பகிர்வுக்கு நன்றி

VANJOOR said...

சொடுக்கி கேளுங்க‌ள்

>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

சொடுக்கி கேளுங்க‌ள்

2. >>>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
. <<<<<

.

Anonymous said...

பிரமிப்பூட்டும் நேரடி விவாதம்.
”திருக் குர்ஆன் இறைவேதமே!”
கிறிஸ்தவ அறிஞர் ஜர்ரி தாமஸ் மற்றும் அறிஞர் பீ ஜெய்னுலாப்தீன் ஆகியோர் பங்கேற்கும் பரபரப்பான விவாதம்.
விவாதம் தற்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பர்க்க.
http://www.tntj.net/Ho-live/jan-27.php மற்றும்
http://onlinepj.com/Ho-live/medium.php ஆகிய தளங்களில்...

நன்றி
அன்ஸார்

Anonymous said...

Alhamdulillah, Going smooth.