காம சுகம் காதல் வேஷமாய்……!



நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் 
தேவை யின்புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு 
நிகழ்ச்சி நிரலாகும்.

முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் 
தொடர்பாக அனைவரதும் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் 
அதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் 
சாத்தியமான மாற்றங்களையும் உண்டு பண்ணுவதற்கான ஒரு 
விஷேட திட்டமே இது.


இந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக் 
கவனத்தில் கொண்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள், தவிர்க்க 
வேண்டியவை, பின்பற்ற 
வேண்டியவை குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.


கொடுக்கப்பட்ட உங்கள் கருத்தைக் கொண்டு முழுமையான கட்டுரையாக 
வடிவமைக்கப்பட்டு மாத முடிவில் உங்கள் பார்வைக்கு வழங்கப்படும்.


இன்ஷா அல்லாஹ், மாதா மாதம் புதிய புதிய தலைப்புக்களில் கருத்துச் 
சேகரிப்பு நடைபெரும்.


சமூகத்தின் தேவை கருதி உங்கள்  ஆலோசனைகளை இங்கு பதியும் படி
தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.


தலைப்பு:

காம சுகம் காதல் வேஷமாய்……!

மாற்றங்கள் தேவையின் கருத்துப் பரிமாற்றம் 04


02/2011 பெப்ரவரி மாதத்திற்கான தலைப்பாக காம சுகம் 
காதல் 
வேஷமாய்……! தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


இந்த தலைப்பு காதலர் தினத்தையும் இன்றைய காதலுக்கு 
துணைபோகும், ஆதரவு வழங்கும் அனைவரையும் முழுமையாக எதிர்ப்பதும் இளைஞர் யுவதிகளை இந்த அபாயத்திலிருந்து 
பாதுகாப்பதும் முக்கிய நோக்கமாகும்.

காதலர் தினம் என்ற பெயரில் காமுகர்கள் கூட்டம் 
அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பெப்ரவரி 14 நமது 
சமூகத்தையும் பீடித்திருக்கிறது.

காதல் புனிதமானது!

காதல் தூய்மையானது!

என்ற கோசங்களுடன் யுவதிகளின் கற்புத் 
திருடர்கள் நமது சமூகக் கன்னிகளுக்கு வலை வீசுவது பற்றி 
இந்த மாத கருத்துப் பரிமாற்றம் அலச இருக்கிறது.

காதல் பற்றி இஸ்லாம் என்ன சொல்லுகிறது?

காதல் திருமணத்தை இஸ்லாம் வரவேற்கின்றதா?

ஒரு இளைஞர் அல்லது ஒரு யுவதி தனது வாழ்க்கைத் துணைவரை 
தேர்வு செய்வதற்கு இன்றைய காதல் முறை தேவைதானா?

இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் காதல் முறைமை 
சமூகத்திற்கு பயனுள்ளதா?


காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா?

காதல் என்ற பெயரில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

காதலர் தினம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தி கன்னிகளை கூட்டிக்கொடுக்கும் இன்றைய மீடியாக்கள் மற்றும் 
பரிசுப் பொருட்கள் வியாபாரிகள் தொடர்பாக உங்கள் 
கருத்துக்கள் என்ன?


தொடருங்கள் உங்கள் ஆலோசனைகளை …….!


மாற்றங்கள் தேவை சமூக மாற்றத்திற்காக மட்டுமே.




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

7 comments:

அன்ஸார் said...

பெப்ரவரி 14 விபச்சாரத் தினம் ?!!!
நபியவர்கள் கூறினார்கள்
”எந்த ஒரு சமூகத்தில் பகிரங்கமாக பாவம் நடக்கிறதோ, அங்கு அதிக (அழிவுகள்) மரணங்கள் நிகழும்” என்று கூறினார்கள்.(தப்றானி)
ஒரு முறை நபியவர்கள் கூறினார்கள்
''அல்லாஹ்வின் வேதனை வந்து விட்டால் அது எல்லோரையும் காவு கொள்ளும்” என்று கூறினார்கள் அப்பொழுது எங்கள் மத்தியில் நல்லவர்கள் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டது அதற்கவாகள் ”ஆம், அசிங்கங்கள், அழுக்குகள் அதிகமானால்” என்று கூறினார்கள். (புஹாரி)
சகோதரர்களே!
உலக அளவில் வரும் பெப்ரவரி 14 திங்கட் கிழமை கொண்டாடப் பட இருக்கும் இந்த அசிங்கமான, விபச்சார தினமான காதலர் தினம் எனும் ஒரு தினத்தை, முஸ்லிம்களாகிய நாமும் எதிர் கொள்கின்ற போது, நாம் எவ்வாறு இதிலே நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வ, நமக்கு மிக அவசியமாகும்.
உலக அளவில் பச்சைக் கொடி காட்டப் படுகின்ற இவ்விழி செயலினால், நாளை இறைவனின் கோபப் பார்வைக்குள்ளாகி எத்தனை மரணங்கள் நிகழப் போகிறதோ தெரியாது. இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாலும் அந்த வேதனையிலிருந்து தப்பிக்க எந்த முகாந்திரமும் நமக்குக் கிடையாது.
நபியவர்கள் கூரினார்கள்: “நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்காமல் இருந்து, பின்னர் நீங்கள் ஓர் அழிவை சந்தித்திக்கும் போது இறைவனிடம் பிரார்த்தித்தால் அல்லாஹ் அதனை அந்தப் பிரார்த்தனையை அங்கீகரிக்கமாட்டான். (திர்மிதி)

சகோதரர்களே!
நான் இந்த அனாச்சாரத்தில் ஈடு பட வில்லை என நினைத்துக் கொண்டு சும்மா இருந்து, பின் அல்லாஹ்வின் வேதனை வந்த பின் கையை உயர்த்தினால் எந்தப் பலனும் கிடையாது. என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். .
உங்களுக்கு குர்ஆனில் உள்ள ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அல்லாஹ், சனிக் கிழமை மீன் பிடிக்க வேண்டாம் என தடை செய்த நாளில் அக்கட்டளையை மீறி, மீன் பிடித்த ஒரு கூட்டத்தை, குரங்கு பன்றிகளாக உறுமாற்றினான். அதிலே:

தடையை மீறி மீன் பிடித்தது ஒரு கூட்டம்.
அதை வேண்டாம் என தடுத்தது ஒரு கூட்டம்.
மீன் பிடித்ததை தடுக்காமல் பார்த்துக் கொண்டும், தடுத்தவர்களை கேலி,கிண்டல் செய்து கொண்டும் இருந்தது மற்றுமொரு கூட்டம். இம்மூன்று சாராரில் தீமையைத் தடுத்த கூட்டத்தை மாத்திரம் அல்லாஹ் பாதுகாத்தான். மற்ற இரு கூட்டத்தையும் அழித்து விட்டான்.
கொஞ்சம் சிந்தியுங்கள்!
வரும் அத்தினத்தில் அரங்கேர இருக்கும் இவ்விழிக் கலாச்சாரத் தினத்தில், இம்மார்க்கத்திற்கான நம்முடைய பங்களிப்பு மேற்கூறிய மூன்று சாராரில் எந்த சாராரைச் சார்ந்ததாக இருக்கப் போகிறது?
நபியவர்கள் கூறினார்கள்
தொடர் .....

அன்ஸார் said...

என் சமூகத்தில் சிலர் பனீ இஸ்ரவேலர்கள் கூட புறியாத காரியத்தையெல்லாம் செய்வார்கள். காலில் அணியும் செறுப்பு காலுக்கு எந்தளவு நெருக்கமாக இருக்கிறதோ, அந்தளவு (கண்மூடித் தனமாக) அவர்களைப் பின் பற்றுவார்கள். ஒரு மகன் தன் தாயை பகிரங்கமாக மனம் முடித்துள்ளான் என தெரிய வந்தாலும், அதே போன்றிருக்க என் சமூகத்தில் (சிலர்) துணிந்து விடுவார்கள்.என்று கூறினார்கள். (ஹாகிம்)
மேலும் நபியவர்கள் கூறினார்கள் ”நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தோரின் வழிமுறைகளை, ஜானுக்கு ஜான், முலத்துக்கு முலம் பின்பற்றுவீர்கள். ஒர் உடும்பு இந்தப் பொந்தில்தான் நுழைந்தது என்றாலும் அதையும் நம்பிவிடுவார்கள். என்று கூறிய போது, ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! யகூதி நசாராக்களையா சொல்ல வருகிறீர்கள்? என்ற போது, ”வேறு யார்? அவர்கள்தான்” என்றார்கள்.(புஹாரி)

கொஞ்சம் சிந்தியுங்கள்!
உண்ணுவது,பருகுவது,உடுத்துவது,விற்பது,வாங்குவது, எதுவாக இருப்பினும் இந்த யகூதிகளையே முன்னுதாரனமாகக் கொள்கிறோமா இல்லையா? எனவே நாமும் யகூதி நஸாராக்களைப் போன்றவர்களாகி விடுகிறோம் என்பதை மறந்திடாதீர்கள். அவர்களின் தூசு கூட நம்மீது படக்கூடாது.
மேலும் ”விபச்சாரத்தை நெருங்காதீர்கள்” (இஸ்ரா.32) என்று இரைவன் கூறியதன் பொருள் என்ன தெரியுமா? மெயிலில் பெண்களோடு உறவாடுவது, எஸ்,எம்.எஸ் அணுப்புவது,போனில் பேசுவது,மிஸ்கோல் (அழைப்பு) கொடுப்பது, கிப்ட், வழங்குவது, இதே போன்று என்னவல்லாம் இருக்கிறதோ அனைத்துமே நீங்கள் விபச்சாரம் செய்யப் போகிறீர்கள் என்பதுதான் அல்லாஹ் கூறிய வசனத்தின் பொருள்.

எனவே முஸ்லீம்களாகிய எமக்கு, ஜும்ஆ,நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் ஆகியவையும் மார்க்கம் அணுமதித்த ஏனையவைகளைத் தவிர வேறொன்றும் சந்தோஷமான நாள் கிடையாது என்பதை மனதில் இருத்தி, அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய பாதையில் செல்வோமாக.

”நம்பிக்ககை கொண்டோரே!
யூத கிறிஸ்தவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்,அவர்களில் ஒருவர் மற்றவர்களுக்குப் பாதுகாவலர்கள். உங்களில், அவர்களை பொறுப்பாளர்களாக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (5,51)
”எந்த ஒரு சமூகம் பிற சமூகத்துக்கு ஒப்பாக நடக்கிறதோ, அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவரே. மறுமையில் அவர்களுடன் எழுப்பப் படுவார்”.(ஸஹீஹுல் ஜாமிஃ)

எனவே, வீசுகின்ற காற்றுக்கு சேற்றில் நட்டி வைக்கப் பட்ட கம்பைப் போன்றல்லாமல், உறுதியாக நமக்கே உரிய தனித் தன்மையோடு,ஒழுக்க விழுமியங்களோடு வாழ வல்லவன் அல்லாஹ் நம்மனைவரையும் இத்தீமையிலிருந்து காத்தருள்வானாக.
நன்றி
அன்ஸார் U.L (இலங்கை)

Anonymous said...

நானும் காதல் செய்து திறுமணம் செய்து கொண்டவதான், ஆனால் என் மனைவியை நான் ஏமாற்றவில்லை, காம்ப் பசிக்காகவும் இல்லை, நிம்மதியாய் வாழ்கிறோம், தற்காளிக பசியை போக்க முயற்சிக்கும் காமுகர்களுக்கெதிராக மட்டும் உங்கள் எதிர் குரல் இருக்கட்டும் நண்பா..

Anonymous said...

பள்ளிக்கூடத்த்ல இருக்கும் போதே ஏதாவது சொல்லி புல்லைகள காதலிக்க வைத்துவிட்ராங்க, அது போதையா மாறி போகுது. பாடசாலை நிருவாகம் இதில் கவனம் செலுத்துனா நல்லா இருக்கும்.

Anonymous said...

M.Peer Mohamed said:

நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
காலத்திற்கேற்றால் போல் தலைப்பை கொடுத்து சமூகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் மாதாந்தம் வெற்றிநடைபோடுகிறன,

அல்ஹம்துலில்லாஹ்

காம சுகம் காதல் வேஷமாய்……! நமது இந்த மாதத்தில் பேசப்பட்டு வருகிறது.
பல சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னும் நிறைய செய்திகளை சுமந்து நீங்களும் வருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

நன்றி

ibn junaid said...

ஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
காலத்திற்கேற்றால் போல் தலைப்பை கொடுத்து சமூகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் மாதாந்தம் வெற்றிநடைபோடுகிறன,

அல்ஹம்துலில்லாஹ்