தொடர் நான்கு:
இந்த வார்த்தைகள் எனது தாயை மயிர் சிலிர்க்கச் செய்ததுடன் புன்முறுவலுடன் இடம் நகர்த்தியது
அன்று புதன் கிழமை. இரவு எனது அரையிலே பாடித்துக்கொண்டிருத போது, தூக்கம் மேலிட்டு என்னையறியமலே உரங்கி விட்டேன். புத்தகங்கள், கொப்பிகள் எல்லாம் திறந்த நிலையில்...
என்னைப் பார்க்க வந்த தந்தை தூக்கத்திலிருந்த என்னை எழுப்பிவிடாமல் மெதுவாக எனது பயிற்சிக்கொப்பியை நோட்டமிட்டுள்ளார்.
ஆங்காங்கே பிழைகள், தவறுகள், ஆசிரியர் குறிப்புக்கள் இருப்பதை அவதானித்துள்ளார். கவனித்திருக்கிறார்,
அடுத்த நாள் இரவு படிப்பதற்கு உட்கார்ந்த போது என்னுடன் அவரும் அமர்ந்தார். எனக்கு பக்கத்தில் அமர்ந்த போதுதான் நேற்று எனது புத்தகங்களை கொப்பிகளை பார்த்ததை புரிந்துகொண்டேன்.
என்னிடம் கவனக்குறைவு மற்றும், போதிய மனன சக்தியின்மையை உணர்ந்தவாராக பேச்சைத் தொடங்கினார்..
உனது கை எழுத்து அழகாக இருக்கிறது, புத்தகங்களுக்கு அழகாக உரை இட்டுள்ளாய் என்பதையெல்லாம் கூறி, எனது மனதை சந்தோசப்படுத்தினார். அந்த வார்த்தைகள் என்னை குளிரச் செயதது.
நேற்றுப் பார்த்த அதே கொப்பியை எடுத்து அதிலே அவர் கண்ட பிழைகள், ஆசிரியர் குறிப்புக்களை விரல் வைத்து ஒவ்வொன்றாக வாசித்துக் காண்பித்தார்.
எனது கவனக்குறைவுக்கு என்னை திட்டுவாரா? அல்லது எதிர்காலத்தில் இந்த பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு ஏதாவது ஆலோசனை சொல்லுவாரா? என்பதற்காக காத்திருந்தேன்.
“வா வா...“ என்று என்னை இரவு உணவு மேசைக்கு அன்பாய தாழ்மையாய் அழைத்துச் சென்றார்.
எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியமும் இன்னொரு பக்கம் க் க் வென இதயத் துடிப்பும். உண்ண ஆரம்பித்து சில வினாடிகளில்... மகனே! என்ற அமைதி அழைப்பு, நான் எதிர்பார்த்ததை சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தில் காத்திருந்தேன்.
மகனே! நாம் எப்போதும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும்,
நாம் பிரார்த்திப்பது போல் எம்மைச் சுற்றியுள்ளவைகளும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கின்றன. அதை அல்லாஹ் நமக்கு அவனது வேத நூலில் சொல்லிக்காட்டுகிறான்.
“வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் (தமது தேவைகளைக்) கேட்கின்றனர். அவன் ஒவ்வொரு நாளும் அலுவலில் இருக்கிறான்.” (அர்ரஹ்மான் 29)
காலையானதும் தன் கூட்டை விட்டு உணவு தேடி பறந்து செல்லும் பறவைகள் உட்பட,
எமது பூமியில் ஆணியாய் ஆங்காங்கே அரையப்பட்டிருக்கும் மலைகள் உட்பட,,
கடலுக்குள் இரை தேடி ஓடும் மீன்கள் உட்பட,
காலையில் கலப்பைகளுடன் வயல் நோக்கி நகரும் உழவாளிகள் உட்பட,
வேலை தேடி ஊர் விட்டு ஊர் தேடி பயணிக்கும் தொழிலாளிகள், இப்படி அனைவரும் அல்லாஹ்விடத்தில் கைகூப்பி பிரார்த்திப்பதை அல்லாஹ் எதிர்பார்க்கின்றான்.
மகனே! ஒரு மாணவன் எப்போதும் தனது கல்வியை அதிகப்படுத்திக் கொள்ள, படிப்பில் வரும் மனன சக்தி குறைபாடு, பிழைகள் என்பதற்காக எப்போதும் அல்லாஹ்விடத்தில் கையேந்த வேண்டும்.
யா அல்லாஹ்! எனக்கு கல்வி, ஞானத்தை அதிகப்படுத்துவாயாக என்று பிரார்த்திக்க வேண்டும்.
”உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான். (முஹம்மதே!) அவனது தூதுச் செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்கு முன் குர்ஆன் விடயத்தில் அவசரப்படாதீர்! "என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து” எனக் கூறுவீராக!" (தாஹா 114)
ஆசிரியரின் கேள்விகளுக்கு சரியாக பதிளலிக்கவும், மாணவர் மன்ற மேடைகளில், பகிரங்க நிகழ்வுகளிலும் தெளிவாக விடயங்களை எடுத்துவைக்கவும் எமது நாவான்மை தெளிவாக இருப்பதற்கும் சிந்தனை சரியாக இருப்பதற்கும் நாம் அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டும்.
"என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.” என்றார் (தாஹா 25 – 28)
இவைகள் அல்லாஹ் தனது நபிமார்களுக்குக் கற்றுக் கொடுத்தவை, நபிமார்கள் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்தவைகள், எமக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
இப்படியே உணவு முடியும் வரை அல்லாஹ்விடத்தில் எமது தேவைகளை எப்போதும் கேட்க வேண்டும், அவனைப் பிரார்த்திக்க வேண்டும் என்பது போன்ற சில விடயங்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். என்னை அறியாமலே வழமையாக உண்ணுவதை விட அதிகமாக உண்ட நிலையில் தந்தையின் வார்த்தைகளை செவியுற்ற நிலையில் இடத்தை விட்டு ஓய்வரைக்குச் சென்றோம்.
அப்போது ஒரு சில விடயங்களை எனது ஞாபகத்திற்கு எடுத்துத் தந்தார், கேட்பதற்கு ஆர்வமாக இருந்தது.
முந்திய வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றிருந்த போது எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு வயது முதிர்ந்தவர் செய்த பிரார்த்தனைச் சம்பவத்தை எனக்கு சொல்லிக்காட்டினார். தொழுகை முடிந்து சில நிமிடங்களில் இரண்டு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் அல்லாஹ்விடத்தில் அந்த வயது முதிர்ந்த மனிதர் பிரார்த்தித்த வண்ணம் இருந்தார். இவர் தனது தேவைகள் அனைத்தையும் அல்லஹ்விடத்தில் கேட்டு தனது பிரச்சினைகளைச் சொல்லி தன்னை திருப்திப்படுத்திக் கொள்கிறார். இதைத் தான் ஒவ்வொரு மனிதரும் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார்.
இதில் ஒரு சுவாரஷ்யத்தையும் மறவாமல் சொல்லவேண்டும் அதாவது, அடுத்த நாள் தொழுகை முடிந்ததும் நான் என்ன செய்கிறேன் என்பதை தனது கடைக்கண்களால் பார்த்த வண்ணம் இருந்தார். நடைமுறையில் என்னை தினந்தினம் சிந்திப்பதற்கும் திறம்பட செயற்படுவதற்கும் தூண்டும் விதமாக என் செயல்கள் ஆரம்பமாயின.
என்னை ஒரு கவிஞனாக நினைத்து ஹைகோ வரிகளில் அதை எண்ணிப்பார்த்தேன்,
கையேந்தி கண்ணீர் சிந்தி கூப்பிடு அவனை,,,,,,,,
படரும்...........
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
2 comments:
>>>கையேந்தி கண்ணீர் சிந்தி கூப்பிடு அவனை,,,,,<<
GOOD Words
ameer - Oman
நாளும் பொழுதும் தன் தாயுடைய அரவணைப்பிலே வளரும் சிறார்கள், தன் தந்தையின் ஸ்பரிஸங்களையும், அரவணைப்புக்களையும் எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்பதையும், பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் எதிர்பார்ப்புக்களுக்கு எவ்வாறு இசைய வேண்டும் என்பதையும், அப்படி இருக்குமெனில் தன் தந்தையின் பேச்சு, சிந்தனைத்திறன்,(ஒரு விஷயத்தை விளக்குவதர்க்காக மார்க்கம் சார்ந்த உதாரணங்களை) எடுத்து வைக்கும் பாணி,,,,,,
கட்டுரையாளர் அழகாக தொட்டுக் காட்டுகிறார்.
இவைகளை அவதானிக்கும் பிள்ளைகள், தங்களது ஹீரோக்களாக தன் தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு செயல் படுவார்கள் என்பது உளவியல் சொல்லித் தரும் பாடம்.
பிள்ளைகளின் தவறைக் காணும் போது அதனை பக்குவமாக விபரிக்க பெற்றோர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை கட்டுரையாளர் விவரிக்கும் நடை பிரம்மிக்க வைக்கிறது.
““வா வா...“ என்று என்னை இரவு உணவு மேசைக்கு அன்பாய் தாழ்மையாய் அழைத்துச் சென்றார் ”
இது போன்ற வசனங்கள் வாசிக்கும் போது கட்டுரையை மீண்டும் மீண்டும்(சுவாரஷ்யத்துடன்) படிக்கத் தூண்டுகிறது.
மாஷா அல்லாஹ் “என் மகன் ஒரு லீடர் (My son is a Leader)“ தலைப்புக் கேற்ற அருமையான கட்டுரை.
மாற்றங்கள் தொடரட்டும் ஓர் உளவியல் பார்வையில்.....
நன்றி
அன்ஸார்-தோஹா
Post a Comment