ஷீஆக்களின் சீர்கெட்ட சிந்தனைகள்

மாற்றங்கள் தேவை - சுவை 14
ஓரு விமர்சனப் பார்வை

                                                                                     அபு+ ஹம்னா ஸலபி
ண்மைக்காலமாக இலங்கையில் ஷீஆக்களின் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரான் தூதரகத்தினால் வெளியிடப்படும் 'தூது” என்ற காலாண்டு சஞ்சிகை, ஒவ்வொரு பள்ளிக்கும் இலவசமாக அனுப்பப்பட்டுவருகிறது. இதனால், இஸ்லாமிய அறிவுப் பின்னணி இல்லாத பல பள்ளி நிருவாகங்கள், இதன் கவர்ச்சிக்கு இலகுவில் ஆளாகி விடுகின்றன. இஸ்லாமிய அகீதாவில் தெளிவில்லாத, இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியம் பற்றிய அறிவு இல்லாத இவர்கள், இதன் மூலம் சிந்தனைச் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர். ஷீஆக்கள் பல்கலைக் கழகங்கள், பாடசாலைகள் என்பவற்றிலும் வேகமாக ஊடுருவ ஆரம்பித்துள்ளனர். சமூக நடவடிக்கைகள் மூலம் தமது கொள்கையைப் பரப்ப முனைகின்றனர்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினால், இவ்வுலகிலேயே சுவர்க்கவாதிகள் என்று அடையாளப் படுத்தப்பட்ட, உன்னத இஸ்லாமிய ஆட்சிக் காவலர்களான அபு+பக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற வரலாற்றுப் புருஷர்களைக் காபிர்கள் என்று சொல்கின்ற ஒரு கூட்டம், இந்த நாட்டில் இன்று உருவாக்கப்பட்;டு வருகின்றது. முதல் மூன்று தூய ஆட்சியாளர்களைக் கேவலப்படுத்தியும், நம் தாயை விட மேலாக மதிக்கும் ஆயிஷா ஸித்தீகா (ரலி) அவர்களை ஒழுக்கம் கெட்டவள் என்றும், தரக் குறைவாக குமைனி என்ற ஈரானிய ஷீஆவினால் எழுதப்பட்ட 'இஸ்லாமிய அரசு” என்ற நூல், கிலாபத் கனவில் சஞ்சரிக்கும் இயக்கவாதிகளால் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நூலாக அறிமுகப்படுத்தப்பட்டும், சில புத்தக விற்பனை முகவர்களால் முக்கியம் அளிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

அதேபோல், ஒரு பக்கத்தில் 'கிலாபத்” என்றும், 'தூய தேசம் நோக்கி...” என்றும் கோஷமிட்டுக் கொண்டு, மறுபக்கத்தில் பிரதேசவாதத்தை பத்திரிகையில் பக்கம் பக்கமாக கக்கிக் கொண்டும், மிம்பர் மேடையில் தரக்குறைவான வார்த்தைகளை தாராளமாகப் பயன்படுத்தும் ஷீஆ ஆதரவு இயக்கம் தான் இந்த நாட்டிற்குள் வழிகெட்ட ஷீஆ சிந்தனையை அழைத்து வந்து பரப்பியது. இன்னும் ஆதரித்து வருகிறது.

1980களுக்கு முன்னர், இந்த நாட்டில் அபு+பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) போன்றவர்களைக் 'காபிர்” என்று திட்டுபவர்கள் இருக்கவில்லை. ஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையைத் தோற்றுவித்தவர்கள் யார்? நவீன கிலாபத்தின் காவலர்கள். இந்த நாட்டில் ஸஹாபாக்களைத் திட்டும் கூட்டத்தை உருவாக்கிய அநியாயத்திற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இதுபற்றியும் கேட்காமல் விடமாட்டான்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட, அனைத்துக் கொள்கைக் குழப்பங்களையும் தற்துணிவாக முறியடித்த மாபெரும் ஆட்சியாளர் அபூபக்கரும், தனது ஆட்சிக் காலத்தில் நேர்மையாலும் நீதத்தாலும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை விரிவடையச் செய்த உமர் (ரலி) அவர்களும் காபிர்கள் என்று சொல்லும் சிந்தனை மரபில் தோன்றி, விபச்சாரத்திற்கு அரச அங்கீகாரம் வழங்கிய குமைனியின் புரட்சி பற்றி, இவர்களின் இயக்க ஸ்தாபகர் என்ன சொன்னார் தெரியுமா?

