அதிஷ்டமில்லை ? (No Luck?)

மாற்றங்கள் தேவை - சுவை 13


                                                                                கடந்த 08, 04, 2010 ன் தொடர் .................02
 
அதேநேரம் அவரது வைத்திய தொழில் மகத்தானது எனது தொழில் மரியாதை கெட்டது என்று தன்னை தாழ்த்திப்பார்ப்பது கோளைத்தனம்.

இதில் முக்கியமாக கூர வேண்டிய சில விடயங்கள் தான்;

1- உலகில் செருப்பு தொழில் செய்த, செய்கின்ற பல உண்மையான பணக்காரர்கள், நேர்மையானவர்கள், மரியாதைக்குரிய மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், வாழ்கின்றார்கள்.

2- தனது தொழிலை (எதுவானாலும்) சரியாக நம்பிக்கை கொள்ளாத, நேர்மையாக நடக்காத, புதிய திட்டங்களுக்கேற்ப தனது முயற்சியை மாற்றிக் கொள்ளாத பலர் தோல்வியடைந்திருக்கின்றார்கள்.

3- செருப்புத்தொழில் செய்வதற்கும் சிகை அழங்காரத்தொழில் செய்வதற்கும் பல்கலைக்கழகம் சென்று படிக்க முடியாது. அந்த பாடத்தை செருப்பு தைப்பவரிடமும் சிகை அழங்காரம் செய்பவரிடமும் மட்டும் தான் கற்றுக்கொள்ள முடியும்.

4- இந்த தொழிலை அடிமட்டத்தில் வைத்து தாழ்மையாக பார்த்தால் நாட்டில் எல்லோருமே நாளுக்கு நாள் புதிய பாதனிகளையே பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவையும் பாதனிகளை சரி செய்வதற்குரிய ஆல் இல்லாது போகின்ற துர்ப்பாக்கியகரமான நிலையும் ஏற்படும்.

தலை முடி எல்லை மீறி வளர்கின்ற போது தேவையானளவு கத்தறித்துக்கொள்ளமுடியாத, சிகை அழங்காரம் செய்து கொள்ள முடியாது போகும். அதனால் எது ஆண் எது பெண் என்பதை வேருபடுத்தி பார்க்கமுடியாதளவு ஆண்களும் பெண்களை பேன்று தலை முடியை வளர்த்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்த நிலையும் ஏற்படும். சரியான கலாச்சாரம் இல்லாது போகும்.

5- வைத்தியசாலையில் நோயாளியின் நோய் தீர்க்கும் ஒரு சிறந்த வைத்தியர் தனது வைத்திய தொழிலை விட்டுவிட்டு சிகை அழங்கார தொழில் செய்ய நினைத்தால் அதில் முன் அனுபவமுள்ள ஒருவரிடத்திலேயே அது தொடர்பான முழு பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த திறமையான வைத்தியர் தந்து வைத்திய துறையில் உள்ள அனுபவத்தையும் திறமையையும் வைத்து கொண்டு சிகை அழங்காரம் செய்ய முடியாது.

எந்தளவு ஒரு சிகை அழங்காரிக்கு வைத்திய துறை கஸ்டமானதாக இருக்கின்றதோ அது போல ஒரு வைத்தியர் சிகை அழங்காரத்தொழிலுக்கு வருவதும் கஸ்டமானதாகும்.

ஒவ்வொருவருக்கும் விரும்பி தேர்ந்தெடுத்து அவரவர் செய்வதும், அவரவருக்கு கிடைத்ததும் தான் அதிஷ்டம், ஆனால் அதில் நாம் எதிர்பார்ப்பது போல வருமானங்களையும் வசதிகளையும் கெளரவமான முறையில் செய்வதற்கான புதிய நுட்பங்களையும் வகுப்பதும் முயற்சிப்பதும்தான் தான் செய்கின்ற தொடர்கின்ற தொழிலுக்கு மேலதிக அதிஷ்டத்திற்கான தேவையாகும்.

ஒரு மாணவன் ஏன் தான் எதிர்பார்க்கின்றது போல உயர் புள்ளிகளை பெற முடியவில்லை, 
அதிஷ்டமில்லையா?
அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா?

ஒரு மீன் வியாபாரி தான் நினைப்பது போல தனது தொழிலைக்கொண்டு முன் செல்லமுடியாமலிருக்கின்றது,
அதிஷ்டமில்லையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா?

ஒரு தொழிலாளி தனது பகுதியில் வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொழிலதிபரை போன்று முன்வரமுடியவில்லை?
அதிஷ்டமில்லையா?
அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா?

ஒரு குடிமகன் ஏன் பிறரை போல சாதாரண மனிதர்களை போல வாழ முடியவில்லை? அதற்கு காரணம்
அதிஷ்டமில்லையா?
அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா?

இஸ்லாமிய நிழலில் பொதுவாக எமது பகுத்தறிவை கொண்டு சிந்தித்து பார்த்தால் அதற்கான நியாயங்களை கண்டுகொள்ளலாம். உதாரணமாக; நாம் யாரை போல் அல்லது எப்படி வர வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதனை எமது செயற்பாடுகளுடன் பழக்கவழக்கங்களுடன் ஒப்பீட்டு நோக்கினால் காரணங்களையும் முன்னேற்றத்திற்கான புதிய நுட்பங்களையும் மிக இலகுவில் இலவசமாக தெறிந்து கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்.

ஒருவர் தனது ஒட்டகத்தை பாலைவனத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல், செய்யாமல் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் பொருப்புச்சாட்டுவதாக கூறினால் எப்படி இஸ்லாம் அதை ஏற்றுக்கொள்ளாதோ அது பொன்றது தான் இந்த விடயமும்.

தூண்டியல் போட்டு திமிங்கில மீன் பிடிக்க நினைப்பது, காற்றில்லாத போது பட்டமிட நினைப்பது எவ்வளவு முட்டால் தனமானதோ அது போன்றது தான் தேவையான முயற்சிகளை தேவையான, போதுமானளவு மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு எனக்கு அதிஷ்டமில்லை என்று கூருவது படைத்தவனை குறைகூருவதாகும்.

நாங்கள் யாரை அதிஷ்டசாலிகள் என்று சொல்லுகின்றோமோ அவர்களது நடத்தைகளையும் எம்மையும் ஒப்பிட்டு பார்த்தால் எமக்கும் அவர்களூக்குமிடையிலுள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளுவதுடன் எமது நட்த்தைகளிலுள்ள குறைப்படுகளை இனங்கண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும்.

அதிஷ்டசாலிகள்:
1- இறைபக்தியுடையவர்கள், அல்லாஹ்வை பயந்து பணிந்து நடப்பவர்கள்.

2- பொருமையாக இருந்து காரியத்தை முடிக்கக் கூடியவர்கள்.

3- லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு ஏவியது போன்று பூமியில் தாழ்மையாக நடப்பவர்கள், வாழக்கூடியவர்கள்.

4- வீண் விரயம் செய்வதில் கவனமாக இருக்கக் கூடியவர்கள், எப்போதும் எதையும் பிரயோசனமான முறையில் கழிக்க, செய்ய நினைப்பவர்கள், செய்பவர்கள்.

5- எதை செய்வதாக இருந்தாலும் திட்டமிடலுடனும் ஆலோசனைகளுடனும் செய்வார்கள்.

6- தனது தொழிலில் வருமானத்தில் சேமிப்பு திட்டத்தை வகுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

7- நாளைய எதிர்பார்ப்புக்களை இன்று கனவு காணக்கூடியவர்கள்.

8- அனுபவசாலிகளிடத்தில், அறிஞர்களிடத்தில் வெற்றியாளர்களிடத்தில் ஆலோசனைகள் கேட்டு அடுத்த கட்டத்திற்கு கால்வைக்கூடியவர்கள்

9- கலாகத்ர் தொடர்பாக சந்தேகமற்றவர்கள். நினைப்பதை நினைத்த நேரத்தில் செய்யக்கூடியவர்கள், தோல்வியின் பின் சிந்திக்கக்கூடியவர்கள்

10- எதிலும் எதையும் நேர்மையாக செய்ய வேண்டும், வாழ வேண்டும் எம்பதில் உருதியாக இருப்பார்கள்.


11- தான் எதிர்பார்ப்பது, முயற்சிப்பது கைக்கு கிட்டும் வரை தேவையான தியாகங்களை செய்யக்கூடியவர்கள், சவால்களை முகங்கொடுக்க தயங்காதவர்கள்.

12- தனது நடத்தைகள், செயற்பாடுகள் குறித்து எப்போதும் சுய பரிசோதனை செய்து கொள்ளுவார்கள்.

13- விட்டுக்கொடுப்பு மிக முக்கியமாக இருக்கும். தற்காலிகமாக பசித்திருத்தல், தாகத்திருத்தல், தூக்கமின்மை, உறவுகளை பிரிந்திருத்தல் அனைத்திலும் விட்டுக்கொடுப்புடன் நடப்பர்..

14- நேர முகாமைத்துவம் முக்கியமாக இருக்கும்.

15- தன்னை கடந்து செல்லுகின்ற நாற்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் மையில் கற்கலாக நினைப்பவன், முயற்சிப்பவன்,

16- எப்போதும் ஒரே இலட்சியத்துடன் செயற்படுவர். நேர்மை என்பது தனது அகராதியில் கிடையாத ஒரு சொல், அதனால் தான் தானும் தன்னை நம்பிய பொது மக்களும் கஸ்டப்படுகின்றார்கள், நஸ்டப்படுகின்றார்கள்.

அதிஷ்டமில்லாதவர்கள்:


1. நினைத்தால் அல்லது கஸ்டத்தின் போது மட்டும் கடவுளை ஞாபகப்படுத்தக் கூடியவர்கள்.

2. ஒரே இரவில் சாதிக்க நினைப்பவர்கள்.

3.பெருமையடித்து தெரியக்கூடியவர்கள், பிறரை மதிக்கும் தன்மையற்றவர்கள்.

4. வீண் விரயங்கள் பற்றி சிந்திக்காதவர்கள், அதில் அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள
5. உடனுக்குடன் தொலைத்துவிடக்கூடியவர்கள்.

6. பகல் கனவா? என கேள்வி கேற்கக்கூடியவர்கள்.

7. தானே எல்லாம் என்று நினைக்கக்கூடியவர்கள். ஆலோசனை செய்ய தகுதியானவர்கள் தன்னை தேடிவந்து ஆலோசனை தற வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள்.

8. சாஸ்திரகார்களை நம்பி செயற்படக்கூடியவர்கள்.

9.  அதெல்லாம் முடியாத காரியங்கள்.

10. சுய பரிதோதனை, மீள் பரிசீலனை அனைத்தும் தோல்வியின் பின்.

11. விட்டுக்கொடுப்பு என்பது அசாத்தியமானது

12. தேவைப்படும் போது மட்டும் நேரம் பற்றி சிந்திப்பவர்,

13. தூண்டியல் இல்லாமல் மீன் பிடிக்க நினைப்பவர்கள்,
14. உடனுக்குடன் உள்ளவைகளை மட்டும் வைத்து சிந்திக்கும் மனப்பாங்கு.

15. நாளுக்கு நாள், சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் மாருபட்ட கொள்கை.

நாம் இப்போது எங்கே? நாம் அதிஷ்டசாலிகள் தானா? எமக்கும் அதிஷ்டம் கிடக்குமா? ஏன் எமக்கு அதிஷ்டம் படுவதில்லை? என்ன காரணம்? எப்படி சிலர் மட்டும் அதிஷ்டசாலிகள்? என்ற பலர் கேற்கும் கேள்விகளுக்கு மேலே அடையாளப்படுத்திய விடயங்கள் அனைத்தும் போதிமான பதிலாக அமையும்.

அன்பின் சக தோழர்களே இதனை அட்டவணை படுத்துகின்ற போதே எனக்குள் கிடக்கும் தோல்விக்கான பல விடயங்களை காரணங்களை அகற்றுவதற்கு உருதி கொண்டுவிட்டேன்.

இங்கே அடையாளப்படுத்தியுள்ள விடயங்களை எப்படி நடைமுறை ரீதியாக கண்டு கொள்வது அல்லது எப்படி எமது நடைமுறையில் உயிர்பிப்பது என்ற சந்தேகம் இருக்கின்றது?

நானும் நாளைய தினம் ஒரு அதிஷ்டசாலி என்று நினைப்பவருக்கு அது மிகவும் இலேசான விடயம், சாத்தியமான ஒரு அம்சம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழரை பார்த்து இவர் சுவர்க்க வாசி என்று முன்மொழிந்ததை கண்ட வேறொரு தோழர் நானும் சுவர்க்கத்திற்குள் நுழைய வேண்டும், அதற்கான இரகசியம் என்ன? என்பதை கண்டு கொள்ள அந்த சக தோழரை பின் தொடர்ந்து அவருடன் அவரது வீட்டில் தங்கிய செய்தி எமக்கு மிகப்பெரும் பாடமாக அமைய வேண்டும்.

நாம் எப்படி அதிஷ்டசாலிகளாக வர நினைக்கின்றோன், யாரைப்போல் வர, வளர நினைக்கின்றோம் என்பதற்கு ஒரு பட்டியளை தயாரித்துக்கொள்ளுவோம்.

தேவையான பண்புகள், செயற்பாடுகளை கொண்ட ஒரு பட்டியல்,

இந்த பட்டியலை யாரை முன்மாதிரியாக கொண்டு நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என்பதற்கு உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற வரலாற்று மனிதர்களில் நாம் விரும்பும் பத்து பேரை தெறிவு செய்து பட்டியலிடல்.

இப்போது இந்த பத்து நல்ல மா மனிதர்களில் உள்ளவற்றை முன்மாதிரியாக கொண்டு அதனை பின்பற்றுவோம், எந்த கஸ்டங்கள், சவால்கள் வந்தாலும் அவைகளுக்கு முகங்கொடுக்க தயாராகிவிட்டால் நாமும் அதிஷ்டசாலிகள் தான் என்பதை நம்புங்கள், இதுதான் நிச்சயம்.

நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மனைவியையும் அன்பு மகனையும் உணவில்லா, நீரில்லா, பாதுகாப்பில்லா வகையில் விட்டுவிட்டு இஸ்லாத்திற்காக, அல்லாஹ்வின் கட்டளைக்காக சென்றது “தியாகத்திற்கு” எமக்கு கிடைத்த மிகப்பெரும் வரலாற்று முன்மாதிரியாகும்.

அல்லாஹ்வின் கட்டளை பலியிடுவது தான் என்றால் என்னை அருங்கள் என்று சொன்னது நபி இஸ்மாயில் (அலை) அவர்களிடத்தில் எமக்கு கிடைத்த முன்மாதிரி.

“அப்போது என்னுடைய அழைப்பு, அவர்களுக்கு விரண்டோடுவதையே அன்றி, (வேனொன்றையும்) அதிகப்படுத்தவில்லை.” (அல் குர்ஆன்- 71 : 06)

எனது அழைப்புக்கு மக்கள் என்னை கண்டு விரண்டோடுவதை தவிர பதில் இல்லை என்ற போதும் எதிர்பார்ப்போடு பிரச்சாரம் செய்தது முயற்சித்தால் கிடைக்கும் என்று எதற்கும் “எதிர்பார்த்து செயற்படுவதற்கு” நூஹ் அலை (ஸல்) அவர்களிடத்திலிருந்து எமக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரும் முன்மாதிரியாகும்.

இது அனைத்தும் எமக்கு வழிகாட்ட வந்த நபி மார்களிடத்திலிருந்து எமக்கு கிடைக்கும் முன்மாதிரிகள்.

தொடரும் .................


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: