மாற்றங்களின் ஆரம்பம்...........change start with..........?


மாற்றங்களின் ஆரம்பம்...........?

-இது தனிமனித ஆளுமையை கட்டியெழுப்ப துணைநிற்கின்ற, அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் எல்லைக்குள் நின்று பேசுகின்ற ஒர் உளவியல் வார்ப்பு -

தற்குமே ஒரு தூண்டல் இருக்க வேண்டும், தூண்டல் இருந்தால் தான் துளங்கள் இருக்கும் என்பது இந்த பூலோகம் நடைமுறையில் கற்றுக்கொண்ட, அனுபவ ரீதியாக பெற்றுகொண்ட பாடமாகும்,

எம்மை படைத்த, படைத்த அவனை தேடிப் படிக்கச் சொல்லுகின்ற அவனே இதனை எமக்கு உறுதிப்படுத்திச் சொல்லுகின்றான்.

அவனது கடைசி வேத நூல் இவ்வாறு வர்ணிக்கின்றது,
தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை. (அல் குர்ஆன் 13 : 11)

இந்த வேத வாக்கியங்களை படித்து ஏற்றுக்கொள்ளாத எந்த மனிதனும் தனது வாழ்க்கையில் தான் சந்தித்த சந்தர்ப்பங்கள் இந்த வேத வாக்கியத்தை நம்பும்படி வற்புறுத்தும் என்பதில் படித்தவர்களுக்கும்  நடுநிலையாக நின்று சிந்திக்கின்றவர்களுக்கும் இடையில் எந்த சந்தேகத்தையும் உண்டுபண்ணாது.

மாற்றங்கள் தேவை என்பதைப் பற்றி படித்தவர்களும் பேசுகிறார்கள், படிக்காத துறைசார் அனுபவசாலிகளும் சொல்லுகிறார்கள்.
ஆனால் அதனை 100 வீதம் ஏற்கின்ற மக்கள் குறைவுதான்,

சொல்லுகின்றவர்களில் 100 வீதமானவர்கள் இதனை நன்புகின்றார்கள் என்பதில் கூட சந்தேகம் இருக்கின்றது.

மாற்றங்கள் என்பது விஞ்ஞானியாக நின்று புதிய விடயத்தை கண்டுபிடிப்பது தான் மாற்றங்கள் என்று ஏற்று தங்களுக்கும் மாற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் இல்லை போன்று இது தொடர்பாக சிந்திக்கக் கூட தனது மூளையை ஒரு விநாடி பயன்படுத்த தயாரில்லாத பலரும் இருக்கின்றார்கள்.

ஆனால்…

எல்லோறாலும் மாற்றங்கள் பற்றி சிந்திக்கலாம், எல்லா தனிமனிதர்களாலும் மாற்றங்களை இப்பாரில் விதைக்கலாம்.

ஒரு பச்சைப் புல்லை தேடிக் கூட கண்டுபிக்க முடியாத அறபு பாலைவனங்களில் எங்குமே பச்சை (green desert) மயத்தை எப்படி பார்க்க முடிகின்றது? இது கூட மாற்றங்கள் தான்.

நான் வாழும் ஊரில் அல்லது நீங்கள் வாழும் ஊரில் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையல்ல இப்போது இருப்பது, அப்படியென்றால் எப்படி இத்தனை புதுமைகளை, மாற்றங்களை பார்க்க முடிகின்றது?

ஒன்று இல்லாத போது தேவை என்று தேடிப் பயணித்த அதில் தேடிப் பெற்றவைகள் தான், ஆனால் பெற்றதில் கண்ட குறைகளை கண்டு திருத்தியது தான் நாம் இன்று பார்க்கின்ற புதுவித அறிவியல் வளர்ச்சிகம்.

நடக்க முயற்சிக்கின்ற குழந்தைகளில் நடக்கும் நாங்கள் மாற்றங்களுக்காக படித்தரங்களை படிக்கலாம்.

எட்டாத பொருளை எட்டும் வரை தாவித்தாவிப் பிடிக்க முனைகின்ற குழந்தைகளில் மாற்றங்களுக்கான பாடங்களை கற்கலாம்.


ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெருப்பு  வருவதற்கான காரணங்களில் முக்கியமானது எது என்பதை தேடிப் பார்த்திருக்கின்றீர்களா?

ஒரு மாணவன் தனது கல்லூரி வாழ்க்கையில் வெருப்புற்று திசை மாறிச் செல்ல காரணம் கண்டிறரிந்ததுண்டா?

தொழில்வாய்ப்பில் விரக்தியடைந்து தலைவீங்கித் தடுமாறும் தனிமனிதர்களின் சம்பவங்கள் கேள்விப்பட்டதுண்டா?

கோழி இறைச்சியில் 16 வகையான உணவுகள் சமைக்க கற்றுக்கொண்ட வளர்ந்த இவ்வுலகில் நம் வீடுகளில் ஒரே ஒரு உணவு வகை மட்டும் இன்றுவரையும் கிடைப்பதற்கான காரணத்தை பற்றி சிந்தித்ததுண்டா?

எல்லாமே மாற்றங்கள் தான், எல்லாமே மாற்றங்கள் பற்றி சிந்திக்கின்ற போது தான், எல்லாமே மாற்றங்களுக்காக முயற்சிக்கின்ற போதுதான்.

ஒரு தனிமனிதனின் காலை முதல் மாலை வரையிலான அவன் கடந்துசெல்லுகின்ற விநாடிகளில் அவன் எப்படியானவன்? என்ன செய்கின்றான்? இஸ்லாம் சொல்லுவதற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்பதை நடைமுறையுடன் ஒப்பீட்டுப் பார்ப்போம்.

காலையில் எழுந்து பல்துலக்கும் முன் கட்டிலில் இருந்தவாரே சூடான தேநீர் (bed coffee), கலக்கலான சினிமா பாடல்கள்,

பல்துலக்கியதும் ஒரு சிகரெட், தனது காதலிக்கு போன் பண்ணி ஹலோ சொல்லுவது, கம்பியூட்டர் முன் உட்கார்ந்து facebook, twitter, mail போன்ற எல்லா கணக்குகளையும் திறந்து சும்மா ஒரு சுற்றுப் பயணம்,

திரைச் செய்திகளைச் சொல்லுகின்ற இணையத்தளங்களுக்குச் சென்று இன்றைய செய்திகளை சுடச் சுடப் படித்துக் கொள்லல், அதிலுள்ள ஏதாவது கொலைவெறியனின் புதுப் பாடல் அல்லது படத்தை தனது facebook, twitter, mail பக்கங்கள் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளல்.

இப்படியாக நகரும் மணிக்கூட்டு மனிதர்களுடன் எப்படி மாற்றங்கள் பற்றிப் பேசுவது?
ஆனாலும் மாற்றங்கள் சாத்தியமானது என்பதில் அதீர நம்பிக்கை எமக்குண்டு.
வரலாறுகளின் பயணத்தில் மாற்றங்கள் தேடி பயணித்த பல மனிதர்களின் மைல்கற்களை பார்க்க முடிகிறது.

இஸ்லாம் மாற்றங்களை வற்புறுத்துகின்றது,

முஸ்லீம் சமூகமும் அவர்கள் வாழும் நிலங்களும் சூறையாடப்படும் இந்த விநாடியில் அவர்களை பாதுகாப்பதற்கு எமது நடத்தைகளில் சிந்தனைகளில் எழுத்துகளில் பேச்சுக்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அடிப்படையும் ஆரம்பத் தேவையுமாகும்.

எப்படி மாற்றங்கள் செய்ய முடியும்?

ஒவ்வொரு தனிமனிதர்களும் தான் யார்?
என்ன செய்கிறேன்?
எதற்கு படைக்கப் பட்டிருக்கின்றேன் (purpose of creation)?
தனது தனிப்பட்ட பொருப்புக்கள் என்ன (responsibilities)?
நான் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
என்னை சுற்றியுள்ள மாற்றுச் சகோதரர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பில் இருக்கின்றார்கள்?
போன்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டால் நான் ஒரு பகுதி மாறிவிட்டேன் என்று பொருள்.
மீதிப் பகுதிதான் அடுத்து என்ன செய்யப் போகின்றேன் என்பதை கவனத்தில் கொள்வதாய் அமையும்.

இப்போது,
ஒவ்வொரு தனிமனிதர்களும் நாளுக்கு நாள் தனது முன்னேற்றம் குறித்து சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்.

மறைந்த நேற்றைய பொழுதையும் மலர்கின்ற இன்றைய பொழுதையும் கணக்கில்கொள்ள 
வேண்டும்.

மறைந்த நேற்றைய பொழுதிலிருந்து மலருகின்ற இன்றைய பொழுதை முன்னேற்றகரமானதாக பார்க்க வேண்டும்.

தன்னுல் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அல்லது ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை அளவிட ஒரு நாள், ஒரு மாதம், அல்லது ஒரு வருடம் என்று தேவைக்கேற்றல் போல் வரையறையை நிர்ணித்துக்கொள்ளமுடியும்.

இப்போது எதில் மாற்றம் என்று சிந்திப்போம் வாருங்கள்,

அடிப்படையாக மனித வாழ்வியல் வளர்ச்சிக்கும் அடைப்படையாக சில முக்கிய நடைமுறை கோட்பாடுகளை உளவியல்சார், ஆன்மீகசார் வித்தவான்கள் முன்மொழியும் அம்சங்களுடன் சார்ந்துநின்று பட்டியலிடலாம்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் கேட்பாடு (Onenines of God), சிறந்த ஒழுக்க (best disciplinary) விழுமியங்களை பின்பற்றும் போக்கு, நாளுக்கு நாள் புதியவைகளை தேடிக்கற்கும் (keep on learning new things) மாணவிய சிந்தனை, வாழும் சூழலுக்கேற்றால் போல் மொழியறிவை விரித்திசெய்யும் முயற்சி (developing multi language skill),  நல்ல பொருளீட்டல் கொள்கை (acceptable economic concept), தூய்மையான அரசியல் ஈடுபாடு (pure political activities), தாழ்மையான அன்றாட நடத்தை என்று சமூகவியல் தேவைகளுக்கு உதவும் அனைத்தையும் இப்பட்டியலில் உள்ளடக்கலாம்.

இவைகளுடன் இணைந்தால் போல், தேவைக்கேற்றால் போல் நடத்தைகளை, அனுகுமுறைகளை புதுப்பித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

எல்லா மனித நடத்தைகளிலும் எல்லாத் துறைகளிலும் புதுவித வளர்ச்சி இன்று பெறபெற்றுவிட்டன. ஆனால் அவைகளில் எது இஸ்லாமிய வரம்புக்குள் உற்பட்டவை என்பதை அதன் மூலாதாரங்களுடன் உரசிப் பார்த்து நமது வாழ்க்கைப் பயணத்துடன் இணைத்துப் பயணிப்போம்.

நமது மொபைல் போனுக்கு நாம் தேர்வு செய்து வைத்திருக்கும் incoming call ring ல் கூட மாற்றத்தைச் செய்ய வேண்டும்.

அதுவும் மாற்றங்களை வேண்டி நிற்கின்றது. காரணம் நம் நண்பர்களின் அதிகமான மொபைல் போன்கள் இசைத் துறையை இலவசமாக விளம்பரம் செய்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே.

எங்களது போன் memory / memory chip ல் நாம் சேமித்து வைத்திருக்கும் இசை, அதை நிமிடத்திற்கு நிமிடம் செவிசாய்த்து க்ஷைத்தானின் சொந்தக்காரர்களாக மாறும் போக்கை மாற்றுவதும் மாற்றங்களின் ஆரம்பம்தான்.

அடிப்படையில் சிறிய மாற்றங்கள் சில வாரங்கள் கடக்கும் போது பாரிய தனிமனித புரச்சியையும் சமூக மேம்பாட்டையும் உண்டுபண்ணும்.

இந்த நிகழ்வுகள் வரலாற்றில் நிறையவே காணக்கிடைக்கின்றன.

வாழ்க்கையில் நல்லவைகள் அனைத்தும் நன்மையை ஈட்டித்தரும்.
கெட்டவைகள் அனைத்தும் தீமைகளை ஈட்டித்தரும், அவைகள் சமூக அழிவுக்கு வித்திடும்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

யதார்த்தமான கருத்துக்கள்....