இஸ்லாத்திலுள்ள கிறிஸ்தவர்கள்!!!!
நபிக்கு ஒரு விழாவாம்………!?

இது என்ன ஆச்சர்யம் இஸ்லாத்திலும் கிரிஸ்தவர்களா? என்று  நீங்கள் மூக்கிலே கை வைப்பது புறிகிறது. ஆனால் அதுதான் உண்மையும் கூட!

ஏனெனில் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் உண்மையான முஸ்லீமாக வாழ திராணியற்ற சில கழிசடைகள், தானும் ஒரு முஸ்லிம் என்று அறிமுகப் படுத்துவதர்க்காக ஏதாவது விஷேச நாட்கள் கிடைக்காதா? என தேர்ந்தெடுத்து, அதிலே நபியவர்களை நேசிக்கிறோம். கண்ணியப் படுத்துகிறோம் என்று ஒரே நாளில் முழங்கி விட்டு, அதன் பின் தானுன்டு தன் பாடுன்டு என்று தன் வாழ்வை தொடர்கின்றனர்.

இவர்களைப் பார்க்கும் போது, கீழுள்ள குர்ஆனிய வசனம் இவர்களுக்கென்றே இறங்கியதைப் போன்றுள்ளது.


இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள். (14) அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். (15) 
இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர். (அல் பகரா-16)


சில தினங்களுக்கு முன், மாற்றங்கள் தேவை, “நாளை விபச்சாரத் தினம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்ததை வாசகர்கள் அறிவர். 


கிறிஸதவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய கலாச்சாரங்கள், வணக்கங்கள்-வழிபாடுகள், ஒரு சில தினங்களை மைய்யப் படுத்தி அதனோடு முடித்து விடுவர். அதில் அன்னையர் தினம், தொழிலளர் தினம், ஆசிரியர் தினம், கயவலர் (காதலர்) தினம் இப்படி....... நான் குறிப்பிடாத தினங்களுட்பட..


இது போன்றதொரு தினத்தைத்தான் நமது இஸ்லாமிய சமூகத்தில் சிலர், அந்தந்த  “தினங்களுக்கு முஸலீம்கள்“ என்ற சீஸன் முஸ்லீம் என்று காட்ட முனைகிறார்கள். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கிறிஸ்தவ கலாச்சாரத்தையையே பின் பற்றுவதானால் இவர்களுக்கு “இஸ்லாமிய கிறிஸ்தவர்கள்!! என்ற பெயர் மிகப் பொருத்தமாக அமையப் பெறுகிறது.   
ஏனெனில் இதனை நான் சுயமாகக் கூறவில்லை. இதோ உண்மைத் தூதர் கூறும் கண்ணியமான வாசகங்களைக் கவனியுங்கள்


உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்புப்பொந்துக்குள் புகுந்தாலும் கூட அதிலும் நீங்கள் புகுவீர்கள்
அறிவித்தவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.  
பிறந்தநாள் கொண்டாட்டம்  என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் அமைந்த ஓர் செயலல்ல. மாறாக யூத, கிறிஸ்தவ கலாச்சாரத்தாக்கத்தால் பிற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களில் இருந்து நெறிபிற‌ழ்ந்த ஷீஆக்கள்எனும் வழிதவறிய சாராரால் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கநூதனச் செயலாகும் இதுவே வரலாற்று உண்மை.

ஒரு முஸ்லிமின் செயற்பாடு ஒரு போதும் யூத, கிறிஸ்தவர்களின் மார்க்கக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக முடியாது. இஸ்லாம் என்பது அது ஓர் வாழ்வியல் மார்க்கம். அதற்கு நிகராக, உலகத்தில் இயற்றப்படும் சட்டங்கள், வேண்டுமானால் வருடங்களுக்கும் தசாப்தங்களுக்கும் மாறு படலாம். ஆனால் சத்திய இஸ்லாத்தின் கொள்கையோ கோட்பாடுகளோ-சட்டங்களோ, அன்று முதல் இன்று வரை எது வித மாற்றங்களையும்-திருத்தங்களையும் இத்த வரைக்கும் காணமுடியவில்லை. காணமுடியாது!! காரணம் இது மனிதனாலோ அல்லது வானவர்களாலோ இயற்றப் பட்ட மார்க்கமல்ல. இது அல்லாஹ்வால் இயற்றப்பட்ட மார்க்கம்.

நபி பிறந்த தினத்தைப் பொருத்த வரை, இஸ்லாம் அனுமதிக்காத மிக வன்மையாக தடுக்கின்ற செயலாகும். நபி ஸல் அவர்களுடன் பல வருடங்கள் வாழ்ந்த, அவருக்காக உயிரை தியாகம் செய்ய தயாரான, சொத்து சுகங்களை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்திற்காக பாடுபட்டவர்கள் செய்யாத, சொல்லாத செயல்கள் எப்படி நமது சமூகத்தின் கைகளில் கிடைத்தது?

போலி உலமாக்களின் சுய இலாபம் மட்டுமே இந்த மீலாத் விழா என்பது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்திருக்கிறார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்பும் அதனை ஏற்றுக்கொள்ளாத, மரணிக்கக்கூடாது என்று எதிர்பார்த்த அவரது தோழர் கொண்டாடாத விழாக்கள் ஏன் இன்று கொண்டாடப்பட வேண்டும்?

பொது மக்களே!
போலி உலமாக்களை விட்டுவிட்டு சுயமாக இஸ்லாத்தை படித்து விளங்க முன்வாருங்கள்.

இந்த உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், நம்மை ஏமாற்றவென முடிவெடுத்து ஊர் ஊராக வயிறு நிறப்பவும் மதிப்பு பெறவும் திரிகின்றார்கள்.

இஸ்லாம் சொல்லித் தந்தது அல் குர்ஆனிலும் அதன் விளக்க நூல்களான ஹதீஸ் புத்தகங்களிலும் முழுமையாக கிடைக்கின்றன. வாருங்கள் அதனைப் படித்து உண்மையை தெரிந்து அதனை நடைமுறைப்படுத்துவோம்.

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியதுமில்லை அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும்.


மார்க்கத்தில் புதிதாக புகுந்தவை அனைத்தும் பித் அத் (நூதன செயல்) ஆகும். பித்அத்கள் எல்லாம் வழிகேடுகளாகும். வழிகேடுகள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்லும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துள்ளாஹ்
ஆதாரம் : முஸ்லிம், நஸாஈ


'மாற்றங்கள் தேவை' இந்த மீலாத விழாக்களையும் அதனை கொண்டாடுபவர்களையும் வன்மையாக எதிர்க்கின்றது.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

14 comments:

Aashiq Ahamed said...
This comment has been removed by the author.
Aashiq Ahamed said...

சகோதரர் ரில்வான்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

சாட்டையடி பதிவு....இன்று பலரும் மீலாது நபி போன்ற பித்அத்திலிருந்து வெளிவந்து விட்டார்கள். இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகளில் புரண்டு கொண்டிருக்கும் சிலபலர் இந்த பதிவை படிக்க நேர்ந்தால் இனியாவது திருந்தட்டும்.

இதுல சீரணி என்ற பேர்ல பிரசாதம் வேற????????????

இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை....திருந்தட்டும் தவறான வழியில் இருப்பவர்கள், அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பொருத்தமான நேரத்தில் வந்த வருத்தமான பதிவு

என்னைக்கி இதுக திருந்தபோதுகன்னு தெரியால?

Issadeen Rilwan said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்,

சகோதரர் ஆஷிக் அஹ்மத் மற்றும் ஹைதர் அலி ஆகியோரின் கருத்துக்கள் மகிழ்ச்சிப்படுத்துகின்றன.

நமது நேரங்களை முடியுமானளவு நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்க பயன்படுத்துவோம்.

இன்ஷா அல்லாஹ்.

Robin said...

இந்தப் பதிவின்படி பார்த்தால் ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவத்திலுள்ள முஸ்லிம்!

Issadeen Rilwan said...

சகோதரர் ரொபின் அவர்களின் வருகைக்கு நன்றி,
தலைப்பை மட்டும் வாசித்தால் விடயம தலைகீழாகத் தான் தெரியும், அதனால் கட்டுரையை முழுமையாக வாசியுங்கள்.
நன்றி.

Robin said...

//கட்டுரையை முழுமையாக வாசியுங்கள்.//
பதிவைப் படித்தபின்புதான் எழுதியுள்ளேன். கிறிஸ்தவ கலாச்சாரம் வேறு - மேற்கத்திய கலாச்சாரம் வேறு. விவரம் தெரியாமல் எழுதவேண்டாம்.

Issadeen Rilwan said...

"ஒரு முஸ்லிமின் செயற்பாடு ஒரு போதும் யூத, கிறிஸ்தவர்களின் மார்க்கக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக முடியாது"

இந்த வசனத்தையும் வாசித்திருப்பீர்கள்

ரங்குடு said...

அட போங்கப்பா. ஊரிலே எந்த மதத்தைச் சேந்தவனாலும் (இந்துவும் சேத்துத்தான்). சாக்கடை, குப்பையை அள்ளி சுத்தமா வக்க முடியல.

மூத்திர நாத்தமில்லாத பஸ் ஸ்டாண்டையோ, ரயில்வே டேசனையோ பாக்க முடியலே.

எந்த சாமி இதையெல்லாம் செய்யச் சொல்லுதோ அதுதான் உண்மையான சாமி.

குப்பைத்டொட்டி மீது கும்பாபிசேகம், கந்தூரி, கல்லறை திருநாள்ன்னு போஸ்டர் ஒட்ட்ற மதமெல்லாம் ஒரு மதமா இல்லை மார்க்கமா?

பிழைக்கும் வழி.

Robin said...

//"ஒரு முஸ்லிமின் செயற்பாடு ஒரு போதும் யூத, கிறிஸ்தவர்களின் மார்க்கக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக முடியாது"//

கண்டிப்பாக ஒப்பாக முடியாது. கிறிஸ்தவ மார்க்கம் அன்பை போதிப்பது. பகைவர்களையும் நேசிக்க கற்றுத் தருவது.

Afra said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையில் நமது முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டிய மிக முக்கிய அம்சமாகவே மீலாத்தின விழா அமைந்துள்ளது.அண்ணல் நபியவர்கள் காட்டித் தந்த மிக முக்கிய விடயங்களை
கைவிட்டுவிட்டு இவ்வாறான நூதன விடயங்களை பின்பற்றி தமது மறுமை வாழ்வை பாழ்படுத்திக் கொள்கின்றனர் .
அல்லாஹ்வின் தூதர் மீது உண்மை அன்பு கொண்டிருப்பவர்கள் ,அவர்களை கண்ணியப்படுத்த உறுதி கொண்டவர்கள் நபியவர்களது போதனைகளை தன் வாழ்வில் ஏற்று நடக்க வேண்டுமே தவிர இது போன்ற புதிய அம்சங்களை முஸ்லிம் சமூகத்துக்குல் புகுத்தாமல் இருப்பதாகும். எனவே இக்கட்டுரையின் தலைப்பு சாலப் பொருத்தமானது என்பதுடன் அனைவரையும் சென்றடைய வேண்டிய மிக முக்கிய தகவலாகும்

Aashiq Ahamed said...

சகோதரர் ரில்வான்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ராபினின் //கிறிஸ்தவ கலாச்சாரம் வேறு - மேற்கத்திய கலாச்சாரம் வேறு// என்ற கருத்து அர்த்தம் உள்ளதாகவே தெரிகின்றது. இது குறித்த உங்கள் பார்வையை அறிய விரும்புகின்றேன்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Issadeen Rilwan said...

மேற்கத்திய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி வழிநடத்துகின்றவர்கள் யார் என்பதை தேடிப் பார்த்தால் அதன் விடையை சாதாரணமாக தெரிந்து கொள்ளலாம். அத்துடன் மேற்கத்தைய கலாச்சாரம் வேறு கிறிஸ்துவ கலாச்சாரம் வேறு என்று குறிப்பிட்ட சகோதரர் ரொபின் அவர்கள் இதற்கான தெளீவை வழங்குவதுதான் நல்லது.

அன்ஸார் said...

அன்புச் சகோ.ரொபின்க்கு!
கட்டுரையை முழுமையாக வாசியுங்கள்! என்ற இஸ்ஸுத்தீன் றில்வானுடைய கருத்துக்கு தாங்கள்:
//பதிவைப் படித்தபின்புதான் எழுதியுள்ளேன். கிறிஸ்தவ கலாச்சாரம் வேறு - மேற்கத்திய கலாச்சாரம் வேறு. விவரம் தெரியாமல் எழுதவேண்டாம்//என்று எழுதியுள்ளீர்கள்.

தங்களைப் பொருத்த வரை பதிவைப் படித்துள்ளீர்கள். ஆனால் விளங்கிப் படிக்கவில்லை என்பது, பளிச்சிடுகிறது. அதனால்தான் அறை குறையில் கருத்து என்ற பெயரில் -கமான்ட்- கொடுத்துள்ளீர்கள் போலும். தயவு செய்து தங்களை விவரத்தோடு கருத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

//கிறிஸ்தவ கலாச்சாரம் வேறு - மேற்கத்திய கலாச்சாரம் வேறு//
எந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள், இக்கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களுடைய கலாச்சாரங்களாகட்டும் அல்லது கிறிஸ்தவக் கலாச்சாரமாகட்டும் யாருடைய கலாச்சாரமானாலும் -இங்கு நீங்கள் இரண்டையும் வெவ்வேறாக பிரித்துக் காட்டினாலும் சரி பிரிக்காவிட்டாலும் சரி- இஸ்லாத்தைப் பொருத்த வரை அதனைப் பின் பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதைத்தான் இக்கட்டு சொல்லி நிற்கிறது.

முதலில் ஒரு விஷயத்தைப் வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனை சரியாகப் புறிந்து கொள்வதர்க்கு முயற்சியுங்கள்!

//இந்தப் பதிவின்படி பார்த்தால் ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவத்திலுள்ள முஸ்லிம்!// என்ற தங்களின் கருத்து, மெய்யாகவே நீங்கள் விவரமே இல்லாமல் எழுதியுள்ளீர்கள் என்பதை மேலும் உறுதிப் படுத்தியுள்ளீர்கள். ஏனெனில் இக்கட்டுரையைப் பொருத்த வரை இஸ்லாமியர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் யூத மற்றும் கிறிஸ்தவ கலாச்சாரங்களின் வாடை கூட முஸ்லீங்களின் பண்பாடுகளில் ஒழுக்கவிழுமியங்களில் எது வித மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடாது என்பதனைத் தெளிவு படுத்தும் பொருட்டு, வரையப் பட்டுள்ளதை யாவரும் அறிவர்.

மேலும் முஹம்மத் என்ற தூதர் கூட இதனை வன்மையாகக் கண்டித்து, அந்த யூத கிறிஸ்தவக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் மறித்த பின் மறுமையில் அவர்களுடனேயே எழுப்பப் படுவார்கள் என்பதனால் அதனை முற்று முழுதாக தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

அது போல் பாவி ஜார்ஜ் புஷ் மாத்திரமல்ல எவன் இந்த இஸ்லாத்திலுள்ள அம்சங்களைப் பின் பற்றுகிறானோ, அவன் ஒரு போதும் முஸ்லீம் என்ற வட்டத்தில் வரவே முடியாது. காரணம் “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுன் ரஸுலுல்லாஹி“ (அல்லாஹ்வைத் தவிர யாரும் கடவுள் கிடையாது, முஹம்மத் என்பவர் அல்லாஹ்வின் தூதர்) என்ற வாசகத்தை பரி பூரணமாக மனதால் ஏற்றுக் கொள்வதுதான் முஸ்லீம் என்பதர்க்கு போதுமான அளவுகோள்.
ஆனால் முஸ்லீம்கள், அவ்வாறல்ல! அவர்களை ஏற்பது கிடையாது. மாறாக ஏற்காவிட்டாலும் அவர்களின் கலாச்சாரங்கள்-பண்பாடுகள் அந்த சாயல் கூட, ஓர் இஸ்லாமியரிடம் அறவே வரக் கூடாது. வந்தால், ஒரு முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போல் ஆகிவிட சமீபித்து விட்டான் என்ற முன்னெச்சரிக்கையைத்தான் முனைப்புடன், முஹம்மத் (ஸல்) அவாகளின் கூற்று இங்கு விளக்குகிறது. எனவே ஜாக்கிரதையாக இருக்கும் படி வருகின்ற உத்தரவுதான் அது!

மறுமையை ஏற்றுக் கொண்ட முஸ்லீங்களுக்குத்தான் இக்கட்டுரை வரையப் பட்டுள்ளது. இதர சமயத்தவர்களுக்காக அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.
நன்றி
அன்ஸார்-தோஹா