‘ஆட்சி மாற்றமல்ல காட்சி மாற்றமே இப்போதைய தேவை’ Need a good governance not a new government




ஆட்சி மாற்றமல்ல
காட்சி மாற்றமே இப்போதைய தேவை

By: இஸ்ஸதீன் றிழ்வான்

போதிய அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு மைத்தியில் இனவாதம், குடும்பவாதம், ஊழல் என்று தொடர்ந்த சால்வை அரசியலை அஸ்தமிக்கச் செய்து நல்லாட்சி என்ற ‘மைத்திரி‍ – ரனில்’ ஆட்சியை தேர்ந்தெடுத்தோம்.

3 வருட காலப்பகுதிக்குள் மீண்டும் மாற்று அரசை தேடும் நிலை, மனோநிலை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசைப்போன்று இங்கும் இனவாதம் தொடர்கிறது, திட்டமிட்ட அபிவிருத்தி எதுவும் கண்ணுக்கெட்டிய‌ தூரத்தில் காணவில்லை, தாஜுதீன் கொலை வழக்கு, ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குதல், யாப்பு மாற்றம் என்ற கோக்ஷங்களே தொடர்கின்ற கடந்த 3 வருடங்களாக முடிவின்றி.

மாற்றங்கள் ஏதுவும்மற்ற போகப்போக மோசமடையுமோ என்று சிந்திக்கின்ற, அச்சம்கொள்கின்ற சமிக்ஞைகளே இந்த அரசாங்காத்தில் தென்படுகிறது.

வாக்களிப்பட்ட அல்லது எதிர்பார்க்கப்பட்ட சிறுபான்மைச் சமூகத்திற்கான பாகுகாப்பு வேளைத்திட்டங்கள் எதுவையும் இன்னும் காணவில்லை, அதற்கான அடையாளங்களும் இன்னும் தென்படவில்லை.

இந்த நேரத்தில் 2வது ஒரு அரசாங்க மாற்றத்தை பற்றி சிந்திப்பதை விட ஆளுகின்ற அரசின் நடத்தைகளை காட்சிகளை மாற்றும் தேவை, கடப்பாடு தோன்றியுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிப்பது, கருத்துச்சொல்வது தண்டனைக்குறிய குற்றம் என்று பலர் பயந்து நல்ல பல ஆலோசனைகளை மறைத்துவைத்து வருகின்றனர், உண்மையில் ஜனநாயக நாட்டில் முறையான விமர்சனங்களை மேற்கொள்ள அரசியல் யாப்பு போதிய அவகாசம் தந்திருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.
ஏன் விலைவாசி தலைக்கு மேல் குமுறுகின்றது?
பெற்றோல், டீசல், கோதுமையின் விலை உயர்த்தப்படுகின்றது என்று பத்திரிகையில் செய்தி பிரசுரமாகிறது, ஆனால் இந்த குறித்த பொருட்களில் சிறிய அளவிலான விலையேற்றம் வாழ்க்கைக்குத்தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பாரியளவில் தாக்கம்செய்து வருகின்றது. பஸ் கட்டணங்கள் மீது எல்லையற்ற விலையேற்றம், அதை சாட்டாக வைத்து மீதிக் காசுகளைக் கூட சரியாக பெற முடியாத பஸ் பணியாளர்களின் செயல்,
கடைகளில் விற்கப்படுகின்ற ஒவ்வொரு பொருட்கள் மீதும் விலையுயர்த்தப்பட்டிருக்கின்றது, அரச, அரச சாரா அலுவலகங்களில் செய்யப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்திருக்கின்ற. எது உத்தியோகபூர்வமான விலையேற்றம்?
அங்கீகரிக்கப்பட்ட விலையுயர்வு எவ்வளவு?
தேவையற்ற, முறையற்ற விலையுயர்வு குறித்து எங்கு முறையிடுவது? இது குறித்து பொது மக்கள் அறிந்துவைத்திருக்கின்றார்களா?
இது குறித்து யார் கவனம் செலுத்த வேண்டும்?

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தங்களுக்கு தனித் தாயகம் வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார்கள், அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, இப்போது அவர்கள் வாழும் பிரதேசத்தில் கோவில்களுக்கு பதிலாக பெளத்த தூபிகள் கட்டப்படுவதாக பத்திரிகை மற்றும் இணையத்தளச் செய்திகள் வெளிவந்தமுள்ளன, அவர்கள் வாழும் கிராமங்களில் பாலியல் வல்லுரவுகள் அதிகரித்துவருவதாக சொல்லப்படுகின்றன, இது குறித்து யார் பதில் சொல்லுவது? அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு நிலையங்கள் இயங்குவதாக அங்குள்ள வட்டாரங்கள் கவலைதெரிவிக்கின்றன. அப்படியென்றால் நம் நாடு எப்படி சுதந்திர, பாதுகாப்புள்ள நாடாக இருக்க முடியும்?

யுத்தத்தின் பின் அனைத்தின மக்களும் சுதந்திரமாக, ஒற்றுமையாக வாழுவதாக வெளியுலகிற்கு பாடம்புகட்டும் நம் அரசியல் வாதிகள் இங்கு பள்ளிகள், மத்ரஸாக்கள் குறிவைக்கப்படுவது குறித்து என்ன பதில் சொல்லுகிறார்கள்?
இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை தேசத்தில் மிகத்துரிதமான வளர்சியை எப்படி எதிர்பார்க்கமுடியும்?
மக்கள் சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்?
ஆனால் இலங்கைத் தேசம் பல உலக நாடுகளை மிகைத்துக்கொண்டு முன்னேறிச்செல்ல வேண்டிய நாடாகும்.

யுத்த காலத்தில் பாதுகாப்புக்காக வேண்டி ஒதுக்கிய பணம் இப்போது அதே நோக்கத்திற்காக ஒதுக்க தேவை இல்லை என்றால் அந்த பணம் எதற்காக செலவிடப்படுகின்றது?
ஏன் இனப்பிரச்சினைக்கான யுத்தம் முடிந்த பின்பும் இனப்பிரச்சினை முடியாமல் இருக்கின்றது?
ஏன் இப்போதும் இனப்பழிவாங்களுக்கான புகைமூட்டம் இன்னும் வெளிவந்தமுள்ளன?
பாதைகள் விஸ்தரிப்பு, பாடசாலைகள் தரமுயர்த்தல்கள் மற்றும் சில வேளைத்திட்டங்கள் இந்த அரசால் முன்னெடுத்துச்செல்லப்படுவது குறித்து சந்தோசப்படும் நாம் அதே அரசிடமிருந்து இன்னும் பல சமூகநலத் திட்டங்களை எதிர்பார்த்தவண்ணம் காத்திருக்கின்றோம். இலங்கை தேசம் அதிரடி மாற்றங்களையும் புரட்சிகர முன்னேற்றங்களையும் காண வேண்டுமானால்?

ஆளும் அரசாங்கம் அவசர அவசியாமாக செய்யவேண்டிய மாற்றங்கள் பல இருக்கின்றன,

1. இனவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு இனமும் தங்களது கலாச்சாரத்தை பின்பற்ற தேவையான சுதந்திரத்தை முழுமையாக வழங்க வேண்டும்.
3. விலையேற்றம் இல்லாதொழிக்கப்படல் வேண்டும்
4. பாகுபாடின்றி எல்லாக் கிராமங்கள், நகரங்களும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.
5. சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு காட்டப்பட கூடாது.
6. பதவிகள், சலுகைகள் வழங்கப்படும் போது விகிதாசார முறைமை பேணப்பட வேண்டும்.
7. அரசியல் இலாபங்கள், காய்நகர்த்தல்கள் என்பதைவிட சமூக நோக்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
8. வேலைவாய்ப்புக்களை அதிகப்படுத்துவதற்கு தேவையான தொழிவாய்ப்புக்களுக்கு அடித்தளமிட வேண்டும்.
9. ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு சரியானமுறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
10. நீதிமன்றன்களில் வருடக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளுக்கு நீதமான தீர்ப்பு வழங்குவதுடன் வழக்குகளை தாமதப்படுத்தாமல் இருக்கத்தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.
11. தடுக்கப்பட்ட பொருட்களை, சேவைகளை விற்பனை செய்யும், சந்தைப்படுத்தும் நிலையங்களை தடைசெய்தல் வேண்டும்.
12. பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு நிமிர்த்தம் அனுப்புவதை முழுமையாக தடுத்தல்.
13. ஏழைக் குடும்பங்களுக்கு அன்றாட வருமானம் ஈட்டித்தரும் தொழிமுயற்சிகளை செய்துகொடுத்தல்.
14. கிராமிய பாடசாலைகளை தரமுயர்த்தல்.
15. செல்வந்தர்கள், பணக்கார நிருவனங்கள் ஏழை மாணவர்களுக்குத் தேவையான புலமைபரிசில்களை வழங்குவதற்குரிய சட்டங்களை வகுக்கவேண்டும், அதற்குரிய ஊக்குவிப்பு நடவடிக்களைகளை மேற்கொள்ள வேண்டும்.
16. பல்கலைக்கழக கற்பித்தல்முறைமையை மாற்றுவதுடன் பல்கலைக்கழகங்களின் எண்ணிகையையும் அதிகரிக்க வேண்டும்.
17. அந்நிய செலாவணியை அதிகரிக்கத் தேவையான திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும்.
18. விவசாயம் மற்றும் விளையாட்டுத்துறைக்கென தனித் தனி அமைச்சுக்கள் இயங்குகின்றன ஆனால் போதிய / துரித வளர்ச்சி எதுவும் காணவில்லை, இவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப் பட வேண்டும்

இங்கு பட்டியலிடப்பட்டவைகள் முழுமையாக நம் தேசத்தில் இப்போது நடைமுறையில் இல்லை என்பதல்ல பொருள், நடைமுறையில் இருக்கின்ற செயற்திட்டங்கள் பல இன்னும் பாரிய துரிதகதியை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மாத்திரம் தான் இந்த பதிப்பின் முழுநோக்கம்.

சிந்தனை, எழுத்து மற்றும்  தொகுப்பு:  
இஸ்ஸதீன் றிழ்வான் / மாற்றங்கள் தேவை



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: