என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 17


தொடர்   - 17
ஆமை வேகத்தில் பக்கங்களை வாசிக்க ஆரம்பித் சில மாதங்களே என்னுள் உதயமான மாற்றங்களை என்னால் மனப் பூர்வமாக உணரமுடிந்தது.

சந்திக்கும் நண்பர்களுடன் வாசித்தவற்றை பகிர்ந்துகொள்ள சிந்தனை தூண்டல் ஏற்பட்டது,

நண்பர்களின் அமர்வுகளில் தேவையற்ற, வீணான பேச்சுகள் மூச்சுக்களுக்கு சந்தர்ப்பம் குறைய ஆரம்பித்ததுடன் தேவையற்ற கலந்துரையாடல்களின் போது அந்த அமர்வை விட்டு ஒதுங்கி இருப்பதே உசிதமானது என்ற மனோ நிலை எனக்கு ஏற்பட்டது.

வேகமான பொழுதுகளுக்கிடையில் சுகமான காற்று சுவாசங்களுடன் கால நேரங்கள்……!

தந்தையின் ஆலோசனைகளின் பிரதிபலிப்புக்கள் என் நடத்தைகளில் மனக்கும் போது அவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்க ஆரம்பித்ததை உணர ஆரம்பித்தேன்.

நன்றிகள் அனைத்தும் படைத்தவனுக்கே என்று தினம் தினம் வாய் விட்டு நன்றி சொல்லிக் கொள்வேன்.

புதிய விடயங்கள் எங்கே படிப்பது? எப்படி தேடுவது? மேடைகளில் பேசும் அறிஞர்கள் எப்படி இவ்வளவு தகவல்களை திரட்டி வந்து சமர்ப்பிக்கின்றார்கள்? என்ற எனது நீண்டகால கேள்விகளுக்கு வாசிப்பு முயற்சி பதில் தர ஆரம்பித்தது.

ஒரு புத்தகத்தை வாசித்து கடைசி பக்கத்திற்கு வருகின்ற போது அங்கு சில துணை நூட்கள் என்ற பெயரில் பட்டியல் இருக்கும், இத்தனையையும் படித்து அதன் துணையுடன் தான் இந்த புத்தகத்தை எழுதினாரா? என்பது புரியும்.

அப்படியென்றால் தகவல் தேவைப்படும் போது நண்பர்களிடத்திலோ, தந்தையிடத்திலோ போகத் தேவையில்லை, விடயம் தொடர்பான புத்தகங்களை தேடி வாசித்தாலே போதுமானது என்ற இரகசியத்தை தெரிந்துகொண்டேன்.

நண்பர்களில் பலருக்கு இதன் பயன்களை எடுத்துச் சொல்லி இருக்கின்றேன்.

அதனை ஆமோதிப்பவர்களும், புறக்கனிப்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
இதற்கெல்லாம் எங்கே நேரம் என்று கேள்வி கேட்கிற பலரும் இருக்கிறார்கள்.

சில நேரங்களில், இப்படியான நண்பர்களை எனது தந்தையிடத்தில் அழைத்து, அமரவைத்து உபதேசிக்க வேண்டும் போல் தோன்றும்.

ஒரு நாள் பாதையோரமாக தந்தையுடன் நடந்துகொண்டிருக்கும் போது அங்கு தற்செயலாக கண்ட விபத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும் போது நேரங்கள் பற்றி, அதன் பயன், பெறுமதி தொடர்பாக எனக்கு நிரையச் சொல்லிக் கொடுத்தார்.

விபத்தில் சிக்கிய அந்த மனிதரிடத்தில் ஒரு வினாடி தாமதிக்காமல் பாதையை கடக்க எடுத்த முயற்சி உயிரையே காவிக்கொண்டது.
நிறையப் பேர் நேரம் தங்கத்தை விட பெறுமதியானது தங்கம் தான் நேரம் என்று சொல்கிறார்கள், ஆனால் நேரம் தான் மனிதனுடைய வாழ்க்கை என்பது என் தந்தையின் சிந்தனையில் உதித்த தத்துவம்.


50 வருடங்கள் வாழ்கின்ற ஒருவன் அவனது வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு நிமிடங்களும் அவனுடைய வாழ்க்கையின் பகுதிகளாகும்.
ஒரு மனிதனின் முழு உடலில் ஒரு பகுதி பாதிப்புக்குள்ளாகும் போது முழு உடலும் அந்த பாதிப்பை சுமக்கின்றன, கஷ்டத்தை அனுபவிக்கின்றன,

அது போன்று, ஒரு நிமிடத்தை வீணாக்குவது முழு வாழ்வையும் அது பாதிக்கும்.

பரீட்சையில் தோற்று (பெயிலாகி)ப் போனவர்களிடத்தில் ஒரு வருடத்தைப் பற்றி கேட்டால், தான் இழந்த நேரங்களின் பெறுமதியை அழகாக உணர்த்துவார்கள்.

நேரங்களை திட்டமிட்டு வகுத்து அன்றாட காரியங்களை கவனிக்கும் போது கடிகாரமே தேவைப்படாது.

என் தந்தை, ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கின்ற அதே தருணத்தில், அதனை நிருத்திவிட்டு அடுத்த வேலைக்குத் திரும்புவார், அப்போது அவரிடமிருந்து நான் கற்றதும் கவனித்ததும் இதுதான்.

சூரிய காந்திப் பூவும் இதை செய்கிறது, சூரியன் உதிக்கும் போது அதன் திசையிலேயே அதன் நேரத்திலேயே இதுவும் உதிக்கின்றது.

எமது வீட்டுச் சேவல்களும் இதை செய்கின்றன, அதிகாலையானதும் அது விழித்தெழுந்து, உரக்கத்திலிருக்கும் ஊரையே கூவி துயில் விழிக்கச் செய்கிறது.

நேரங்களுடன் நடத்தைகளையும்
தேவைகளுடன் நேரங்களையும்
நேரங்களுடன் கடமைகளையும்
இறுக அணைத்து நடைபோடும் மனிதன் தோற்றதாக சரித்திரம் இல்லை.

தனிமையை உணர்வதும் கவலையில் வாடுவதும் சிபோது சைக்கோவாக வலம் வருவதும் நேரங்கள் வெற்றிடமாகும் போது மட்டுமே.

பகல் முழுதும் வயலில் நின்று கலைத்துப் போன விவசாயிகள் மாலையில் வீடு வந்ததும் உறங்கும் வரையும் ஓய்வில்லாமல் கைகளையும் கால்களையும் அசையவிட்டு ஏதாவது பண்ணுவதையும் பண்ணத்துடிப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அதனால் அவர்கள் சாதனையாளர்கள்.

அதனை பின்பற்றத் தவரியதனால் நாங்கள் வேதனையாளர்கள்,
அது அனுபவத்தில் உணரப்படும் போது மட்டுமே முதலைக் கண்ணீர் வடிக்கின்றோம்.

…………தந்தை அன்று மாலை கொஞ்சம் ஓய்வாக இருந்தார், வா விளையாடலாம் என்று என்னை அழைத்தார், ஓகே இந்தா வந்தாச்சி என்று தந்தைக்கு முன் உட்கார்ந்தேன்.

மெதுவாக டாம் தட்டில் இருந்த காய்களை நகர்த்த ஆரம்பித்தார் தந்தை.
ஒவொவொரு காயையும் நகர்த்தும் போது ஏன் இவ்வளவு அமைதியாக, ஆழமாக யோசிக்கின்றார் என்று ஆச்சரிப்பட்டேன்.

அந்த கேம் (Game) முடிந்தபின் தான் தெரிந்து கொண்டேன், காய்களை நகர்த்தும் போது எதிர்முனையில் இருப்பவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? வலது காயை நகர்த்தும் போது இடது பக்க காய்களின் நிலை என்ன? எதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்? என்பவைகளை முன்னதாகவே யோசித்து விளையாடினால் தான் வெற்றியடையலாம் என்று தெரிந்துகொண்டேன்.

முதல் ஆட்டத்தில் நான் தோல்வியடைந்து, இரண்டாம் ஆட்டத்தை தொடரும் போது எனக்கு சில வழிகாட்டல்களை, பயணிக்கும் திசைகளை எவ்வாறு முன்னதாகவே தீர்மானிப்பது என்பதை கூறிய படியே விளையாடினார்.

மூன்று கேம்ஸ் தொடராக விளையாடக் கிடைத்தது, தொடராக மூன்றிலும் தோல்வியை தழுவினேன், ஆனால் அதற்கிடையிலுள்ள இரகசியங்களை ஓரளவு தெரிந்துகொண்டேன்.


படரும்............


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

6 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//முதல் ஆட்டத்தில் நான் தோல்வியடைந்து, இரண்டாம் ஆட்டத்தை தொடரும் போது எனக்கு சில வழிகாட்டல்களை, பயணிக்கும் திசைகளை எவ்வாறு முன்னதாகவே தீர்மானிப்பது என்பதை கூறிய படியே விளையாடினார்.//

ம்ம்.. ஆட்டம் தொடரட்டும்

Issadeen Rilwan said...

வ்அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்,
ஆட்டம் தொடர உங்கள் ஆலோசனைகள் தேவை.
நன்றி.

Anonymous said...

//தனிமையை உணர்வதும் கவலையில் வாடுவதும் சில போது சைக்கோவாக வலம் வருவதும் நேரங்கள் வெற்றிடமாகும் போது மட்டுமே.// super thoughts

Anonymous said...

//நேரங்களுடன் நடத்தைகளையும்
தேவைகளுடன் நேரங்களையும்
நேரங்களுடன் கடமைகளையும்
இறுக அணைத்து நடைபோடும் மனிதன் தோற்றதாக சரித்திரம் இல்லை.// also this

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
எல்லோரும் தொடராக கட்டுரை எழுதினால் வாசிப்பவர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தும் என்று பயப்படும் பொழுது தாங்கள் மட்டும் நீண்ட தொடர்களை கொடுத்து அசத்துகிறீர்கள், வாழ்த்துகள்!
///நேரங்களுடன் நடத்தைகளையும்
தேவைகளுடன் நேரங்களையும்
நேரங்களுடன் கடமைகளையும்
இறுக அணைத்து நடைபோடும் மனிதன் தோற்றதாக சரித்திரம் இல்லை.///
இந்த புது மொழியை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன், தங்களுடைய தயாரிப்பா? நன்றாக உள்ளது.

தோல்விதான் வெற்றிக்கு முதல் படி, ஒருவன் தோல்வி அடையும் பொழுதுதான் நான் தோல்வியடைய என்ன காரணம் என ஆராய ஆரம்பிக்கிறான், அதனால் அவன் அடுத்த அடியை மிக நிதானமாக எடுத்து வைக்க முடியும். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்கும். நன்றி!

Issadeen Rilwan said...

வஅலைக்கு வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்,
1. தொடர் கட்டுரையை தொடராக வாசித்தால் மாத்திரம் அதனை புரிந்துகொள்லலாம் என்று அதிகமானவர்கள் நினைக்கின்றார்கள்.
இந்த கட்டுரை ஒவ்வொரு தொடரிலும் பல வித்தியாசமான கருத்துக்களையும் விடயங்களையும் பேசி வருகின்றேன்.
2. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளும் எப்படி நடந்துகொள்ள வேந்தும் என்பதையும்
3. பிள்ளைகள் எவ்வளவு திறனுடையவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதை நடைமுறை உளவியலுடன் சொல்ல முனைந்திருக்கின்றேன்.

இது இன்னும் பல தொடராக தொடர உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பதிய தவறாதீர்கள்.

அன்புடன்,
மாற்றங்கள் தேவை