இலங்கை முஸ்லிம்களுக்கான ரனிலின் குரலும் நிமலின் உதையலும்…….!!
டந்த புதன் அன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் முஸ்லிம்களின் இன்றைய நிலையை உண்ரந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க அவர்களின் உரைக்கு அடுத்த நாள் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் பதில் உலகையே குருடாக்கியுள்ளது.நேற்றுப்பிறந்த பிள்ளை, வாயில் கையை வைத்தால் கூட கடிக்கத்தெரியாதது போல,
தமிழீல விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் நாட்டில் முஸ்லிகள் குறிவைக்கப்பட்டு, நடந்துமுடிந்த, நடாத்தப்படும் நாடகங்களை எப்படி மூடி மறைக்க முடிந்தது இந்த அமைச்சரால்?

பர்மா நாட்டு  பிக்குகளின் முன்மாதிரியா? அல்லது ஆளும் அரசாங்கத்தின் பின்வாசல் ஆலோசனையா இந்த இலங்கை பிக்குகளுக்கு பிடித்திருக்கும் வியாதிக்குக் காரணம்?
முஸ்லிம் பள்ளிகளையும், தொழில் நிருவங்கள் என்று தொடரும் இவர்களின் தாக்குதல்கள்.

இலங்கை வாழும் முஸ்லிம்களோ அல்லது உலக முஸ்லிம்களோ எப்போதும் இலங்கையை காட்டிக்கொடுத்ததோ அல்லது கூட்டிக்கொடுத்ததோ இல்லை. இதனை கடந்த யுத்தத்தின் போதும் அதற்கு பின்னர் ஆளும் ஜனாதிபதி சர்வதேச சபையில் குற்றவாளியாக நின்றபோதும் சரி தெரிந்துகொள்ள முடிந்தது.

பெளத்த பிக்குகள் முன்மாதிரியாக வாழவேண்டியர்கள், புத்தருடைய வாழ்க்கையில் இப்படியொறு சிங்கள அல்லது பெளத்த இனவாதத்தைப் பார்க்கமுடியவில்லை. அப்படியென்றால் பெளத்த பிக்குகள் புத்தருடைய உபதேசங்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு யாருக்கோ கைகூலிகளாக செயற்படுகின்றார்கள் என்றுதான் சிந்திக்கத் தோன்றுகிறது.

பள்ளிகள் உடைக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினரால் விசாரிக்கப்பட்டு, அரச பிரமுகர்களால் ஊர்ஜீதப்படுத்தப்பட்டு, உலக மீடியாக்களின் பதிவேற்றில் உள்வாங்கப்பட்ட பின்பும் இந்த அமைச்சரால் இப்படி மறுக்கமுடியுமானால் ………?

அவர் பேச்சு முஸ்லிம் அமைச்சர்களை அல்லது ஒட்டுமொத்த முஸ்லிகளையும் தன் காலால் உதைத்துவிடுவது போன்றாகிவிட்டது.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

இப்னு அப்துல் ரஜாக் said...

We lost babri masjid in India and still Hindu groups are targeting Muslim now in Sri Lanka and rest of the world.

We should united first

May Allah give us a victory.