((சில நண்பர்களின் தூண்டுதல்கள் என்னை சந்தோஷப்படுத்துகின்றது,
அந்த தூண்டுதல்கள் நிறையவே அவசியப்படுகின்தறது என்ற செய்தியை சொல்லிக்கொண்டவனாக,))
ஒரு புகைபிடித்த மனிதன் தனது சமூகத்தில் அனுபவிக்கும் சில அன்றாட பிரச்சினைகளை ஞாபகமூட்டுவதாக இருந்தால்,…………..
ஒரு (Sales Man) சேல்ஸ் மேன் புகைபிடித்த வாயுடன் எப்படி ஒரு மேனெஜரை அல்லது தனது வாடிக்கையாளரை (Manager, Customer) சந்திக்க முடியும்?
ஒரு கனவர் எப்படி தனது மனைவியுடன் குடும்பம் நடத்த முடியும்?
ஒரு தந்தை எப்படி தனது பிள்ளைகளுக்குப்பக்கத்தில் இருந்து கதைக்க அல்லது கற்பிக்க முடியும்?
ஒரு ஆசிரியர் எப்படி தனது வகுப்பிற்குள் நுழைய முடியும்.
புகைப்பிடித்தவனுடன் பேசுவது என்பது மிகவும் அருவருப்பான ஒரு செயலாகும்.
சில நேரம் காலை நேரத்தில் நான் எனது காரியாலயத்தில் இருக்கும் போது சிலர் புகைபிடித்த நிலையில் என்னை பார்க்க வருவார்கள், அவர்களுடைய வாயிலிருந்து வரக்கூடிய வாடை வாந்தி எடுக்கும் நிலைக்கு என்னை மாற்றியது, அதன் பிறகு எனது காரியாலயத்தில் புகைபிடிக்க தடை என்பதை “Non smokers Zone” என்று எழுதி தொங்கவிட்டிருக்கின்றேன்.
இது தொடக்கம் புகைபிடித்த நிலையில் எவெரும் எனது காரியாலயத்தித்கு வருவதில்லை.
புகைபிடிப்பவன் சுயமாக சிந்திக்காதவன், தனந்து நிலையை பற்றி ஒருபோதும் சிந்திக்காதவன் என்று சொன்னால் குற்றமில்லை.
நாம் புகைபிடிக்கா ஒரு சூழலை உருவாக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment