மொட்டுக்கள் மலர - part 11


விட்டதிலிருந்து தொடர்கிறது....



Ø   வெற்றிக்கான இரகசியங்களை கற்றுக் கொடுத்தல் (Teach the Secrets of Success).
எமது பிள்ளைக்ளுக்கு அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெருவதற்கான வழிகாட்டல்களை காண்பிக்க வேண்டும்,

உண்மையில் நல்ல வழிகாட்டல்களை எமது பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் போது நாமும் அந்த வழிகாட்டல்களின் இரகசிகங்களை பயன்படுத்தி எமது குடும்ப வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்.

உலகில் எதோ ஒரு துறையில் வெற்றிபெற்ற, வெற்றியடைந்து கொண்டிருக்கின்றவர்களை கவனித்தால் இரண்டு இரகசியங்களை கற்றுக் கொள்ள முடியும்,

முதலாவது இரகசியம்: எல்லா வெற்றியாsர்களும் உண்மையில் அவர்களுக்கு எது தேவை என்பதை அறிந்திருக்கின்றார்கள் (All successful people know exactly what they want).

இரண்டாவது இரகசியம்: எல்லா வெற்றியாளர்களும் அவர்களின் இலட்சியங்களை அடையும் வரை இடைவிடாது முயற்சிப்பார்கள், (All successful people focus on what they want- constancy till they achieve it.)

இந்த இரண்டு இரகசியங்களையும்  இன்று உலகில் தொடராக வெற்றிபெற்று வீர் நடைபோடுகின்ற எல்லா மாணவர்களும், தொழில் அதிபர்களும் விளையாட்டு வீரர்களும் பின்பற்றுகின்றார்கள்.
அதனால் தான் அவர்களது வாழ்க்கையில் அவர்கள் அடைய வேண்டும் என்று நினைக்கின்ற கனவுகளை அடைய முடிகின்றது.

அதே நேரம் யார் வாழ்க்கையில் அடிக்கடி தோல்வியடைகின்றார்களோ அவர்களுக்கு உண்மையில் எது தேவை என்பதும் எதை நோக்கி முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதும் தெhpயாமலே நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது அவர்களின் முழு கனவுகளையும் தோல்வியடையச் செய்கின்றது.

எமது பிள்ளைகள் அல்லது நாம் எமது கல்வியில் அல்லது தொழிலில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த இரண்டு இரகசியங்களையும் நடைமுறைப்படுத்திப் பார்ப்போம், வெற்றி எம்பக்கமே. இன்ஷா அல்லாஹ்.


இந்த இரண்டு இரகசியங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலேசாக முக்கியமான மூன்று விடயங்களை பின்பற்ற வேண்டியிருக்கின்றது.

    I.     இலட்சிய அட்டயை பயன்படுத்தல் (Using the Goal Card) இது எமக்கு எது தேவை என்பதை தீர்மானிக்க, Wதிப்படுத்த உதவுகின்றது.

   II.        அதற்காக திட்டங்களை படிப்படியாக தொடர்தல் (Following Step by Step Action planner) இது தேவையான இலட்சியத்தின் பால் படிப்படியான காரியங்களை தொடர உதவுகின்றது.

  III.     தினந்தோWம் அதனை கடைப்பிடித்தல் (Maintain the Everyday power Actions) இது எமது இலட்சியத்தை நோக்கி தினந்தோWம் செயலாற்ற உதவுகின்றது.

இந்த மூன்று விடயங்களையும் மிகமுக்கியமான பயிற்சியாக நினைத்து தினந்தோWம் செய்து வரும் போது எமது வாழ்க்கையில் எம்மால் முயற்சிப்பதை அடைய முடியும்.

இதன் போது எம்மால் எமது முழுமையான திறமையையும் தகுதியையும் பயன்படுத்துகின்ற நேரம் எமக்கு கிடைக்கும்.
அதனால் எமது கல்வியில் தொழில் முயற்சியில் அல்லது எது தேவையோ அதில் ஒspமயமான வளர்ச்சியை கண்டு கொள்ள முடியும்.

1.   இலட்சிய அட்டயை பயன்படுத்தல் (Using the Goal Card)
எமது இலட்சிய அட்டை பயன்பாட்டுமுறை எமது தேவையை தீர்மானிப்பதற்குரிய சாதரண, இலேசான முறையாகும். முதலில் எது தேவையோ அதை  அதில் குறித்துக் கொள்ளுதல்,

எனது இலட்சிய அட்டை

நான் ஒரு வைத்தியராக வேண்டும்


திகதி: ஜனவரி, 01,2009     கையொப்பம் அப்ஷல்

ஒரு மாணவன் தனது படிப்புக்கு அப்பால் ஏன் ஒரு தொழிலைப் பற்றி இலட்சியப்படுத்த வேண்டும் என்றால், இவ்வாரு இலட்சியம் வைத்து செயற்படும் போது தான் மாணவர்களின் அடிப்படை கேள்விகளுக்குhpய விடைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக,   
ஏன் நான் படிக்க வேண்டும்?அது எமது வாழ்க்கைக்கு தேவையானதை குறித்துக் காட்டுகின்றது. இஸ்லாம் ஏவும் ஒரு முக்கிய கடமையை நிலைநாட்ட உதவுகின்றது.   
                                  
அது எமது வாழ்க்கையில் பொருளாதார சுதந்திரத்தை தருவதுடன் எமது சமூகத்தில் ஏழ்மையை போக்க உதவுகின்றது.                                           அத்துடன் தனிமனித, குடும்ப வாழ்வை சிறப்பானதாக, பயனுள்ளதாக கடத்த உதவும்.
அதனால் எமது தொழில் வாய்ப்பு தொடர்பான இலட்சியத்தை முதலில் கையிலெடுத்துக் கொண்டு அதற்காக முயற்சித்தால் அடுத்தவைகள் அனைத்தும் தானாகவே வரும், இன்ஷா அல்லாஹ்.

இதுவரைக்கும் யார் எது தேவை? என்று தீர்மானிக்க வில்லையோ அவர்கள் இப்போதே அதனை தீர்மானிப்பதற்கு தொடங்கலாம்.

தீர்மானிக்கின்ற எமது இலட்சியத்தை நான் மேலே காட்டிய மாதிரி வடிவிலான இலட்சிய அட்iடயை பயன்படுத்தி அதனை குறித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கலாம்.

முதல் கட்டத்தை தொடங்கியவர்கள் வாருங்கள் இரண்டாவது கட்டத்தைத் தொடருவோம்.

2.   அதற்காக திட்டங்களை படிப்படியாக தொடர்தல் (Following Step by Step Action planner)

தீர்மானித்திருக்கின்ற இலட்சியத்தை அடைவதற்கு படிப்படியான வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம்.

முதல் அட்டையில் எமது எதிர்கால இலட்சியத்தை தீர்மானித்து எழுதியிருக்கின்றோம், இப்போது எமக்குள் இருக்கும் மிகப் பெரும் கேள்வி? எப்படி அந்த இலட்சியத்தை அடைய முடியும்?
இந்த கேள்விக்கு இரண்டாவது படிமுறை விடையளிக்கின்றது,
எனது இலட்சியத்தை அடைவதற்கு என்ன என்ன? விடயங்களை நான் செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும், அதற்கான பதில்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளல்,

ஒவ்வொரு கேள்வியாக கேட்டு கேட்டு எழுதிக் கொள்ளல்,                 இப்போது எழுதியதை வாசித்துப் பார்த்து அதன் படி செயற்படுதல்,

உதாரணமாக,
எனது இலட்சியத்தை அடைவதற்கான படிப்படியான செயற்திட்டங்கள்

இன்று
ß         
சாதாரண தரப்  பரீட்சையில் சித்தியடைதல்
ß         
உயர்தர பாடத்திட்டத்தில் வைத்தியத்துறைக்கான பாடங்களை தீர்மானித்தல்
ß         
ஒப்படைகளை திறமையாக செய்தல்
ß                                 
மாதிரி பரீட்சைத்தால்களை செய்து நோக்குதல்
ß         
      உயர்தர பரிட்சையில் திறமைச் சித்திபெறல்
ß         
பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறல்
ß         
வைத்தியராவதற்கான பாடங்களை தேர்ந்தெடுத்தல்
ß         
அல்லாஹ்விடத்தில் தினந்தோறும் அதற்காக பிராu;த்தித்தல்
ß         
முதல் இரண்டு வருடங்கள்
ß         
மூன்றாவது வருடத்தில் செயற்பாடுகளுடன் படிப்பை தொடர்தல்
ß         
கடைசி வருடத்தை வெற்றிகரமாக முடித்து வெளியேறல்
ß         
தொழில் புரிவதற்கு தேவையான வைத்தியசாலையை தேடுதல்
ß         
விண்ணப்பித்தல்
ß         
நேர்முகப்பரீட்சைக்காக தயாராதல்
ß         
நல்ல முறையில் நேர்முகப்பரிட்சையில் பங்குபற்றுதல்
ß         
எனது இலட்சியம்வைத்தியராக வேண்டும்


இந்த உதாரணத்தில் குறித்த மாணவனது இலட்சியம் ஒரு வைத்தியராக வேண்டியதாகும்.

மிகுதி தொடரும் 12வது பகுதியாக……..


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பதிவுகள் நன்றாக பயன்தரதக்கதாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....