நரி வேச மனிதர்கள்

Maatrangal Thevai Suvai 08

அல்ஹம்துலில்லாஹ் கடந்த 26/02/2010 வெள்ளிக்கிழமை சவூதி அரேபிய தெளஹீத் உலமாக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தழிழ் பேசும் முஸ்லிம்களுக்கான நிகழ்வில் கழந்து கொள்ள கிடைத்தது.


அந்த நிகழ்வின் ஒரு நிகழ்ச்சியாக சிறியவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவர்வில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த அமர்வில் அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர் குதைபா அவர்கள் மிகச்சிறப்பான முறையில் சிறுவர்களுக்குத் தேவையான பல விடயங்களை பதிவு செய்தார்.

இந்த தொடரில் எனது மனதை ஈர்த்த ஒரு செய்தியை ஞாபகமூட்ட வேண்டிய கடமை எனக்கிருக்கின்றது, சமூக ஒற்றுமையை மிக இலகுவாக விளக்கப்படுத்துவதாக இது அமைகின்றது.

"மான் இனத்தை அதே இனத்தின் உதவியுடன் புலி சாப்பிட்ட கதைதான் அது".

வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என்ற 3 நிற மான்கள் கொண்ட அந்த கூட்டத்தினரை புலி சாப்பிடுவதற்கு பல தடவைகள் முயற்சித்தன, ஆனால் இந்த மூன்று நிற மான்களும் கூட்டங்கூட்டமாக எப்போதும் வருவதனால் ஒன்றை ஒன்று பாதுகாத்துக்கொள்கின்ற ஒரு நிலை புலிக்கு மிக கஸ்டமாக இருந்தது.

இதை கண்ட நரி புலியை அழைத்து ஆறுதல் படுத்தியது, அதாவது மான்களை சாப்பிடுவதாக இருந்தால் நான் அதற்கு உதவுகின்றேன் என்று வாக்களித்த நிலையில், நரி வெள்ளை மான் இனத்தை அனுகி புலி உங்கள் மொத்த இனத்தையும் சாப்பிட்டு தீர்க்க முயற்சிக்கின்றது, அதற்கு கருப்பு மான் இனமும் சிவப்பு மான் இனமும் உதவுகின்றன, அதனால் இந்த ஏனைய 2 நிற மான் கூட்டத்தை விட்டும் தூரமாக இருப்பது தான் உனக்கு நல்லது என்று ஆலோசனை வழங்கியதும் இந்த ஆலோசனையைக் கேட்ட வெள்ளை மான்கள் நம்பிப்க்கொண்டு தூரமாக ஆரம்பித்தது.

நரி இதே கருத்தை ஏனைய இரண்டு நிற மான் கூட்டத்திற்கும் சொல்லி அந்த மிகப்பெறிய மான் இனத்தை மூன்றாக துண்டாடியது.

இப்போது புலி சிவப்பு நிற மானில் பாயும் போது வெள்ளை நிற மற்றும் கருப்பு நிற மான்கள் ஒதிங்கிக்கொண்டன. புலி தனது காரியத்தை சாதித்து தனது முயற்சியில் வெற்றி பெற்றது.

நண்பர்களே எனது சகோதர்களே இந்த குட்டி கதையின் யதார்த்தைதை புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

இதே நரி வேச மனிதர்கள் எமது மான் இன முஸ்லிம் சமூகத்திற்குள் இருப்பதாக கண்டால் இனங்கண்டு அப்புறப்படுத்த முயல்வோம், அதற்காக பிராத்திப்போம்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: