என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 05



தொடர் ஜந்து:

“மகனே! தூங்கும் நேரமாகி விட்டது. இன்ஷா அல்லாஹ் நாளை பேசலாம். நீ போய் தூங்லாமே! என்று என்னை பணித்துவிட்டு How Babies Think (குழந்தைகள் எவ்வாறு சிந்திக்கிறார்கள்?) என்ற Alison Gopnik (அலிசன் கோப்னிக்) எழுதிய ஒரு கட்டுரையை  கையில் எடுத்து வாசிக்கலானார்.

முன் எப்போதுமில்லாத அதிக மதிப்பினாலும் மரியாதை கலந்த ஒழுக்கத்தினாலும் “அக்கட்டுரை எப்படியானது“ என்று கேட்க தயங்கியதனால் கேட்காமலே கட்டிலுக்குச் சென்று விட்டேன்.  
அதே நினைப்பில் தூங்கிய நான், அடுத்த நாள் அந்த கட்டுரை தொடர்பாக விசாரித்தேன், அப்போது அவர் வாசித்ததை எனக்குச் சொல்ல ஆரம்பித்தார்;

சிறுவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், அவர்களால் எந்தளவு சிந்திக்க முடியும் என்பதைப் பற்றி பேசுவதாக அந்த ஆக்கம் அமைந்திருந்தது.

“சிறுசுகள் சிந்திப்பது எப்படி?? என்ற தலைப்பைக் கேட்டவுடனேயே அதனை முழுமையாக படிக்க வேண்டும் போல் இருந்தது.
காரணம், நானும் எனது வயதையொத்த நண்பர்களும் பாடசாலை முடிந்ததும் நீர் ஓடைகளுக்கு நீர் அருந்த வரும் குருட்டுக் கொக்குகளை பிடிக்க தேடுவது, தண்ணீர் வற்றிய ஓடைகளில் மீன் பிடிக்க, தூண்டில் வைப்பது எப்படி? என்று முயற்சி செய்த வயது அது. பாடசாலை நேரத்தில் வகுப்பு ஆசிரியர் வராத நேரத்தில், இன்று மாலை என்ன செய்யலாம்? என்ன விளையாடலாம்? எந்தப் பக்கம் திரியலாம்? எனபதைப் பற்றி சிந்திக்கின்ற வயது.

நகர் புரங்களில் வாழும் எங்கள் வயது சிறுவர்கள் கம்பியூட்டர் கேம்ஸிலும் டீவி நிகழ்ச்சிகளிலும் ஓய்வு நேரங்களை கழிப்பது போல எங்களுக்கும் அந்த பருவம் இருந்தது.

அதனால் தான் நாம் சிந்திப்பது, எமது சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன், எனக்குச் சொல்லித் தருவதற்காகத்தான் இப்படி ஒரு தலைப்பை தேடிப் படித்தாரோ என்றும் நான் சந்தேகித்தேன்.   

என் தந்தை கூற ஆரம்பித்தார்..
சிறுசுகளின் சிந்தனை ஓட்டத்திலும் வளர்ச்சியிலும் மூன்று தசாப்தங்களுக்கு முந்தய நிலையையும் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரான நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, பெரும் பெரும் விஞ்ஞானிகளுக்கிடையில் கருத்து ஒருமைப்பாடும் அபிப்பிராய பேதங்களும் நிலவி வருகிறது.

சிறுவர்கள் பகுத்தறிவுக்குப் புறம்பாக, ஊக்கத்திறனற்ற, நான் என்ற முனைப்புள்ளவர்களாகவே (Irrational, egocentric and amoral) இருப்பவர்கள் என்று மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எல்லா தத்துவ ஞானிகள், உலவியலாளர்கள் மனித உடலியல் மற்றும் மூளைவளர்ச்சி தொடபான ஆய்வாளர்களும் நம்பியிருந்தனர்.

சிறுவர்கள் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து )understand cause and effect( கொள்வதிலும் அவசிமானதை உடனுக்குடன் புறிந்துகொள்வதிலும் குறையுள்ளவர்கள் என்றும் கற்பனைக்கும் நிஜத்திற்கும் வேருபாடறியாதவர்கள், அவர்கள் அனுபவசாளிகளின் செயற்பாடுகளை கண்டரியத் தெரியாதவர்கள் என்றும் நம்பியிருந்தனர்
ஆனால் தற்போதைய ஆய்வுகளின் படியும் இன்றைய நவீன உலக வளர்ச்சியின் முன்னேற்றத்தின் விளைவாகவும் சிறுவர்களின் சிந்தனை ஒரு விஞ்ஞானியின் சிந்தனைக்கு ஒத்தது என்று அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர்.

இளம் வயதுடையவர்களின் கற்பனையையும் சிந்தனையும் எல்லைப்படுத்த முடியாதளவு விசித்திரமானது என்றும் விஞ்ஞானிகளால் கூறப் படுகிறது.

சிறுவர்களின் மூளை வளர்ச்சி, சிந்தனைத் திறன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல கள ஆய்வுகளின் படி, இன்றைய விஞ்ஞானிகள், எவ்வாறு பல விடயங்களை கற்றுக் கொள்கிறார்களோ அது போன்று இவர்களும் இருக்கின்றார்கள் என்று சொல்லும் நிலை தோன்றியுள்ளது.
விடயங்களின் செயன்முறை, சோதனை முறை, விடயங்களை ஆய்வு செய்து கிடைக்கும் முடிவு, அனைத்துமே பெளதீகவியல், மனிதவியல், சிந்தனைவியல் எல்லைக்குள் நின்று சிந்திப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

சிறுசுகளை முறையாக கையால்வதும் வழிகாட்டுவதும் நம் அனைவரினதும் கடமையாகும். அது நமது வசதி வாய்ப்பு, அறிவியல் உயர்வுக்கும் பாரியளவில் உதவியாய் அமைகிறது.........
என்று ஒரே மூச்சில் சொல்லிவிட்டு கையலிருந்த ஆக்கத்தை மேசைக்கு நகர்த்தி விட்டு, இதை பற்றி என்ன சொல்கிறாய்? என என்னுடைய கருத்தைக் கேற்கலானார்.

ஒரு நிமிடம் மெளனித்த நான், என்னைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு எனது சக வகுப்பு நண்பர்கள் யாராவது பெரியளவில் சிந்தனை தின் கூடியவர்களாக இருக்கிறார்களா? என்று எனக்குள் வினா எழுப்பியவனாக ஒவ்வொருவராக என் மனக் கண்முன் கொண்டு வந்தேன்.

ஆனால் ஆச்சரியம்!!, யாரும் கிடைக்கவில்லை.

என்ன விடை சொல்லுவது என்று பெரு மூச்சு விட்டவனாக தலையை உயர்த்தி, தந்தையின் வதனத்தைப் பார்த்தவனாக...

படரும்..........




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Anonymous said...

Dear Brother Rilwen,

can you publish all in one page,
its easy to print.

thanks for your noble work

Ameer - Oman

இஸ்ஸதீன் ரிழ்வான் said...

Dear Brother Ameer,

thanks a lot for your visit and advise,

we will publish all together in one PDF file after complete.