அதிஷ்டமில்லை?

மாற்றங்கள் தேவை - சுவை 13


சிறியவர்கள் முதல் மரணதருவாயிளுள்ளவர்கள் வரை எனக்கு அதிஷ்டமில்லை, நான் ஒரு துரதிஷ்டசாலி, என தன்னையே தாழ்த்திக்கொள்கின்ற வார்த்தைகளை பேசுவதையும் தனது நம்பிக்கையை அதன் பால் ஈர்த்துக்கொண்டு நடப்பதையும் பரவலாக கண்டு கொள்ள முடிகின்றது.

சில சந்தர்ப்பங்களில் எதிர்பார்த்த சில விடயங்கள் கிடைக்கவில்லை, நடக்கவில்லை என்பதற்காக நான் அதிஷ்டமில்லாதவன் என்று என்னை திட்டிய பல சந்தர்ப்பங்கள் எனக்கு நடந்திருக்கின்றன.

ஆனால் எப்போது அதிஷ்டங்கள் என்றால் என்ன? அது எப்படி கிடைக்கும்? அது யாருக்குரியது? அது யாரால் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பதற்குரிய விடைகளை தெறிந்து கொண்டேனோ அப்போதிலிருந்தே இது தொடர்பாக மக்களிடத்திலிருக்கும் ஜயங்களை, மூட நம்பிக்கைகளையும் போக்க உதவ வேண்டும் என முயற்சித்திருக்கின்றேன்.

அந்த உழைப்பின் விடா முயற்சிதான் காட்சிதருகின்றது எனது இந்த சிறிய தொகுப்பு.

எப்போது அதிஷ்டங்கள் என்பது சிலருக்குரியது, அல்லது ஒரு சாஸ்த்திரகாரன், ஜோசியக்காரன் குறித்த இந்த விடயத்தில் நீ அதிஷ்டசாலி என்று கூறினால் மட்டும் எமக்கு அதிஷ்டம் இருப்பதாக, கிடைப்பதாக நம்புகின்றோம்.

அதிஷ்டம் என்பது எல்லோருக்குமுரியது, ஆனால் எல்லோரும் அதனை தன்வசப்படுத்திக்கொள்ள உரிய முறையில் முயற்சிப்பதில்லை.

உண்மையில் எப்போது எமது ஏகத்துவ மக்கள் நிஜத்திற்கும் (அதிஷ்டத்திக்கும்) - குருட்டு வாய்ப்புக்கும் இடையிளுள்ள வேறுபாடுகளை தெறிந்து கொள்கிறார்களோ அப்போதிலிருந்து எமது நாட்டில் எமது சூழலில் வாழும் சாஸ்திரகாரர்கள் குறைந்து கொண்டு போவார்கள்.

தொடர்ந்து வாசியுங்கள், யார் யார் அதிஷ்டசாலிகள் என்பதில் உங்களது பெயர் இருக்கின்றதா என்பதை கண்டு கொள்வீர்கள்.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வே அனைத்திற்கும் ஆற்றல் பெற்றவன்.


"அதிஷ்டம்" என்பதன் பொருள்:

நற்பேரு, தற்செயலான குருட்டு வாய்ப்பு, குருட்டு யோகம், நல்ல அதஷ்டமுள்ள, அதிஷ்டம் வாய்ந்த, தற்செயலான என்ற கருத்துக்களை அதிஷ்டம் (Luck / Lucky / Fortune) என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கிள - தமிழ் அகராதி மொழிபெயர்ப்பு வழங்கியிருக்கின்றது.

அல் குர்ஆன் Fortune என்ற சொல்லுக்கு பாக்கியம் என்ற கருத்தை வழங்குகின்றது.

அதிஷ்டம் (Luck) என்ற சொல்லுக்கு நல்ல வாய்ப்பு, சந்தர்ப்பம், மற்றும் அதிஷ்டம் என்ற கருத்தையும் அதே அர்த்தத்தில் வரக்கூடிய Fortune என்ற சொல்லுக்கு செல்வம், நிஃமத் என்ற கருத்துக்களையும் ஹதீஸ்களில் பாவிக்க காணலாம்.

உண்மையில் நாம் அதிஷ்டத்தையும் குருட்டு வாய்ப்பையும் இரு வேரு துருவங்களாக பிரித்துப்பார்க்கின்ற போதே எனது மூட நம்பிக்கைக்கும் தவரான புரிதலுக்கும் விடை கண்டு கொள்ள முடிகின்றது.

அதிஷ்டம் இல்லை என்று சொல்லிக்கொண்டு தன்னையே மட்டந்தட்டி கொண்டிருப்பவர்கள் எல்லோருமே எதிர்பார்ப்பதெல்லாம், அல்லது அதிஷ்டம் என்று சொல்லுவது எல்லாம் குருட்டு வாய்ப்புக்களையே.

அதிஷ்டத்திற்கும் குருட்டு வாய்ப்புக்குமிடையில் உள்ள வேறுபாடு தெறியாது போனதும் அதற்கு ஒரு காரணமாகும்.

எதேச்சையாக, நாம் எதிர்பார்க்காத ஒரு இலாபம் எமக்கு கிடைப்பது என்பது தான் அதிஷ்டவசமாகும் என்பது தவறான நம்பிக்கையாகும்.

ஒரு வாகனத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கும் போது ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டதும் எப்படி இது எதிர்பார்க்காத விதத்தில் நடந்த ஒரு விபத்து என்கின்றோமோ அது போல தான் எல்லோருடைய வாழ்க்கையிளும் எதிர்பார்க்காமல் கிடைக்கக்கூடிய அல்லது நடக்கக்கூடிய ஒன்று தான் நீங்கள் நினைக்கின்ற குருட்டு வாய்ப்பு என்பது.

எமது சமூகத்தில் இந்த அதிஷ்டகரமான நடத்தைகளை அசாத்தியமான அல்லது குறித்த ஒரு சிலருக்குரிய ஒன்று என்று பார்க்கின்றார்கள்.

குருட்டு வாய்ப்பு, எதேச்சை என்பதற்கான கருத்தை அதிஷ்டம் என்று சொல்லுக்கு கொடுத்து சிந்திக்கின்றார்கள்.

எதேச்சையாக நடப்பது என்பது அதிஷ்டமாக முடியாது. எல்லோரும் அதிஷ்டமில்லை என்று சொல்லுவது அதன் உண்மையான கருத்து மற்றும் அதில் அடங்கியிருப்பவைகள் என்ன என்று தெறியாமைதான் காரணமாகும்.

அதனால் தான் எல்லோரும் தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்கின்றார்கள். கிடைக்க இருப்பதையும் கிடைக்கவிடாது எதிர்மாற்றமான சிந்தனையால் நடத்தையால் தூரபடுத்திவிடுகின்றார்கள்.

அதிஷ்டம் என்பது ஒரு முஃமினுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிட அனைத்து நல்ல காரியங்களும் இலாபம் நீட்டி தரக்கூடிய எல்லாவையான விடயங்களும் இதற்குள் உள்ளடங்கும்.

அதற்கு மேலாக எந்த குறைபாடுகளும் இல்லாமல் இந்த உலகில் ஒரு முஸ்லிமாக வாழ்ந்து மரணிப்பதே மிகப் பெரும் அதிஷ்டமாகும்.

அதிஷ்டமில்லை அல்லது துரதிஷ்டவாய்ப்பு என்றால் ஒருவருடைய வாழ்க்கையில் அன்றாட நடத்தைகளில் செயற்பாடுகளில் அவர் எதிர்பார்க்கின்ற நன்மைக்கு மாற்றமான ஒன்று அல்லது கெட்டது நடப்பதாகும். அது சிறியதாகவோ அல்லது பெறியதாகவோ இருக்கலாம்.

ஒரு பாடசாலை மாணவன் தான் வகுப்பில் முதல் இடத்தில் வரவில்லை என்பதற்காக தனக்கு அதிஷ்டமில்லை, தான் ஒரு அதிஷ்டசாலி இல்லை என்று சொல்லி வேதனைபட்டு தனது படிப்பை இடைநிருத்துவதும் தனது தொடரான வணக்கவலிபாடுகளில் நம்பிக்கை இலப்பதும் முட்டாள் தனமானதாகும்.

ஒரு வகுப்பில் 20 மாணவ மாணவிகள் இருந்தால் அவர்கள் அனைவரும் முதலாம் இடத்தை அடைய வேண்டும் என முயற்சிக்கலாம், ஆசைப்படலாம். ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே வருடத்தில் முதலாம் இடத்தை அடைய முடியாது.

ஒரு நாட்டில் எல்லா குடிவாசிகளும் அரசனாக முடியாது.

வகுப்பில் உள்ள அந்த 20 மாணவர்களிலும் ஒரு மாணவன் மட்டும் தான் முதலாம் இடத்திற்கு வருவான். இந்த குறித்த மாணவன் மட்டும் தான் அதிஷ்டசாலி, அதனால் தான் இவன் அதிக மார்க்ஸ்களை எடுத்து முதலாவது இடத்தை அடைந்திருக்கின்றான். எனக்கு அதிஷ்டமில்லை; எவ்வளவு அழகாக படித்தேன், ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்விடத்தில் அதற்காக பிரார்த்தித்தேன், தோற்றுப்போய்விட்டேன் என்று நினைப்பது இந்த சிறிய மாணவனை பொருத்தவரை நியாயம். ஆனால் நான் அதிஷ்டசாலி இல்லை, அதனால் நான் தோற்றுபோய்விட்டேன் என்று நினைத்து வருந்துவது அறியாத்தனம்.

நபி (ஸல்) அவர்கள் எமக்கு சொல்லிக்கொடுத்த ஒரு முன்மாதிரியான செய்தி இருக்கின்றது, அதாவது:

ஒரு முஃமினுடைய பிரார்த்தனைக்கு அல்லாஹ் மூன்று விதத்தில் பதிலளிக்கின்றான். 1 - அந்த முஃமின் கேட்பதனை உடனே கொடுக்கின்றான்,

2 - அல்லது தாமதமாகி கொடுக்கின்றான்,

3 - அல்லது அதை கொடுக்காமல் அதைவிட நன்மை தரக்கூடிய வேறு ஒன்றை அல்லாஹ் கொடுக்கின்றான். "

இப்போது புறிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

நலவை நாடி பிராத்திக்கும் எமது பிரார்த்தனைகள் ஒரு போதும் வீணாகிப்போகிவிடாது என்பதை கவனத்தில் கொண்டு செயற்படுவோம்.

(இந்த ஹதீஸ், இந்த முழு புத்தகத்திற்குமுரிய மிக முக்கியமான ஆதாரமாகும்.)

ஆனால் வகுப்பில் முதலாவது வரவில்லை என்பதற்கு வேரு சில காரணங்கள் இருக்கின்றன.

யார் வகுப்பில் முதலாம் இடத்தில் வரவில்லை என்று தன்நம்பிக்கை இழந்திருக்கின்றீர்களோ அவர்களுக்கு நான் சொல்லும் மிக முக்கியமான விடயம்; உங்கள் வகுப்பில் முதலாம் இடத்தை அடைந்த மாணவனது திறைமையையும் அவனது நடத்தைகளையும் உங்களது திறைமை முயற்சி மற்றும் நடத்தைகளுடன் ஒப்பிட்டுபாருங்கள் ஏன் நீங்கள் முதலாம் இடத்தை அடையவில்லை? என்பதற்கு. 100 காரணங்களை வித்தியாசங்களை கண்டு கொள்வீர்கள்,

எமது பிரதேசத்தில் ஒருவர் நல்ல பதவில் இருந்து பெருமதியான ஊதியத்தை பெற்றுவந்தால் அவர் அதிஷ்டசாலி, ஆனால் முயற்சித்து கிடைக்கவில்லை என்று இருப்பவர் அதிஷ்டமில்லாதவர் என்று நினைப்பது கூடாது.

நல்ல தொழிலில் இருக்கக்கூடியவர் என்று சொல்லுவதற்கு உதாரணம்; எமது பிரதேசத்தில் உள்ள காழி நீதிபதி,

இந்த நீதிபதி பதவி எனக்கு கிடைக்கவில்லை என்பதற்கு நான் துரதிஷ்டசாலி என்று நினைக்கக்கூடாது. காரணம் இந்த ஊரில் பிரதேசத்தில் ஒரு நேரத்தில் ஒரு நீதிமன்றமும் ஒரு நீதிபதியும் தான் தேவை.

ஒரு நீதிமன்றத்திற்கு பத்துபேர் நீதிபதியாக முயற்சிக்கலாம், அதற்காக போட்டிபோடலாம், ஆனால் பத்துபேரும் நீதிபதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனமானது.

அந்த பதவி கிடைக்காத மீதி ஒன்பது பேரும் துரதிஷ்டசாலி என்று தனக்குள் நினைத்துக்கொள்வதை விட்டுவிட்டு தனக்கு தகுதி இல்லை என்று உண்மையான காரணத்தை கூறி வேறு பதவிக்கு முயற்சிப்பது புத்திசாலிதனமானதாகும்.

அந்த அடுத்த கட்ட முயற்சியின் போது ஏற்கனவே தோல்வியடைந்ததற்கான காரணத்தை கவனத்தில் கொண்டு தனக்கு பிடித்த, முடியுமான வேரு ஒரு துறையில் முயற்சிக்கும் போது சமூகமலித்த 10 பேரில் நீங்கள் மாத்திரம் (ஏற்கனவே நீதிபதி தேர்வில் தவரியவர்) தெரிவுசெய்யப்படலாம். இது தான் உண்மை.

ஊரில் உள்ள நல்ல பணக்காரர்கள், வாழ்க்கையில் அவர்கள் நினைப்பது போன்று வசதியாக இருக்கின்றான். இவனை பார்த்து இவன் அதிஷ்டசாலி என்று தொழிலில் நஷ்டமடைந்த ஒருவர் நினைத்து எனக்கு அதிஷ்டமில்லை என்று கூறக்கூடாது.

வியாபாரத்தில் இலாபம் கண்டு பணக்காரனாகி இருக்கும் அவறுக்கும் உங்களுக்குமிடையில் ஒப்பீட்டு பார்த்துவிட்டு நீங்கள் அதிஷ்டசாலி இல்லை என்று சொல்லுவதற்கான காரணம் என்ன?

அவரது முன்மாதிரிகளை அவரது நல்ல பண்புகளை எங்களது வெற்றிக்குரிய முன்மாதிரிகளாக எடுத்து செயற்படலாம். அவரது துறை அவருக்கு கை வந்த கலையாக இருக்கும். அதே போல் எமக்கென ஒரு குறித்த ஒரு சிறப்பு கலை எமக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றது. அது எது என்பதை கண்டுபிடித்து அதை தூக்கிவிடுவது தான் நாம் எமக்கு அதிஷ்டம் கிடைப்பதற்கும் வாழ்க்கையில் வெற்றிபெருவதற்கும் செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும்.

எந்த வழியாக பயணம் செய்வது என்பதை பார்ப்பது, தேடுவது ஒரு பயணியின் கடமை.

எந்த விதத்தில் படித்தால் தேர்ச்சி பெற முடியும் என்று பார்ப்பது அதற்கு தேவையான நுட்பங்களை முதன்மைப்படுத்துவது ஒரு மாணவனின் கடமை.

எந்த வையில் செயற்பட்டால் நாட்டை பாதுகாக்க முடியும் என்று சிந்திப்பது ஒரு இரணுவ வீரனின் கடமை,

எந்த வையில் உழைத்தால் எந்த தொழிலை தொடர்ந்தால் தனது குடும்பத்தை பாதுகாக்க முடியும் என்று சிந்திப்பது ஒரு குடும்ப தலைவனின் கடமை,

எப்படி மக்களுக்கு சரியான மார்க்கத்தை இலேசானமுறையில் சொல்லிக்கொடுப்பது என்று சிந்திப்பது ஒரு மார்க்க அழைப்பாளரின் கடமையாகும்.

எந்த வகையில் நாட்டை வளர்ச்சிபாதையில் செலுத்த முடியும் என்று சிந்திப்பது அதற்கான திட்டங்களை வகுப்பது ஒரு ஜனாதிபதியிம் கடமை.

ஆனால் எது செய்தால்? எதை செய்தால்? எப்போது செய்தால்? எங்கு செய்தால்? இது நடக்கும் என்பதை விட்டுவிட்டு அவன் முதலிடத்தை அடைந்துவிட்டான், அவன் முதளாலியாகிவிட்டான் என்று புறாமை கொண்டு தன்னை தனது திறமையை முயற்சியை மட்டந்தட்டிக்கொள்வது கோளைத்தனமானதாகும்.

பாடசாலையில் பாடம்சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், மிம்பரில் நின்று பேருரை நிகழ்த்தும் மார்க்க அறிஞர், நாட்டின் எல்லையில் ஆயுதம் ஏந்தி நாட்டை பாதுகாக்கும் வீரர், பாரளுமன்றத்தில் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைச்சர், சந்தையில் நேர்மையான விலை சொல்லி வியாபாரம் செய்யும் வியாபாரி, உரிய நேரத்தில் உரிய முறையில் பயணிகளை பயணிக்க உதவும் பேருந்துக்கார்ர், பாதையோரத்தில் பொதுமக்களின் பாதணிகளை தைத்து கொடுத்து உரிய கட்டணம் அறவிடும் பாதனி கடைக்காரன், வைத்தியசாலையில் நிதானமாக நோய்விசாரித்து உரியமுறையில் வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அனைவரும் அதிஷ்டசாலிகளே.

எல்லாருமே அவரவருக்குரிய அல்லது முடியுமானதை தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.

ஆனால் பாதணீ சீர்செய்யும் ஒருவர் ஒரு வைத்தியரை பார்த்து அவர் அதிஷ்டசாலி, நான் அதிஷ்டமில்லாதவன் என்று சொல்லுவது அறிவீனமாகும்.

அதே நேரம் அவரது வைத்திய தொழில் மகத்தானது எனது தொழில் மரியாதை கெட்டது என்று தன்னை தாழ்த்திப்பார்ப்பது கோளைத்தனம்.

தொடரும் .................

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: