“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் தேவை யின், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.
முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் தொடர்பாக அனைவரதும் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் அதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உள்ள ஒரு விஷேட திட்டமே இது.
இந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக் கவனத்தில் கொண்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள், தவிர்க்க வேண்டியவை, பின்பற்ற வேண்டியவை குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.
கொடுக்கப்பட்ட உங்கள் கருத்தைக் கொண்டு முழுமையான கட்டுரையாக வடிவமைக்கப்பட்டு மாத முடிவில் உங்கள் பார்வைக்கு வழங்கப்படும்.
இன்ஷா அல்லாஹ், மாதா மாதம் புதிய புதிய தலைப்புக்களில் கருத்துச் சேகரிப்பு நடைபெரும்.
தயவு செய்து உங்கள் மனதில் உதிக்கின்ற, நீங்கள் ஆலோசனைகளாக பதிய நினக்கின்ற செய்திகளை சொல்லும் படி தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.
தலைப்பு:
மீடியாக்களும் முஸ்லிம் உலகமும்:
கருத்துப் பரிமாற்றம்:
இன்றைய மீடியாக்கள் உலக முஸ்லிம்களை எந்த நிலையில் பார்க்கிறது?
இன்றைய மீடியாக்கள் முஸ்லிம் உலகிற்கு சாதகமானதா?
இன்றைய மீடியாக்களின் செயட்பாடுகள் மாற்றப்பட வேண்டுமா?
முஸ்லிம்களுக்கு போதுமான மீடியாக்கள் இன்று இருக்கின்றனவா?
இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
15 comments:
அன்பின் நண்பர்களே!
உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் இங்கு பதியுங்கள்
நன்றி
விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass-Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது...............
http://azeezahmed.wordpress.com/2010/10/20/mu-2/
we need Muslim medias,
rich Muslim should spend money to start new.
Tariq
செய்தி ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றன, அண்மையில் சாகிர் நாயக்கைக் கூட இந்த வலையில் சிக்க வைக்க முயற்சித்தது. அதனால் முஸ்லிம்களுக்கு தனி ஊடகங்கள் தேவைதான். நன்றி மதுரை ராஜா
இன்றைய மீடியாக்களின் தாக்கம், அணு ஆயுதங்களினால் ஏற்படும் தாக்கங்களை விட பேராபத்தாகவுள்ளது. குறிப்பாக ஒரு சமூகத்தை அல்லது ஒரு நபரை ஏன் ஒரு நாட்டையே இலக்கு வைத்து தாக்குவதற்கு ஆயுதங்களை விட, இதன் தாக்கம் பாரியளவு சக்திவாய்ந்த ஒன்றாகும் என்றால் அது மிகையாகாது. சமூக வளர்ச்சியில் இதன் பங்கு கால் வாசி என்றால், சமூக வீழ்ச்சிக்கு இதன் பங்கு முக்கால் வாசி எனலாம்.
இறைவன் மனிதனுக்கு வழங்கிய அளப்பரிய அருட் கொடைகளில் மிகவும் விலை மதிக்க முடியாத ஒன்றாக மீடியாவையும் குறிப்பி்லாம். இன்று முஸ்லீம்களிடம் அது இல்லாததால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் வசை பாடலாம் என்றென்னிக் கொண்டு இதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு (எந்த மீடியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்ற தோரனையில்) அதே வாந்தியை மீண்டும் மீண்டும் இதர மீடியாக்களும் எடுத்துக் கொண்டு இருப்பதை காணுகிறோம்.
இதற்கான அடிப்படைக் காரணத்தை முஸ்லீம்களாகிய நாம் சிந்திப்போமானல், இந்த மாதிரியான வசைகளுக்கு (விலங்கிடுவது அல்லது) ஒரு முடிவு கட்டுவது மலையை உடைப்பதைப் போன்று ஒன்றும் பெறிய காரியமல்ல. முஸ்லீம்களிடம் சர்வதேச அளவில் இல்லாவிட்டாலும் ஒரு குறுகிய மட்டத்திலாவது மீடியாக்கள் அமையப் பெறுவது இன்றைய காலத்தின் கட்டாயமாவுள்ளது.
இன்று இது இல்லாததனால் நாம் நாளாந்தம் எதிர்நோக்கும் துர்நாற்ற வசைகளின் வக்கிரங்களினால் தாக்கப் படுகிறோம். இன்றைய மீடியாக்கள் முஸ்லீம்களை தீவிரவாதியாக, திருடனாக, கொலை காரனாக, உலக விரோதியாக (இப்படி எந்தெந்த மாபாதகச் செயல்கள் இருக்கிறதோ, அது அனைத்தையும் முஸ்லீமக்ளதான் செய்கிறார்கள் என்று) மக்கள் மன்றத்தில் வைப்பதனால் இந்த பொய்யான தகவல்கள் எந்தளவுக்கு மக்கள் மனதில் தாக்கம் செலுத்துகிறது என்பதை நான் விவரிக்க வேண்டிய அவசியமில்லை.
எந்த மீடியாவும் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுவதில் விதிவிலக்கில்லாமல் இருக்கின்ற இந்தத் தருனத்தில் முஸ்லீம்களாகிய நாம் எமது கடப்பாடு என்ன? இதர்க்கு எந்த மாதிரியான தீர்வை முன்வைக்கலாம்? சமகாலத்திலுள்ள தனவந்த முஸ்லீம்கள் இதற்காக களம் அமைத்துக் கொடுப்பதில் அவாகளின் பங்கு எத்தகையது? இருக்கின்ற விரல் விட்டு எண்ணக் கூடிய மீடியாக்களையாவது தக்க வைத்துக் கொள்ள எந்த மாதிரியான திட்டங்களை-நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? இதனால் முஸ்லீமகளுக்கு என்ன (சாதக-பாதக) விளைவுகள் இருக்கிறது? என்பது போன்ற தெளிவுகளை, உலமா சபைகளும், முஸ்லீம் இயக்கங்களும், பாடசாலை ஆசிரியர்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், மக்கள் மன்றத்தில் (பொதுக் கூட்டங்களில் அல்லது அவரவர் சார்ந்த துரைகளிலிருப்பவர்களுக்கு) விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, இன்றைய இதர பணிகளை விட, இது மிக மிக மிக இன்றியமையாத ஒன்றாகும் என்பது எனது கருத்து மற்றுமல்லாது அவாவும் கூட,
அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகிறான்:
“அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது“ (அல் அன்பால்-60)
என்ற இந்த வசனத்திற்கமைய தற்காலத்தில் நம்முடைய தயாரிப்பு, மீடியா சார்ந்த துரைகளையும் அதற்கான தகைமைகளையும் இதற்கென தனி பாடத்திட்டங்களையும் அரசாங்கப் பாடசாலைகளில் இல்லாவிட்டாலும் தனியார் பாடசாலைகளில் ஏற்பாடு செய்து நல்ல தகைமை-திறமைகளைக் கொண்ட மாணாக்கரை உருவாக்குவதாகும்.
அன்று ஸஹாபாக்கள் உயிரையே தியாகம் செய்து வாளேந்தி இஸ்லாத்தை பாதுகாத்தைப் போல், நாம் அது போன்றில்லாவிட்டாலும் குறைந்த பட்சம் இத்தூய கண்ணாடியில் ஒட்டிக் கொள்ள வரும் தூசுகளைத் துடைக்க இது மாதிரியான தயாரிப்புகளையேனும் செய்ய ஒவ்வொரு அமைப்புக்களும் (குறிப்பாக அரபு கலாசாலைகளும்-பொறுப்பிலுள்ளவர்களும்) முஸ்லீம்களும் இன்றே தயாராகுவது, இக்குர்ஆனிய வசனத்தின் கட்டளையை நிறைவேற்றியவர்களாக ஆகலாம். அல்லாஹ் அதற்கான அத்தனை பலம் சார்ந்த, அறிவியல் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, வசதிகளையும் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக.(ஆமீன்)
நன்றி
அன்ஸார்(இலங்கை)
தோஹா
/இன்றைய மீடியாக்கள் உலக முஸ்லிம்களை எந்த நிலையில் பார்க்கிறது?
இன்றைய மீடியாக்கள் முஸ்லிம் உலகிற்கு சாதகமானதா?
இன்றைய மீடியாக்களின் செயட்பாடுகள் மாற்றப்பட வெண்டுமா?
முஸ்லிம்களுக்கு போதுமான மீடியாக்கள் இன்று இருக்கின்றனவா?
இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?//
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்புச் சகோதரர் இஸ்ஸத்தீன் அழகான, சமுதாயத்துக்கு உபயோகமான ஒரு தலைப்பில் கருத்துப்பரிமாற்றத்தைத் துவக்கியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
இந்தத் தலைப்பின் மீதான கருத்துப்பரிமாற்றம் இரு காட்சிகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.
1. சர்வதேச அளவில் மிகப்பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அல் ஜஸீரா, ப்ரஸ் தொலைக்காட்சி ஆகியவற்றின் வருகைக்கு முந்தைய ஊடக நிலை
2. அவற்றின் வருகைக்குப் பிந்தைய ஊடகநிலை.
இவ்விரு நிலைகளில்,
சர்வதேச ஊடகங்கள் முஸ்லிம்களை எவ்வகையில் கண்டது/காண்கிறது? முந்தைய நிலைக்கு இப்போதைய மாற்றம் என்ன? இன்னும் எவ்வகையிலான மாற்றம் வேண்டும்? அதற்கு முஸ்லிம் சமுதாயம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
என்ற அடிப்படையில் கருத்துகள் பரிமாறப்பட்டால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
தொடர்ந்து உரையாடுவோம் இன்ஷா அல்லாஹ்...
abdrahuman
வ அலைக்குமுஸ் ஸலாம் வறஹ்மத்துல்லாஹ்...
அருமையான தலைப்பு. காலத்துக்கு மிகத் தேவையானதும்கூட. சகோதரர் இஸ்ஸதீனின் முயற்சி பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்
//ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.//
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த தலைப்பு நம்முடைய புரிதலைத்தாண்டி - மிக விரிவானதாக (உலக மீடியாக்களை) இருக்கிறது ஏனென்றால், முஸ்லிம்கள் பற்றிய தமிழக - இந்திய மீடியாக்களின் பார்வைகளே இன்னும் முறையாக-முழுமையாக அலசப்படவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
அதனால் இந்திய - அல்லது தமிழக அளவில் நமது பார்வையை - அலசலை குறுகலாக்கிக் கொண்டால் பல சகோதரர்கள் கருத்துப்பரிமாறி பங்களிக்கமுடியும் என்று கருதுகிறேன்.
--
தோழமையுடன்,
(பிறைநதிபுரத்தான்)
(http://pirainathi-puram.blogspot.com)
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்களை உடனுக்குடன் கேள்வி கேற்க முற்பட வேண்டும். தவறு அல்லது தப்பை சுட்டிக்காட்ட வேண்டும்
we should create muslim medias.We have to provide exectly correct news,islamic lactures.also, we should avoid others to act like our muslims wearing abaya and covering face to steal somtheing and put adan.
first hats off 4 da blog continue ur work I din read it in full bt insha alah I will be back again 2 comment dont stop ur work bro continue...
அஸ்ஸலாமு அலைக்கும்
சஹோதரர் இஸ்ஸதீனின் முயற்சி உறுதியான அஸ்திவாரம் போல் இருக்க பிறார்த்தித்தவனாக. மீடியா இன்றைய சூழலில் முக்கியமானது . ஒரு செய்தியை அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில், உடனடியாக,எளிதாக பாமர மக்கள் வீடுகள் வரை கொண்டுசெல்ல கூடிய ஒரே சாதனம் மீடியா.
அல்லாஹ், தனது திருமறையில் சொல்கிறான் “திருப்பித்தரும் வானம்“ என்று. நாம் அனுப்பகூடிய செய்தி விண்ணுக்கு சென்று திரும்பி மீண்டும் பூமிக்கே திரும்பக்கூடிய வகையில் அல்லாஹ் அமைத்து இருக்கிறன். அற்புதமான இந்த வசதியை மனிதன் நல்வழியில் பயன் படுத்தாமல், சுய லாபத்திற்காக பொய்களையும் ,புரளிகளையும், மற்றும் கலாச்சார சீரழிவுகளையும் ஏற்படுத்தி, தவறான வழியில் பயன் படுத்துவதை பார்க்கின்றோம்.
பொய்யர்களெல்லாம் பொய்களை உண்மையாக்கும்போது உண்மையாளர்கள் (இஸ்லாமியர்கள்) உறங்குவது ஏனோ? படம், பாடல், சீரியல் என அழுதுகொண்டிருக்கும் இஸ்லாமிய கண்களை மறுமைக்கு சொந்தமாக்க முன் வராதது ஏனோ?
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லகூடிய மார்க்கத்தை, தீவிரவாத மார்க்கமாகவும், தன் உரிமைக்காக போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் மற்றவர்கள் போராடினால் தியாகிகளாகவும்-போராளிகளாகவும் நம் கண் முன்னே பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், முஸ்லிம் மீடியா இல்லாமல் போனது குறித்து, இப்படித்தான் என் மனம் கேட்கிறது. நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரிகள் படை திரண்டு வருவது போல் சப்தம் கேட்கிறது. எல்லா மக்களும் வெளியில் வந்து விட்டார்கள். ஆனால் நபியவர்களைக் காணவில்லை. எல்லோரும் சப்தம் வரும் திசையை நோக்கி பார்க்கும் போது, அந்த திசையில் இருந்து நபியவர்கள் வருகிறார்கள்.“பயப்படும் படி ஒன்றுமில்லை“ என்று மக்களுக்கு தகவல் சொல்கிறார்கள். இந்த வீரரை தலைவராக ஏற்று வாழகூடிய நமக்கு ஏன் இந்த வீரம் வரவில்லை?
நபியவர்களின் இறுதி பேருரையில் எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட ஒரு கடமை, நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணி. இந்த இரண்டு பணிகளும் சிறப்பாக செய்திட அல்லாஹ் அருளிய இந்த அற்புதமான வசதி இல்லாமல் போனது நம் எல்லோருக்கும் கஷ்டம். அதுதான் நமக்கு பெரும் நஷ்டம்.
மீடியாவை பயன்படுத்தி மக்களை உலகத்திலும், மறுமையிலும் நாசமாக்கக் கூடிய தருணத்தில், இஸ்லாமிய மீடியா கட்டாயம் இருக்க வேண்டிய தருணம் இது. இஸ்லாத்தை மக்களுக்கு எளிதாக எத்திவைக்கவும், இஸ்லாமியர்கள் பாதிக்கபடுவதை உலகறியச் செய்து பாதுகாப்பு பெறவும் இஸ்லாமிய மீடியா இருந்தால் மட்டுமே சாத்தியம்.
அதே நேரம், இம்மீடியாக்களினால் இஸ்லாம் பற்றிய தவறான தகவல்கள் மக்கள் மன்றத்தில் பரப்புவதனால் அது உண்மை என்று பாமர மக்களும் நம்புகின்ற சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது சாலச் சிறந்தது.
எனவே, இஸ்லாமியர்கள் மத்தியில் தரமான ஊடகங்கள் (தொலைக் காட்சி,வானொலி,மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் எதுவானாலும்)உண்மையை உலகரியச் செய்வதில் யாருக்கும் விலை போகாமல் செயல் படுவதில் தீவிரமாக செயல்படக் கூடிய ஊடகங்கள் அமையப் பெறுவது இன்றைய காலத்தின் கட்டாயத்தை உணர்த்தி நிற்கிறது.
இஸ்லாமியர்கள் இதையுணர்ந்து சிந்தித்து செயல்பட அல்லாஹ் அருள் புரிவனாக.
அனைத்து தீய சக்திகளிடம் இருந்தும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு பெற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக. ஆமீன்.
காதர் மீரான்-(இந்தியா)
தோஹா கத்தார்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாம் தோன்றிய நாள் முதலே, இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அழிக்க நினைக்கும் கூட்டமும் பெருகிக்கொண்டே தான் இருக்கின்றது.
இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை. முன்பு, இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் பகைத்த எதிரிகள் பலரும் பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் முக்கிய காரணம் இஸ்லாமியர்களின் நடைமுறையும் அவர்களின் செயல்பாடுகளும்தான் என்பதை நாம் அனைவர்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, நாம் அனைவரும் உண்மை முஃமின்களாக வாழவேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நம்மை அழிக்க நினைப்பவர்கள், நம் நடைமுறைகளைபார்த்து, இவர்களையா நாம் அழிக்க நினைக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்கும் வகையில் நாம் உண்மை முஃமின்களாக வாழவேண்டும்.
மாற்றங்கள் தேவை...... ஆம், நிச்சயமாக நம்மில் பலருக்கு பல மாற்றங்கள் தேவை. இங்கு கூறப்பட்ட பலரின் கருத்துப்படி இஸ்லாமிய செய்தி ஊடகங்கள் தேவைதான். அதேநேரத்தில், நமது செய்திகளை நாம் மட்டும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தால் மட்டும் போதாது. பொது ஊடகங்களிலும் நமது பங்களிப்பு இருக்கவேண்டியது மிக அவசியமானது. பொது ஊடகங்களில் நம்மை பற்றி திரித்து கூறப்படும் செய்திகளை கண்டிக்கவும், தடை செய்யவும் சக்தி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
சட்டம், காவல்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறைகளில் நாம் பணிபுரிய வேண்டும். நமது இஸ்லாமிய இளைஞர்கள், பணம் ஈட்டுவதில் மற்றும் குறிக்கோளாக இல்லாமல், செய்யும் பணி இஸ்லாத்திற்கும் பயன்படும் வகையில் இவ்வாறான துறைகளில் பணிபுரிய முன்வரவேண்டும்.
அதற்கான விழிப்புணர்வை நமது மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தவேண்டும். பல ஏழை மாணவர்களுக்கு செல்வம் ஒரு பிரச்சனை, ஆகையால் இஸ்லாமிய செல்வந்தர்கள் இவ்வாறான மாணவர்களுக்கு உதவ அதிகமாக முன்வரவேண்டும். பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் நிறுவப்படவேண்டும். அதன்மூலம் நமது சமுதாயத்திற்கு அதிகமாக உதவி செய்ய செல்வந்தர்கள் முன்வரவேண்டும். உண்மையை உலகிக்கிற்கு எடுத்துரைக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உதவுவானாக. ஆமீன்.
உண்மை முஃமின் என்றும் தோற்பதில்லை.
என்றும் அன்புடன்,
முஹம்மது ஜியாவுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு சகோதரர்களே...
இதைப்போன்று ஒரு கருத்துகணிப்பு கண்டிப்பாக தேவை...
இன்றைய முஸ்லீம்களின் நிலை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகமும், ஊடகமும் நம்மை பெரும் மனித எதிரிகளாகதான் சித்தரிக்கின்றன. கண்டிப்பாக நமக்கென்று மட்டும்மல்லாமல் உண்மையை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க ஒரு நாடு நிலையான ஊடகம் தேவை...
Post a Comment