வளைகுடாவிலிருந்து ஒரு குரல்.....

(இது சிறுகதையல்ல... சோகக்கதை)

பகுதி 2

இட ஒதுக்கீடு இல்லையெனில் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பு என்பது குதிரை கொம்புதான் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. எனக்கு இன்டர்வியூ வந்த சில இடங்களுக்கு நான் சென்ற போது இன்டர்வியூவும் நடந்தது. பதில்களையும் நான் நன்றாகவே சொன்னேன். ஆனால் அப்பாய்ன்மென்ட் ஆர்டர் வரவில்லை. சில இடங்களில் நடத்தப்பட்ட இன்டர்வியூவில் என்னால் பதிலே சொல்ல முடியவில்லை.
நீ ஏறி வந்த படிகள் எத்தனை?,
நீ வந்த பேருந்தில் எத்தனை பயணிகள் இருந்தனர்? என்பது போன்ற கேள்விகள் அவை. ஏன் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கின்றனர்? என இன்டர்வியூவிற்கு வந்த நண்பர்களிடம் கேட்டபோது, இன்டர்வியூவிற்கு முன்பாகவே லஞ்சம் கொடுக்கப்பட்டு அதிகாரிகள் தாங்கள் விரும்பியவருக்கு இந்த வேலையை கொடுத்துவிட்டனர். இன்டர்வியூ செய்து தான் வேலை கொடுக்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் கண்துடைப்பிற்காக இதை செய்கின்றனர் என்று அவர்கள் விளக்கமளித்தனர். அடப்பாவிகளா?
பணம் இருப்பவனுக்கு தான் வேலையா?
தகுதிக்கும் திறமைக்கும் வேலை இல்லையா?

நான் இந்த சமூகத்தை நொந்து கொண்டே வேலை தேடுவதும் இன்டர்வியூவிற்கு செல்வதுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கவே என் தங்கை வயதுக்கு வர, தாயோ மயக்கமுற்று வீழ்ந்தாள். அன்றாட நாட்களை ஓட்டவே நாம் இத்தனை சிரமப்படுகின்றோமே இனி இவளை எவ்வாறு கரை சேர்ப்பது? என்பதே என் தாயின் மயக்கத்திற்கு காரணமாம். வரதட்சணை பேய் ஆட்டிப் படைக்கும் இந்த உலகில் பணமின்றி நான் என்ன செய்வது?

ஒருநாள் இரவில் நான் வீட்டிற்கு சென்றபோது என் தாய் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டாள். என் தந்தையின் கண்களில் கண்ணீர். என்னை பார்த்தும் என் தங்கை ஓடிவந்து என்னை கட்டி அணைத்தாள். இன்றைய சம்பவங்கள் வழக்கத்திற்கு மாறாக இருக்கின்றனவே என எண்ணி என் தங்கையை பார்த்தேன். நாம் தற்கொலை செய்து கொள்வோம் எனக்கூறி அம்மா நமக்கெல்லாம் உணவில் விஷத்தை கலந்து தயாராக வைத்திருக்கிறாள். உனக்காகத் தான் காத்திருக்கிறோம் என்றாள் எனது தங்கை.

எனக்கு தூக்கிவாரி போட்டது. பிரமை பிடித்தவனை போல் ஆனேன். ஆமாமப்பா! பொருளாதார பித்து பிடித்த இந்த உலகத்தில் நம்மால் போட்டி போட முடியவில்லை.
தங்கைக்கு வயதாகிக் கொண்டே போகிறது.
அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை.
மருந்து வாங்க பணமில்லை.
 உனக்கு கிடைக்கும் பணமோ இன்டர்வியூ செல்லவே போதவில்லை. இந்நிலையில் எப்படி நம்மால் வாழ முடியும். மருந்து இல்லாமல் அப்பா நோயால் துடிப்பதை என்னால் காண சகிக்கவில்லை. அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோவிற்கு பணமில்லை. திருமண வயதிலுள்ள மகள் ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாள் என்ற செய்தியை நாம் கேட்குமுன் செத்துவிடுவோமப்பா! என்று என் தாய் கதறி அழுதாள்.

எனக்கு கண்ணீர் வரவில்லை. ஏற்கனவே அது வற்றிபோயிருந்தது.

ஓடிச்சென்று அந்த உணவை தெருவில் வீசினேன் நான்.

அம்மா! மிகப்பெரிய பாவத்தை நாம் செய்ய இருந்தோமே? தற்கொலை செய்வது பாவம் என்றும் அவ்வாறு செய்தவர்களுக்கு நரகம் தான் என்பதும் உங்களுக்கு தெரியாதா? இந்த உலகத்தில் ஏற்பட்ட சில வேதனைகளுக்காக மிகப்பெரிய வேதனையை நம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அல்லாஹ் தரும் சோதனை இது. அவன் நம்மை கைவிட மாட்டான். நமக்கு உணவளிப்பது அவனது பொறுப்பு. அவன் மீது நம்பிக்கை கொள்வோம் என்று கூறி அந்த இரவை பட்டினியாக கழித்தோம். காலையில் அம்மாவிடம் விஷயத்தை எடுத்துக் கூறி இனிமேல் அந்த எண்ணமே நமக்கு வரக்கூடாது என்று வாக்குறுதி வாங்கினேன். அம்மாவை கவனித்துக் கொள் என்று தங்கையிடம் கூறிச் சென்றேன்.

இத்தகைய சூழல் ஏற்பட்ட பின் இனியும் வேலை கிடைக்கும் என காத்திருப்பது வீணான வேலை என தோன்றியது. வெளிநாட்டுக்கு செல்ல தீர்மானித்தேன். வெளிநாட்டிற்கு செல்லலாம் எனில் எனது உழைப்பு எனது தாய்நாட்டிற்கே பயன்பட வேண்டும் என்ற கொள்கை அதற்கு குறுக்கே நின்றது. என் உழைப்பு என் நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்ற கொள்கையை விட அயல்நாட்டில் சம்பாதித்து என் தாய்நாட்டிற்கு அனுப்புவேன் எனும் கொள்கை அதைவிட சிறந்ததல்லவா? என எனது நண்பன் கூற எனது கொள்கையை நான் கைவிட வேண்டி வந்தது. பட்டினியால் பரிதவிப்பவனுக்கு கொள்கை ஒரு கேடா என எண்ணி வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் அந்த பாயிடம் சென்றேன்.

விஷயத்தை கிரகித்த அவர் எனது சர்ட்டிபிகேட்டுகளை பார்த்துவிட்டு, நல்ல நேரத்துல வந்தீங்க தம்பி! உங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு வேலைக்கான விசா இருக்கு. மாசம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம், ஆனால் உடனடியாக போகவேண்டும் என்றார். (எனது சர்ட்டிபிகேட்டை பார்வையிட்ட அவருக்கு ஆங்கிலமே தெரியாது என்பது பின்னர் தான் தெரிந்தது). உடனடியாக செல்ல என்னிடம் பாஸ்போர்ட் இல்லையே என்றேன். பரவாயில்லை! பணம் கொடுத்தால் ஐந்து நாளில் பாஸ்போர்ட் உன் கையில் கிடைக்கும் என்ற அவர் விசாவுக்கு எண்பதாயிரம், டிக்கட், பாஸ்போர்ட், பிற செலவுகளுக்கு 30 ஆயிரம் ஆக ஒரு லட்சத்தி பத்தாயிரம் ஆகும், பணத்தை ரெடி பண்ணு என்று கூறினார்.

தற்கொலையிலிருந்து தப்பித்த நான் என்ன ஆனேன்! பணம் கிடைத்ததா? வெளிநாடு சென்றேனா? இன்ஷாஅல்லாஹ் மூன்றாம் பகுதியில் வரைகின்றேன்....


நண்பர்களே! சகோதரர்களே!


ஒரு குடும்பமே தற்கொலை செய்யுமளவிற்கு போய்விட்டதற்கு யார் காரணம்?
பணம் இருப்பவனுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு எனில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம்களின் நிலை என்னாவது?
இந்த இயலாமை நம்மிடமிருந்து மாற வேண்டாமா? மாறவில்லையெனில் மாற்ற வேண்டாமா?
நமக்கு இந்தியாவில் வேலை வேண்டும். அதற்கு என்ன செய்வது?
பொருளாதாரத்தில் பின்னடைவில் இருக்கும் நமக்கு தற்போதைய தேவை இட ஒதுக்கீடு!
அந்த இட ஒதுக்கீட்டினால் மட்டுமே நமது சமுதாயம் ஓரளவு எழுச்சி பெற முடியும்!
அதை பெறும் காலம் கனிந்து கொண்டிருக்கின்றது. அதை அடைவதற்காக களம் தயாராகிவிட்டது. ஆம்! போராட்டக்களம் தயாராகி விட்டது.
ஜூலை 4 ல் ஒன்று படுவோம்! ஓங்கி குரலெழுப்புவோம்! உறங்கிக் கிடக்கும் மத்திய அரசை தட்டி எழுப்புவோம்!

நீரின்றி அமையாது உலகு! இது பழமொழி

முஸ்லிமின்றி அசையாது பாரதம்! இது புதுமொழி

தோழா! புறப்படு நீ சென்னையை நோக்கி!
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும் உன் சந்ததிகளுக்கு நீ கொடுக்கும் அளப்பறிய சொத்து.
தென்றலாய் புறப்பட்டு புயலாய் பரிணமித்து சுனாமியாய் சீற்றம் கொள்!
ஆம் உரிமையை தர மறுக்கும் மத்திய அரசுக்கு நமது ஒற்றுமையை காண்பிப்போம்!
உரிமைகளை வென்றெடுப்போம்!!

-- ஒரு வளைகுடாவாசி--

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

8 comments:

Anonymous said...

eluththaalarai vaazthukkal

Anonymous said...

why getting too late?

thanks
Munaf

Anonymous said...

Dear Brother,

please post the 3rd part.

thanks
Amir Naser - India

Anonymous said...

Assalamu alaikkum,

this will motivate to whom try to go to abroad.

thanks

அப்துல் ரஹ்மான்.ஜ said...

ஏழைகளின் யதார்த்த அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டும் அருமையான வலித்தொடர். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.


வெறும் வலிகளைப் பங்கு வைக்கும் தொடராக மட்டும் அமையாமல், இறுதியில் இந்த அவல நிலைகளுக்கான தீர்வுகளையும் முன் மொழிவது போன்று அமைந்தால் மிகுந்த சிறப்பாக இருக்கும்.


தொடருங்கள் சகோதரர் ரிழ்வான்.


- அப்துல் ரஹ்மான்

bremadasa said...

Salam.

Dear Brother,

Can you forward me the 1st part to my ID
eraynesan@gmail.com

Jazak' Allah Khair

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

அல்ஹம்துலில்லாஹ்,

பல சகோதரர்கள் எம்முடன் இணைந்து என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

சகோதரர் eraynesan@gmail.com அவர்கள் கேட்டது போல அவருக்கு அந்த முதல் பகுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அல்லது இந்த லிங்கில் உள் நுழையவும்.


நன்றி
உங்கள் அன்பன்.

Issadeen Rilwan said...

அந்த லிங்க்
http://changesdo.blogspot.com/2010/05/blog-post_05.html

நன்றி