பத்திரிகையாளர் ஜாபிர் ரிஸ்க் என்பவர், மவ்தூதியிடம் 'ஈரானியப் புரட்சியைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மவ்தூதி: 'நிச்சயமாக அது ஓர் இஸ்லாமியப் புரட்சி; அதனை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிபாகும்” என்றார். 'வாஜிப்” என்ற சொல்லாட்சி இஸ்லாமிய சட்ட மரபில் வகிக்கும் பங்கு என்ன?

அதிகமான நபி மொழிகளை அறிவித்த அபு+ஹுரைரா (ரலி) அவர்களைத் திட்டி, முஃமின்களின் தாயான ஆயிஷா (ரலி)யை வேசி என்று எழுதியவன் சாட்சாத் 'புரட்சித் தலைவன்” குமைனியின் புரட்சியை ஆதரிப்பது வாஜிபாம். இவர்கள்தான் அவரின் வழிநின்று இந்த நாட்டில் நாளைக் கழித்து கிலாபத்தைத் கொண்டுவரப் போகின்றார்களாம். இவர்களின் கிலாபத் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்று கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இவர்களின் ஷீஆவுடனான கள்ளக் காதலுக்கு இதோ இன்னொரு சான்று. சமரசம்-முஜீப் பதில்கள் பகுதியில் இடம் பெற்றிருந்த கேள்வியையும் அதற்கான பதிலையும் பாருங்கள்.

சவு+தியின் புதிய மன்னர் அப்துல்லாஹ்; ஈரானின் புதிய அதிபர் அஹ்மத் நெஜாதி-இந்த இருவரின் ஆட்சியின் அணுகுமுறை எப்படியிருக்கும்,? ஏ.எம்.பீ. பைசுர் ஹாதி - நீடூர்.

அடிப்படையிலேயே இரண்டு ஆட்சிகளுக்கும் (ஒன்று மன்ன ராட்சி; இன்னொன்று மக்களாட்சி) நிறையவே வேறுபாடு இருப் பதால், அணுகுமுறையிலும் அவை வெளிப்படவே செய்யும்...

சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். மன்னர் அப்துல்லாஹ் அமெரிக்காவின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.

அதிபர் நெஜாதி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்.

ஷீஆக்களின் சீர்கெட்ட சிந்தனைகள் சிலவற்றை இக்கட்டுரையினூடாகக் கண்டு கொள்வீர்கள். ஈரானுடனும், ஈரானிய ஆட்சியாளர்களுடனும் ஒப்பிட்டு நோக்கும் போது, சவு+தி அரேபியா எவ்வளவோ நல்லது என்று துணிந்து கூறலாம். இஸ்ரேல், முஸ்லிம்களுக்கு எவ்வளவு பயங்கரமானதோ, அதைவிட இஸ்லாத்திற்கு ஈரான் பயங்கரமானது. நாம் ஷீஆக்களின் புனித நூல்களிலிருந்து தந்திருக்கின்ற தகவல்களைப் படிக்கும் ஒரு நேர்மையான சிந்தனையாளன் நமது இக்கருத்துடன் உடன்படாமலிருக்கவேமாட்டான். ஏனெனில் அமெரிக்க, இஸ்ரேலிய பயங்கரவாதிகள் இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளனர். அதைவிட ஷீஆக்களும் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளனர். ஷீஆக்கள் இன்றுவரை ஈரானில் சுன்னி முஸ்லிம்களைக் கொன்று குவித்துக் கொண்டுள்ளனர்.
இதோ சில காட்சிகள்

தற்போது,ஈரானிய அரசாங்கத்தினால் தெஹ்ரானில் 10க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலையங்கள் கட்டவும், சிலைவைத்து கிறிஸ்தவ வழிபாடு நடாத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 30வீதத்துக்கும் மேற்பட்ட சன்னி முஸ்லிம்கள் வாழும் அங்கு, ஒரு ஜும்ஆ பள்ளிகூடக் கட்ட இன்றுவரை அவர்களுக்கு அனுமதியில்லை. அஹ்மத் முப்தி ஸாதா என்ற மிகப் பெரும் சுன்னிப் பிரிவு மார்க்க அறிஞரை இருட்டு சிறையில் அடைத்துக் கொன்றான், குமைனி. கொடூர புத்திகொண்ட குமைனியின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்பிரகாரம் தொழ அனுமதிக்காமல், கிறிஸ்தவ வழிபாட்டிற்கு அனுமதிப்பதுதான் அல்லாஹ்வின் கட்டளைக்கு முன்னுரிமை அளிக்கும் இலட்சணமா? யு+தர்களைவிட மோசமானவர்களை இஸ்லாமிய வாதிகள் என்று புலம்ப எப்படித்தான் உங்களுக்கு மனம் வருகிறது!

இதோ பாருங்கள் குமைனியின் பித்தா;களால். ஜனாஸா ஊர்வலத்தில் குமைனி அம்மனமாக்கப்படுகிறார்.


('ஸராபுன் பீ ஈரான்” என்ற அறபி நூலைப் படித்துப் பாருங்கள். அப்போது ஈரானின் கானல் தன்மையை உணர்ந்து கொள்வீர்கள். அங்கே இஸ்லாமிய முறையில் ஆடை (பர்தா) அணிந்து, இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் விபச்சாரிகள் இருப்பதையும் தெரிந்து கொள்வீர்கள்)

இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய ஷீஆக்களையும் அதனை ஆதரிப்போரையும் விமர்சிக்கக் கூடாதாம். சுவர்க்கவாதிகளான சிறந்த ஸஹாபாக்களைக் காபிர் என்று திட்டும் கூட்டத்தையும், அச்சீர்கெட்ட சிந்தனையை இஸ்லாமிய அடைமொழியுடன் பரப்பும் இயக்கவாதிகளையும் விமர்சிப்பது பொருத்தமற்றதாம் ஏன்? சுனாமியில் இணைந்து செயற்பட்டார்களாம் என்று நாக்கூசாமல் பகிரங்கமாகக் கூறினாலும் இதற்குப் பின்னால் வேறு காரணங்களும் இருக்கின்றன என்பது தெளிவானதே!

எனினும், சவு+தியின் தயவில் வாழுபவர்கள், இனியாவது ஷீஆ பக்தகோடிகளுக்குத் துதிபாடி அவர்களின் மாநாட்டிற்கு ஆள் அனுப்பி, பேசவைத்து, பரிசு பெறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஏகத்துவ நெஞ்சங்கள் எதிர்பார்க்கின்றன.

இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் ஜாஹிலிய்யாச் சமூகத்தை, நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள் அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் சிதறிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. நரகின் விளிம்பில் இருந்தார்கள். இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்ட பின்னர், உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒரு போதும் காணப்பட்டதில்லை. (பார்க்க: அல்குர்ஆன் 03:103)

நபி (ஸல்) அர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களும் ஆவார்கள். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு, வேறு எந்தப் பிரவினரும் கேடு விளைவித்ததில்லை.

இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு-வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி (ரலி) அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால், காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது. அரசியல் காரணங்களுக்காக அலி (ரலி) அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல், அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி, அல்குர்ஆனுக்குத் தவறான விளக்கம் கூறி, கிளர்ச்சி செய்தனர்.

இதேபோல், இவர்களுக்கு எதிராக அலி (ரலி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே 'ஷீஆ” எனப்படுகின்றனர். இவர்கள்தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக 'ஷீஅத்து அலி” என்று அழைக்கப்பட்டனர். 'ஷீஆ” என்ற சொல் கட்சி, குழு என்ற கருத்தைத் தருகிறது.

அலி (ரலி) அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரினர், நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும், தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும், நபி (ஸல்) அவர்களைவிட உயர்வானவராகவும் கருதலானார்கள். இந்த வெறி முற்றிப் போனபோது, அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற உன்னத ஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.

இன்று, இவர்கள் பல பிரிவுகளாக, பல கொள்கைகளுடன் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஈரானி;ல் இவர்களின் ஆட்சியே உள்ளது. ஷீஆக்கள் இந்நாட்டில் நுழைவதற்கு சிலர் இன்று வழி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்ட 'ஷீஆக்கள் தான் உண்மை முஸ்லிம்கள்” என்ற பிரசாரம் கூட, சில நவீன 'கிலாபத்” கனவுலக இயக்கவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஏகத்துவக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு, அரசியலுக்கும் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டும் இயக்கங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு, 'ஷீஆப் புரட்சியாகிய ஈரானியப் புரட்சிக்கு” இஸ்லாமிய சாயம் பு+சிக் கொண்டிருக்கின்றன, இந்த இயக்கங்கள்.

இஸ்லாத்தி;ன் சிறப்பை மாசுபடுத்வதற்காக வரலாற்றில் பல வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகள் கொள்கைகள் கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இவற்றில் இஸ்லாத்தைச் சிதைப்பதில் ஷீஆக்கொள்கை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் காற்கூறில், ஈரானில் புரட்சி செய்த குமைனியால் அங்கு ஷீஆ அரசு நிறுவப்பட்டது. இப்புரட்சியை இஸ்லாமிய அடைமொழியுடன் பலர் நம் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர். 'சூடான், ஈரான் போன்ற நாடுகளின் இஸ்லாமிய வாதிகள் அதிகாரத்தையும் கைப்பற்றி இஸ்லாமிய மயப்படுத்தும் பாரிய வேலைத்திட்டங்களில் இறங்கி செயற்படுகின்றனர்....” என்று எம்.ஏ.எம். மன்ஸுர் மீள்பார்வையில் எழுதுகிறார். ஈரானில் விபச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. விபச்சாரமும் இஸ்லாமிய மயமாக்களின் பாரிய வேலைத் திட்டங்களில் ஒன்றா? சிந்திக்கமாட்டீர்களா?

நபி (ஸல்) அவர்களை மட்டுமே வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் அரசுதான், இஸ்லாமிய அரசாக இருக்க முடியும். ஷீஆக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு இஸ்லாத்திற்கு விரோதமானது. இதனை அவர்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் நூல்களிலுள்ள செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.இவை அறிஞர் பீஜே அவர்களின் சீஆக்களின் மறு பிரவேசம் எனும் நுலிலிருந்து பெறப்பட்டவை.

தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப்புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்களான அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

'(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸூல் (ஸல்), அலி (ரலி), பாதிமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேடமாகக் குறிப்பிட்டது, அலி (ரலி) ஆவார்”. இதில், நபியைவிட அலியை உயர்த்துகின்றனர். (அய்யாஷி தப்ஸீர் பகுதி-1 ப.128 நூருஸ்ஸகலைன் பகுதி-1 ப.238)

ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில் 'நபி (ஸல்) அவர்கள், ருகூவு, ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது, அவர்கள்: 'இறைவா உன் அடியார் அலியின் பொருட்டால், அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்” என்று இட்டுக்கட்டியுள்ளனர். அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் பாகம்-4, ப..226

அலியின் பொருட்டால், நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளன இது போன்ற குப்பைகள். இனி, அவற்றை கீழுள்ள அறிஞர; Pது அவர;களுடைய ஆய்வைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

'நான் மூஸா (அலை), ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால், அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன் என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தனது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

(அல் உஸூல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் - 1 ப.261)

'உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யு+சுப் நபியை பாழுங் கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யு+ப் நபியை சோதித்தான்” என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.

(அல்புர்ஹான் முன்னுரை பக்கம்-27.

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று, இறைவனை நெருங்கிய போது, 'முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்?”என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: 'அலி” என்றார்களாம் 'முஹம்மத்தே! திருப்பிப் பாரும்” என்றானாம் இறைவன். திருப்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.

தஃப்ஸீருல் புர்ஹான் பாகம்-2 பக்கம் - 404

'ஷீயாக்களின் பனிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.”

அல் உஸுலு மினல் காபி பக்கம். 258

இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.

அல் உஸுலு மினல் காபி பக்கம் 393

இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.

அல் உஸுலு மினல் காபி பக்கம் 402

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.

குர்புல் இஸ்னாத் பக்கம் 146

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புகள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரலி) கூறினார்களாம்.

அல் உஸுலுமினல் காபி பாகம் 19 பக்கம் 197

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பு+ரியான் பாத்தியா நாயகர்) வானம் பு+மியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன். நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன் என்றார்களாம்.

அல் உஸுலு மினல் காபி பாகம்-1 பக்கம்-261

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும் பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபு+ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது, முடியுமே என்றார்களாம்.

அல் உஸுலு மினல் காபி பாகம்-1 பக்கம்-470

அல்லாஹ், அலி (ரலி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்.

'யார் அலியை அறிந்து கொள்கிறாரோ, அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன். அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.

பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை ப-23

ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட, ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்லமாட்டார்கள் என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.

(அர்ரவ்லா மினல் காபி பாகம்-8 பக்கம்-78

ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார் என்றும் ஜஃபர் சாதிக் கூறினாராம்.

அர்ரவ்லா மிலல் காபி பாகம்-8 பக்கம்-315

ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மலை துளியளவுக்கும், கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்குப் பாவம் செய்தாலும், அவை பதியப்படுவதில்லை என்று ஷீஆக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.

உயு+னு அக்பாரிர் ரிளா பாகம்-2 பக்கம்-236

எல்லா நபிமார்களும், முஹம்மது (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல், எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல் என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர். என்று அலி (ரலி) கூறினார்களாம். அல் உஸுலு மினல் காபி பாகம்-1 பக்கம் - 197,198

ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள் இவற்றைக் கொஞ்சம் நிதானமாகச் சிந்தியுங்கள்! யு+த கிறிஸ்தவவர்கள் மிக மோசமானவர்கள். இஸ்லாத்திற்கு எதரான பயங்கரவாதிகள், அவர்கள் செய்த சதிகளைவிடப் பண்மடங்கு அதிகமாக ஷீஆக்கள் சதி செய்துள்ளார்கள். அவர்களை ஆதரிக்கவும் இஸ்;லாமிய வாதிகள் என்று எழுதவும் எப்படி உங்களுக்கு மனம் வருகிறது? புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே. இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார். இவற்றையா இஸ்லாமியப் புரட்சி என்கிறீர்கள்?

பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக்கூடிய ஆத்மீகமான அந்தஸ்த்தை மலக்குகளும், நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரெண்டு இமாம்களும், இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே, ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும் நபிமார்களும் அடைய முடியாத விசேட நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்கள். இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

விலாயதே பகீஹ் தர்குஸுஸே ஹுகூமதே இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58

குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு, அடிப்படையிலேயே இஸலாத்தை விட்டு வெளியேறிய பிறகு, அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமியப் புரட்சியாகும்? அல்லாஹ்வுக்குப் பயந்து சொல்லுங்கள்! இவ்வாறுதான் உங்கள் புரட்சியும் இருக்குமா?

தொடரும் .................


நன்றி: http://www.kadayanalluraqsa.com/

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: