என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 06

தொடர் ஆறு:

எனது மெளனத்தை புரிந்துகொண்ட அவர்,
வாய் திறந்து வேறு விடயத்திற்கு செல்வதற்கு முன்னர், இப்படியான எவரையும் எனது பாடசாலையில் அல்லது ஊரில் நான் பார்க்கவில்லையே!! என்று வியந்து போனேன்.

எனது ஆர்வத்தின் யதார்த்தத்தை புறிந்துகொண்ட தந்தை, நல்ல இயற்கை வளம் நிரைந்த மரங்கள் சூழ்ந்த அமைதியானதொரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அவரது வலது கையை எனது தோல்களில் போட்டவராக அந்த இடத்தை நோக்கி நடக்கலானோம்...

சில அடிப்படை விடயங்களை சொல்லித்தருவதற்கு முன்னர் சில நுனுக்கமான கேள்விகளை தொடுத்தார்,

நான் இதுவரையும் சிந்திக்காத, நினைத்துப் பார்க்காத கேள்விகள் அவைகள். ஆனால் அவை ஒன்றும் எனது சூழலுக்குப் பழயதல்ல.

1. தண்ணீர் குட்டையில் முலைத்து நிற்கும் தாமரை இலைகளை பார்த்திருக்கிறாயா?
அந்த இலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் துளிகளை ரசித்திருக்கிறாயா?
அதை உன் கைகளால் பிடித்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறாயா?
அதன் அழகைப் பற்றி உன் வகுப்பு நண்பர்களுக்கு சொல்லி இருக்கிறாயா?

2. மழை பெய்யும் போது வீட்டு முற்றத்து மண்ணில் வெளிப்படும் வாசனையை நுகர்ந்திருக்கிறாயா?
மழை தொடர்பாக கட்டுரை எழுதும் போது இதனை குறிப்பிட்டிருக்கிறா?

3. கைக் குழந்தை நடக்க முயற்சிப்பதை பார்த்துள்ளாயா?
தாவித் தாவிப் பிடிக்கும் அந்த குழந்தையின் முயற்சியை கண்டு உன் உள் மனம் உன்னுடன் ஏதாவது பேசி இருக்கிறதா?
நீ சைக்கில் ஓடப் பலகும் போது இதை நினைத்து சிறித்திருக்கிறாயா?

4. பாரமாண நீர் நிரப்பிய மண் குடத்தை தலையுச்சியில் வைத்து சுமந்து வரும் பெண்களை கண்டிருக்கிறாயா?
அந்தப் பெண்களை காணும் போது உனது ஆழ் மனதில் உதித்த சிந்தனை என்ன?
ஆண்கள் இந்தக் குடத்தை இப்படி சுமப்பார்களா? என்று கற்பனை பண்ணியிருகிறாயா?

5. உன் பாடசாலை பேச்சுப் போட்டியில் ஆக்குரோஷமாகப் பேசிய ஒரு சக மாணவனை பார்த்த போது, நீ உணர்ச்சி வசப் பட்டிருக்கிறாய?


இப்படி ஒவ்வொரு கேள்விகளாக கேட்கும் போது என்னுள் பழைய ஞாபகங்கள் என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தது, ஏன் இந்த கேள்விகள்,?? எதற்கு இதையெல்லாம் கேற்கிறார்? என்றும் ஒரு சிந்தனை.
வினாக்களை முடித்து விட்டு விடைக்காக என் முகத்தை நோக்கினார்.

அது, அது..... என்று தொடங்கிய நான், இதையெல்லாம் பார்த்திருக்கிறேன், ஆனால் அப்போதெல்லாம் எதுவும் மனதில் தோன்றியதாக .....இ ... ல்லை. என்றேன்.

சரி, இதற்குப் பிறகு உனக்கு ஏதாவது தோன்றும் என்று, என் முதுகைத் தட்டிவிட்டு, இரண்டு பேரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தோம்.
நான் சொல்லுவதை மிக கவனமாகக் கேள்! வீட்டுக்குப் போனதும் உன் தாய்க்கு இது அனைத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று, அவர் சொல்லப் போகும் விஷயத்தில் என் கவனத்தை திசை திருப்பினார்.

“மகனே! ஒரு மனிதனுக்கு மூளை தான் மிக முக்கியமான ஒன்று, உயர்ந்தவனாக சிந்திப்பதற்கும், சாதாரணமாக சிந்திப்பதற்கும் மூளையுடைய வளர்ச்சி, வேகம், விவேகம் துரிதம் மிக முக்கியமானதாகும்.

என்று தொடர்ந்தார்.....

ஜப்பானில் உள்ள ஒரு நிருவனம் தான் The Shichida brain development centers  என்பது. இதனை 1951 களிலிருந்து நிருவகித்து வருபவர் Makoto Shichida என்ற ஒரு அனுபவம் முதிர்ந்த பேராசிரியர்.
சிறுவர்களின் மூளை வளர்ச்சியை எப்படி அதிகரிப்பது, எப்படி வெளிக்
கொனர்வது போன்ற விடயங்களை மையமாக வைத்து ஆய்வுகளையும் கற்கைகளையும் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

இவர் மூளை பற்றிக் குறிப்பிடும் போது; மனித மூளை; வலது மூளை (right brain), இடது மூளை (left-brain) என இரண்டு இரண்டாக செயற்படுகிறது.

இடது மூளையைப் பொருத்தவரை வெற்றிகரமாக சிந்திக்கக் கூடியவர்களுக்கு அதிகளவில் உதவுகிறது.

எந்த ஒரு செய்தியையும் காட்சியையும் உரிய முறையில் பெற்று, சேமித்துவைத்து உரிய முறையில் அல்லது அதைவிடவும் அதிகமாக பாவிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உதவுகிறது.

வெற்றிகரமான ஆற்றலை இந்த இடது மூளை விசாலமாக்கித் தருகிறது.
ஒரு தகவலை பாதுகாத்து தகுந்த நேரத்தில் தரமாக முன் கொண்டு வருவதற்கு இடது மூளையுடன் சேர்ந்து வலது மூளை கடுமையாக உழைக்கிறது.

எல்லா பிள்ளைகளுடைய முக்கியமான ஜந்து புலன்களை (5 senses of the (sight, hearing, touch, taste, smell))யும் இயக்குவதில் இடது மூளையுடன் வலது மூளை இணைந்து தொழில் புரிகின்றன.

ஒரு காட்சியைக் காணும் போது அதை கிரகித்தல், அது தொடர்பான செய்திகளை சேமித்தல்,

ஒரு சிக்கலான கணக்கு வரும் போது உடனே தொழிற்பட்டு அதனை தீர்த்தல்,
இலக்கங்களை இலகுவில் மனதில் பதியவைத்துக்கொள்லுதல்,
வெளிநாட்டு மொழிகளை வெகு விரைவில் கற்றல்,
கற்பனை திறனை அதிகரித்தல்,

ஒரு விடயம் தொடர்பான தேவையான, போதுமான தகவல்களை சேகரித்துக்கொள்ளுதல், வெளிக்கொனர்தல் போன்ற செயற்பாடுகள் ஒரு சிறுவனுக்கு சரியாக அமையுமானால்,

உதாரணமாக உனக்கு இருக்குமானால் உன்னை வெல்ல எவருமில்லை.
ஆனால், இவைகளை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை வேறு ஒரு நாளைக்குச் சொல்லித் தருகிறேன், இன்க்ஷா அல்லாஹ் என்று, தன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


படரும்..........



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Anonymous said...

உளவியல் கருத்துக்கள் எனக்கு பிடித்திருக்கிறது. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். மதுரை ராஜா

Anonymous said...

>>எனது ஆர்வத்தின் யதார்த்தத்தை புறிந்துகொண்ட தந்தை, நல்ல இயற்கை வளம் நிரைந்த மரங்கள் சூழ்ந்த அமைதியானதொரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்<<