சுதந்திரதினக் கொண்டாட்டம் தேவைதானா.....?

                                                     
Celebration of Independent /National day
விலைவாசி தலைக்கடித்து, அன்றாட வாழ்வு திண்டாட்டமாகும் போது எதற்கு சுதந்திரதின கொண்டாட்டங்கள்?

வாழும் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதபோது ஏன் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் …… ?
No security for life, then why Independence Day celebration……..?

பின்பற்றும் கொள்கையை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காத போது என்ன கொண்டாட்டம்? 
no freedom to follow the own culture and civilization, then?

விரும்பிய வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத போது ஏன் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள்?
No freedom to continue my Business, then why should celebrate Independence Day……?

இதற்கு நம்ம உலமாக்களின் வாழ்த்துச்செய்திகள் வேறு……..

சுதந்திரதின கொண்டாட்டங்களின் தேவை, யதார்த்தம் என்ன? என்று தெரியாமலே எல்லா நாடுகளிலும் கோடிச்செலவில் சுதந்திரதின நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன……..

இலங்கை தேசம் 66 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்களின் கைப்பிடியிலிருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது என்பதை வருடாவருடம் ஞாபகமூட்டுவதற்காக இந்த கொண்டாட்டங்கள் ஒழுங்குசெய்யப்படுகின்றன.

இலங்கை எனும் அழகிய பூமியில் 66வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுமுகமாக அனைவரும் வாழ்த்துச்செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அதற்கான விழாக்களை மேடையேற்ற பல தயாரிப்புக்கள். ஆனால் உண்மையில் சுதந்திரதினம் என்று ஒன்றை ஆடம்பரமாக, பகிரங்கமானளவு முன்னெடுப்பதற்குரிய சூழல் இன்று இலங்கையில் இல்லை என்பதை அண்மைக்காலச் செய்திகள் சொல்லித்தருகின்றன.

இலங்கையில் சுதந்திரதினத்தை கொண்டாடக் கூடிய சூழல் இருக்கிறதா? என்று சிந்திக்க வேண்டும்.

தமிழீல விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் யுத்தம் மும்முரமாக நடந்தேரிக்கொண்டிருந்த வருடங்களில் கூட சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டன, ஆனால் தமிழர்கள் தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதற்காக யுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கெதிரான பெளத்தவாத சிந்தனைகளும் நடத்தைகளும் முன்னெடுக்கப்பட்டு பள்ளிகள், வியாபார ஸ்தளங்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களும் குறிவைக்கப்படும் இந்த வருடத்தில் கூட  சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அண்மையில் காலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கூறிய கருத்து ஞாபகத்திற்கு வருகிறது: ’மிருகங்களுக்கு இருக்கும் நீதி கூட இலங்கையில் மனிதர்களுக்கு இல்லை’ என்பது.

இஸ்ரேலிய அரசு சுதந்திரதினம் கொண்டாடுகிறது, அந்த மண்ணுக்கு சொந்தக்கார பலஸ்தீன மக்கள் அகதிகளாக, அநாதைகளாக செத்துமடியும்போது.......

அமெரிக்கா சுதந்திரதினம் கொண்டாடுகிறது, அந்நட்டு இராணுவம் வெளிநாட்டு யுத்தகளங்களில் பினமாகும்போது.......

சிந்தித்துச்செயற்படுவோம்……..மாற்றங்கள் செய்வோம்.

No comments: