உடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித் (Is it gift for Muslims who support the Srilankan Government in Geneva Summit for Human Rights and Democracy?)


உடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்


Is it gift for Muslims who support the Srilankan Government in Geneva Summit for Human Rights and Democracy?


ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம் தேசங்கள் இலங்கைக்க்கு ஆதரவாக வாக்களித்தததிற்கு கிடைத்த பரிசா இது?

இந்திய இந்துத்துவ வாதிகளின் மதவாத மிதமிஞ்சிய போக்கு முஸ்லிம்களின் பழைமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் எனும் ஒரு இறை இல்லம் தகர்கப்பட்டது.

அந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக்கூட நாம் இன்னும் மறக்க வில்லை.

அதற்கிடையில் மதம் பேசும் பெளத்த பிக்குகளின் இந்த பள்ளி உடைப்பு இன்று நடந்தேறி இருக்கின்றது.

2000க்கும் அதிகமான பிக்குகள் அணிதிரண்டு இந்த பள்ளி உடைப்பை நடத்தி இருக்கின்றார்கள்.

அண்மையில் நுவரெலியாவில் திறந்துவைக்கப்பட்ட பள்ளிவாயல் ஒன்றுக்கு நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ சென்று பங்கேற்றதும் பழைய செய்தியல்ல.

பெளத்த மததின் புனித பூமி என்பதால் இந்த பள்ளி இடிக்கப்பட்டது என்றால்,
ஏன் இன்று மட்டும் இந்த காரணம்?

இது புனித பூனி என்பதற்கு என்ன ஆதாரம்?

இந்த எல்லைக்குள் மதுக்கடைகள் இயங்க முடியுமா? இல்லையென்றால் அவைகளை எப்போது அகற்றுவீர்கள்?

இங்கு இயங்கும் சுற்றுலா விடுதிகளில் மதுபானம் பரிமாறப்படுகின்றதுதானே, இது பரவாயில்லையா?

புனித பூமியில் சர்வதேச விளையாட்டு மைதானம் நிர்ணயிக்கப்பட்டு, புனித பூமி கேளிக்கூத்தாக்கப்படுவது பரவாயில்லையா?

பிறமதத்தவர்கள் பிரவேசிக்க முடியுமா? முடியாது என்றால் வெளிநாட்டு சுற்றுலாதாரர்களின் அனுமதி நிறுத்தப்படுமா?

பெளத்த மதத்தை போதிக்கும் பிக்குகள் இவ்வாறு நடந்துகொள்ளுவதற்கு தங்களது வேத நூலில் அனுமதி இருக்கின்றதா?

இந்த படையெடுப்பில் இடம்பெற்ற எவருக்கும் அல்லது தலைமைதாங்கிய மத குருக்களுக்கு இந்த நாட்டில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பது பற்றி தெரியாதா?

ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம் தேசங்கள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு கிடைத்த பரிசா இது?

இங்கு வாழும் முஸ்லிம்கள் இந்த தேசத்தில் ஒரு துண்டை கேட்டு ஆயுதம் தூக்கினார்களா?
அதற்காக சர்வதேச நாடுகளில் முறையிட்டார்களா?

இலங்கைக்கு நிதியுவதி வழங்கிவரும் இஸ்லாமிய நாடுகளின் நிதி மற்றும் ஏனைய உதவிகள் இன்றுடன் நிருத்தப்படுமா?

சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக தலையைப் பிய்த்துக்கொள்ளும் அமெரிக்கா இதில் தலையிடுமா?

இலங்கையின் மனித உரிமை மீரல் தொடர்பாக கவலைப்படுகின்ற இந்தியா வாய் திறக்குமா?

காத்திறுக்கின்றோம் உங்கள் நியாயங்களுக்கு……….

ஜனாதிபதியினதும் நீதித்துறையினரதும் நேரடி நடவடிக்கைக்கு காத்திருக்கின்றோம்.

இனியும் நடக்காமல் இருக்கட்டும்.

From BBC News:
Sri Lanka mosque protestBuddhist monks were also involved in the protest

Sri Lankan mosque forced to abandon prayers by protesters

A mosque in Sri Lanka has been forced to abandon Friday prayers amid community tensions in the central town of Dambulla.

From adaderana News:
Thousands of Buddhist monks and lay supporters have protested the construction of a mosque and a Hindu temple built within the area designated as a Buddhist sacred zone in Dambulla.

The protestors, shouted slogans and waved the Buddhist flag and marched from the Dambulla town towards the mosque located in the Kandalama Junction, during Friday prayers.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Roomil said...

இதை விளங்ககூடியவர்களா இந்தவேலையை செய்தவர்கள் வீடு எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்கும் கூட்டம் இலங்கையன் நிலைமை உலகமெல்லாம் பத்தி எரியும் போது இங்கு பள்ளி உடைக்க வெளிக்கிட்ட இந்த தேசாபிமானிகள் நாளை சர்வதேச அதரவுக்காக கலைபிடிப்பார்கள் அல்லது மிரட்டுவார்கள் எமது தலைவர்களும்? போட்டி போட்டுக்கொண்டு தனியாக முந்திக்கொண்டு செல்வர்கள் படைதவன் தான் காக்க வேண்டும் மாவனல்லையில் காடைத்தனம் செய்தவர்களுக்கு என்னாச்சு காத்திருப்போம்;

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

வேதனை தரும் கட்டுரையின் உண்மை.தங்கள் மதம் அன்பை போதிபதாக சொல்லும் இந்த துறவிகளுக்கு இது தான் அன்பை போதிக்கும் வழியா..இது இவர்களுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள காழ்புணர்ச்சியை தான் காட்டுகின்றது.

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....