மாற வேண்டியவர்கள், ஆனால் மாறிவிட்டோம்
நாங்கள் மாற வேண்டியவர்கள், ஆனால் மாறிவிட்டோம்
நாங்கள் மாற்ற வேண்டியவர்கள், ஆனால் மாற்றப்பட்டுவிட்டோம்.
We have to change, but have become
we needed to change, but have been changed.
we needed to change, but have been changed.
எப்படி?
எதில்?
உலகை படைத்தவனால் உலக மக்களுக்கென தனி
கொள்கை, கலாச்சாரம் நாகரீகம் போதிக்கப்பட்டிருக்கின்றது, அதனை பின்பற்றி
நடக்கின்ற போது தான் ஒரு மனிதன் முழுமையான மனிதனாக, கடவுள் எதிர்பார்க்கின்றன
அடியானாக வாழ்ந்து மரணிக்க முடியும்.
அல்லாஹ்வின் போதனைகளையும் அவன் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை
நடத்தைகளையும் பின்பற்றி நடப்பவர்கள் இந்த உலகில் வாழும் ஏனைய மக்களுக்கு முன்னுதாரண
புருக்ஷர்களே ஆகும்.
உலக படத்தில் அடையாளங்காணப்பட்டுள்ள
அனைத்து நாடுகளிலும் இஸ்லாம் சென்றடைந்து அங்குள்ள மக்களின் மனங்களில் மாற்றம் வருவதற்கு
காரணம் முஹம்மத் (ஸல்) அவர்களின் நடைமுறை வாழ்வும் அவர்களுடன் வாழ்ந்து மரணித்த
சக தோழர்களின் வாழ்வியல் நடைமுறைகளும் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவைகள் அனைத்தும் வாழ்வியல் முண்ணுதாரனங்களாக, அவர்கள் ஒவ்வொருவரும்
நடமாடும் உதாரணப் புருக்ஷர்களாக இருந்திருக்கின்றார்கள்.
இஸ்லாம் போதித்த சட்டங்கள் முழுதையும்
வாழ்க்கையில் எடுத்து நடக்கின்ற போது அதனை காண்கின்ற பிறருக்கு முன்னுதாரணமாக அது பரிணமிக்கும்.
அது நாளுக்கு நாள் முஸ்லீம்
சமூகத்தில் குறைய ஆரம்பித்திருக்கின்றது.
முஸ்லிம் தேசங்கள் என்று பெயர்
குறிப்பிட்டு, தங்களை அடையாளப்படித்திக்கொண்டுள்ள நாடுகளில் வெளிவூர்
வழிகாட்டல்களும் மேற்கத்தைய கொள்கைகளும் உட்பாச்சப்பட்டு வருகின்றன.
முஸ்லீம் பெயர் சுமந்து
நடமாடுகின்றன ஒவ்வொரு தனிமனிதர்களின் அன்றாட நடத்தைகளிலும் மேற்கத்தைய அநாகரிக
கலாச்சாரங்கள் முலாம்பூசப்பட்டு வருகின்றன.
இவைகள் மேற்கத்தையர்களின்
திட்டமிட்ட, தூரநோக்கு சதிகளும் கூட. ஆனால் இதனைப் புரிந்துகொள்ளத் தெறியா
அப்பாவிகள் போல் நம் சமூகத்தில் பிரநிதித்துவப்படும் தனிமனிதர்களும் அவர்களை
பிரநிதித்துவப்படுத்தும் அரச, அதிகாரத் தலைவர்களும் காலம் கடத்துவது கடும்
மனவருத்தத்தைத் தருகின்றது.
அது எப்படி என்பதை நமது சூழல்
சாட்சிப்படுத்தும், நடுநிலையாக நின்று சிந்திக்கும் போது மட்டும்.
அதனை முழுமையாப் புரிய வைப்பதற்குமுன்னர்
இந்த வசங்களை ஊர்ந்து கவனியுங்கள்.
“யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே
மாட்டார்கள். "அல்லாஹ்வின்
வழியே (சரியான) வழியாகும்'' எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த
பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து
காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.” (அல் குர்ஆன் 2 :120)
“நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு
(ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக்
கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு
அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்.
திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.” (அல் குர்ஆன் 3 : 28)
“நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை
விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை
அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?” (அல் குர்ஆன் 4: 144)
“நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக்
கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர்
மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச்
சார்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.” (அல் குர்ஆன் 5 : 51)
“நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்
வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக்
கேலிக்கையாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!” (அல் குர்ஆன் 5: 57)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்''
என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே!
("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்' என்று) யூதர்கைளயும் கிறித்தவர்கைளயுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?'' என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு யாரை?''
என்று
(திருப்பிக்) கேட்டார்கள். (முஸ்லிம் 5184)
ஒரு விருந்தாளி நமது வீட்டுகுக் வந்தால்
முடியுமானளவு அவரது விருப்பு வெருப்புக்களை புரிந்து எந்த குறையுமில்லாமல் அவரை கவனித்து
சிறந்த விருந்தோம்பலுக்கான விருதை (Award for best hospitality) தட்டிக்கொள்ள முனைவது
ஒன்றும் தவறில்லை. அது ஒவ்வொரு நம்பிக்கையாளன் மீதும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆனால்
வருகின்ற விருந்தாளி எந்த மதத்தை, கொள்கையைச் சார்ந்தவனாக இருந்தாளும் அவனை கவனிக்கும்
போது நமது கொள்கைகளுக்கு (Islamic doctrine) வெளிச் சென்று கவனிக்க வேண்டும் என்பதை
நமது மார்க்கம் எம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கவில்லை.
பன்றி
இறைச்சியை அதிகம் நேசிக்கின்ற ஒரு பிற மதச் சகோதரர் நமது வீட்டில் சில நாட்களுக்கு
தங்கி இருக்கின்றார் என்பதற்காக அவருக்கு பன்றி இறைச்சியைத் தேடி நமது வீடுகளில் படைத்து
அவர் வயிறு புடைக்க கொடுப்பது என்பது எவ்வளவு அநாகரிகமான, தடுக்கப்பட்ட செயல்? (இஸ்லாம்
பன்றியை முழுமையாக தடுத்திருக்கும் போது).
ஓய்வு
நேரங்களில், விடுமுறைகளில், விருந்துபசாரங்களில் மதுபான குடியை தனது வலக்கமாக்கிக்
கொண்ட ஒரு பிறமதச் சகோதரர் நமது வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறார் என்பதற்காக
நாம் அவருக்கு மதுபானம் தேடிக்கொடுப்பது அல்லது நமது வீட்டில் குடிக்க அனுமதிப்பது
எப்படி ஏற்றுக்கொள்ளதக்க செயலாக மாறும்? (இஸ்லாம் மதுபானத்தை முழுமையாக தடுத்திருக்கும்
போது)
திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்ணுடன்
ஒரு ஆண் தனியாக இருப்பதை, பயணிப்பதை, திரையற்று தேவையற்ற தொடர்புகளை வைத்திருப்பதை
தடுத்திருக்கும் போது அவர்கள் நமது விருந்தாளிகள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் எப்படி
அவர்கள் இருவரையும் தனியாக இருக்க, எதையும் சேர்ந்து செய்ய அனுமதிக்க முடியும்?
நமது கொடுக்கல் வாங்கள்களில், வியாபார
தொடர்புகளில் வட்டியை இஸ்லாம் முழுமையாக தடுத்திருக்கும் போது நமது வீட்டிற்கு வந்திருப்பவர்
நமது விருந்தாளி என்பதற்காக அவர் அதனை செய்தால், அல்லது அவருக்கு அதில் ஈடுபட அவருக்கு
தேவையான வசதிகளை நாம் செய்துகொடுப்பதற்கு நமது அனுமதி இருக்கின்றதா?
மேலே அடையாளப்படுத்தியது போன்று, தடுக்கப்பட்ட
உணவு வகைகளை உண்ண, பருக அனுமதிப்பது முதல், தடுக்கப்பட்ட விதத்தில் ஆணும் பெண்ணும்
தனியாக இருப்பது வரை அனைத்து நடைத்தைகளையும் எப்படி நமது தனிப்பட்ட நிர்வாக, அதிகாரம்கொண்ட
வீடுகளுக்குள் அனுமதிக்க முடியாதோ அப்படியே நமது சொந்த இறையாண்மை பேணப்படும் தேசத்திற்குள்ளும்
நுழைந்துவிடாமல் பாதுகாப்பது நம் மீது கடமையாகும்.
ஏனைய பிரதேசங்களிலிருந்து நபி முஹம்மது
(ஸல்) அவர்களை சந்திக்க வந்து பள்ளியில் தங்கி இருந்த காபிர்களுடன் நபி அவர்கள் எவ்வாரு
நடந்துகொண்டார்கள் என்று படிக்கும் போது இதனை தெரிந்துகொள்லலாம்.
அதே போல், மதீன தேசத்தை தன் நிருவாகத்திற்கு
கீழ் கொண்டு வந்து தனது அரசியல் யாப்பிற்கு கீழ் எப்படி பிற மத, பிற நாட்டு, மக்களை
இஸ்லாமிய சட்டங்களை பிறதிபலிக்கும் வகையில் நிருவகித்தார்கள் என்று படிக்கும் போது
இவைகளை அழகாக தெரிந்துகொள்ள முடியும்.
நமது வீட்டுக்கு, தேசத்திற்கு வந்த விருந்தாளிகள்,
உழைக்க வந்தவர்கள், அவர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் கவனத்தில் கொண்டு அவைகளுக்கு
எந்த குறைபாடுகளும் வராத விதத்தில் நாம் அவர்களின் போக்கு அவர்களை விட்டுவிடும் விதம்
குறித்து அதன் சாதக பாதகங்கள் குறித்து ஒவ்வொரு தனிமனிதர்களும் ஒவ்வொரு பொருப்புதாரர்களும்
சிந்திக்க வேண்டும்.
நடைமுறையில் அதன் விளைவு என்னவானது, என்னவாகி
இருக்கிறது என்பது குறித்து உணர(realize) வேண்டும்.
திரைகளில் காண்பிக்கின்ற இன்றைய சினிமாவை
முஸ்லிம்களாகிய நாங்கள் எதிர்க்கின்றோம் காரணம் அது 95 வீதம் தீமைகளை வழங்குகின்றது,
மனிதர்களை வழிகெடுக்கின்றது என்பதற்காக.
அப்படி என்றால் நாம் நமது ஊரில் சினிமாக்கொட்டகை
இருப்பதை நாம் அனுமதிப்போமா? அதை அனுமதித்தால் (நாம் மாற்ற வேண்டியவர்கள் மாறிவிட்டோம்).
சினிமாவில் வருகின்ற நடிகைகள், பெண்கள்
அரை நிர்வாணமாக உடை அணிந்து காட்சி தருவதும் நவீன பெக்ஷன் என்ற பெயரில் செய்துகொள்ளும்
அழங்காரங்கள் மூலம் நமது பாடசாலைப் சிறுமிகள் முதல் வீட்டுப்பெண்கள் வரை வழிகெடுக்கப்படுகிறார்கள்
என்று சினிமாவை எதிர்கின்றோம்.
அப்படியென்றால் நமது ஊரில் ஒரு பெண் அரை
நிர்வானமாக உடை அணிந்து பாதைக்கு வருவதை அனுமதிப்போமா? (மாற்ற வேண்டியவர்கள், அதனை
தடுத்து நல்ல கலாச்சாரத்தை கற்பிக்க வேண்டியவர்கள் அந்த அநாகரிகமான கலாச்சாரங்களை கண்டு
அதனால் மாறிவிட்டோம்).
சினிமாவில் சண்டை காட்சிகள் முதல் சாகாச,
சாதனை காட்சி வரை அனைத்திலும் புகையும் மதுவும் தான் பாவிப்பதாக காண்பிக்கப்படுகீன்றது,
அது நமது ஆண்களை வழிகெடுக்கின்றது என்பதற்காக சினிமாவை நாம் எதிர்க்கின்றோம்.
ஆனால் எது எமது சமூகத்தை வழிகெடுக்கும்
என்றோமோ அதே சிகரட், மது நமது பூமிகளில் விற்பனையாக்கப்படுகின்றது, ஆண்களை கடந்து பெண்களும்
அதனை பொது இடங்களில் பாவிக்க முன்வந்துவிட்டார்கள் என்றார் மாற்ற வேண்டியவர்கள் மாறி
விட்டோம்,
மாற்ற வேண்டியவர்கள் நாங்கள் மாற்றப்பட்டுவிட்டோம்.
இவைகள் அனைத்தும் நடைமுறையில் நாம் அனைவரும்
காண்கின்ற உதாரணங்கள் மட்டுமே. எதுவும் கற்பனையுமல்ல, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளுமல்ல.
நாம் மாற வேண்டும், பிறரையும் மாற்ற வேண்டும்,
அப்படியென்றால் எப்படி அது சாத்தியமாகும்?
வலரும்……..
(வலரட்டும் ஆலோசனை வழங்குங்கள்……………)
No comments:
Post a Comment