8) ஆரோக்கிய வாழ்க்கைத் திறன்: நல்ல ஆரோக்கிய உள, உடல் நலனை பேணக்கூடிய திறமை.
இப்போது இந்த 8 விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதை சாதாரணமாக
எம்மால் கற்பனை பண்ணிபார்க்க முடியும்.
அதனால் இந்த 8 திறமைகளையும்
எமது பிள்ளைகள் கொண்டிருந்தால் எந்த வகையான வாழ்க்கை அமைப்பை வெற்றிகொள்வார்கள் என்பதற்கு
இந்த படம் உதவியாக இருக்கும்.
இவைகள் எமது பிள்ளைகளை தன்நம்பிக்கையின் பக்கமும் சிறந்த நன்னடத்தையுள்ள
மனிதநேயத்தின் பாலும் திசை திருப்ப உதவும் ஊடகங்களாகும். அத்துடன் போட்டிகளையும் தோல்விகளையும் தைரியமாக
எதிர்கொள்கின்ற சக்தியையும் கட்டியெழுப்புகின்றது. அதற்காக பிள்ளைகளுக்கு எப்போதும் நல்ல முறையான
சக்தியை கொடுத்து அவர்களின் வாழ்க்கையை தூக்கிவிடுவோம்.
இவைகளை கற்றுகொடுப்பதன் மூலம் அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றலாம்,
அவர்கள் தங்களது வாழ்க்கையில் நிறைய தியாகங்களைச் செய்ய
துணைசெய்யும்,
சந்திக்கின்றன நிறைய கஸ்டங்களுக்கு அவர்களால் சுலபமாக முகங்கொடுக்கவும்
இது சந்தர்ப்பமாக அமையும்.
நாம்
வாழ்க்கையில் நிறைய, வித்தியாசமான கதாபாத்திரங்களை தாங்கி நடித்திருப்போம்,
ஆனால் பெரிய புகழையும் மதிப்பையும் பெற்றுத்தரக்கூடிய
ஒரு பாத்திரம் தான் சிறந்த தந்தையாக நடிப்பது,
தந்தைக்குரிய முழுமையான தகுதிகளையும் தாங்கி நடப்பதுடன் உரிய
கடமைகளை உரிய முறையில் செய்து காட்டவும் வேண்டும்.
அதில் குறிப்பாக எமது பிள்ளைகளுக்கு அவர்களுக்கென சொந்தமாக சிந்திக்கின்ற
மன ஆற்றல் இருக்கும் போது,
அவர்கள் அவர்களுக்குரிய
வேகத்தில் செயற்படும் போது அவைகளுக்கு அப்பால் நாம் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும்
உற்புகுத்தி அதில் வெற்றிபெறுவது என்பதே தந்தைக்குரிய சரியான தகுதியாகும்.
Ø
மேலழுத்தங்கள்
மற்றும் தவறான சிந்தனைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாத்தல் (Protect
the Children from depression and stress).
அண்மைக் காலமாக எல்லாத்துறையிலும் கடுமையான போட்டிகள் நிலவுவதனால்
பிள்ளைகள் கடுமையான மன அழுத்தங்களுக்கும் சோர்வுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்.
பாடசாலைக்குச் செல்கின்ற எமது பிள்ளைகள் அங்கு நிலவுகின்ற போட்டிப்
பரீட்சைகள் காரணமாக உள,
உடல் ரீதியாக கடுமையாக
தங்களை கஸ்டப்படுத்திக் கொள்கிறார்கள். சில
பிள்ளைகள் தங்களது பெற்றார்களின் எல்லையற்ற தூண்டுதல்களினால் சோர்வடைந்து விடுகின்றார்கள், சில நேரம் இப்படிப்பட்ட போட்டிப் பரீட்சைகளுக்கு
பயந்து சில பிள்ளைகள் படிப்பையே இடைநிறுத்தி
விடுகின்றார்கள்.
இப்படிப்பட்ட மன அழுத்தங்களிலிருந்தும் சோர்வுகளிலிருந்தும்
எமது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள பெற்றார்களாகிய நாம் சில ஆலோசனைகளையும் நடைமுறைகளையும்
கையாள வேண்டும்.
1.
அடுத்தவர்களின் சாதனைகளுடன் எமது பிள்ளைகளை
ஒப்பிட்டுக்காட்டக் கூடாது, (Never
compare with others performance).
பக்கத்து வீட்டு பிள்ளையின் பெயரைச்
சொல்லி இந்த பரீட்சையில் அல்லது குறித்த பாடத்தில் இவனை விட நீ அதிக மார்க்ஸை பெற வேண்டும்
என்று எமது பிள்ளைகளிடத்தில் கூறுவது பயனளிக்காத ஒரு விடயமாகும்.
இந்த முறைமை எமது பிள்ளைகளை விறைப்படையவும்
ஆர்வக்குறைவை உண்டுபண்ணக் கூடியதாகவும் அமையும். அதே போல் சொந்த சகோதரர்கள், நெருங்கிய நண்பர்களுடன் ஒப்பிட்டுக் காட்டுவது
அவர்களின் உறவை துண்டிக்கவும் இருவருக்கிடையில் பifமையை
ஏற்படுத்தவும் உதவும்.
இது தரக்குறைவான, பொறாமையான, மோசமான நடத்தைகளையும் தோற்றுவிக்கும்.
எமது பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதற்கு
பிரயோசனமான, இலேசான வழிதான் அவர்களிடத்தில் உள்ளதையே
அவர்களுக்கு ஒப்பிட்டு கூறுவதாகும்,
உதாரணமாக,
“கடந்த வாரப் பuPட்சையின்
போது கணிதப் பாடத்தில் உனது வகுப்பில் நீ தான் திறமைச் சித்தியைப் பெற்றாய்”
“ஒரு வாரத்திற்கு முன்னால் நடந்த மாணவர் மன்றத்தில்
நீ சிறந்த முறையில் நிகழ்ச்சி செய்தாய்”
“நாளை நடக்க இருக்கும் நிகழ்ச்சியிலும் நீ
சிறந்த தகுதியை பெற வேண்டும்”
என உற்சாகப் படுத்த
முடியும்.
இந்த வகையான ஊக்குவிப்பு முறையே சாத்தியமானதாகும்.
2. தியாகங்கள்
செய்யத் தூண்டுதல்,
(Pay
attention to efforts and determinations not results)
எமது பிள்ளைகள் எவ்வளவு புள்ளிகளை வாங்குகின்றார்கள், எந்த அந்தஸ்தில் சித்தியடைகின்றார்கள் என்பதற்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் படிப்பில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர்களின் விடாமுயற்சி, விட்டு கொடுப்பு, கடுமையான உழைப்பு, என்பதற்காக வழிகாட்டி வேண்டும்,
அதன் முயற்சிகளை எடுத்துக்காட்டி அவர்களை புகழ வேண்டும்.
எமது சூழலில் சில பிள்ளைகளின் பெற்Nwhர்களின் நடத்தைகள் விமர்சிக்கத்தக்கதாகும்,
குறித்த ஒரு பிள்ளை தொடராக நல்ல
புள்ளிகளை வாங்கி வகுப்புகளில் நல்ல முறையில் சித்தியilந்து
வரும் போது சில நேரம் ஏதாவது பிரச்சினை காரணமாக குறித்த பாடத்தில் அல்லது குறித்த வகுப்பில்
குறைந்த மார்க்ஸை வாங்கி விட்டது என்பதற்காக அந்த பிள்ளையின் தந்தை கடுமையாக அடித்துவிடுகிறார், அவனது தாய் 3,4 தினங்கள் கதைக்காமல் இருந்து விடுகிறாs;;, இதனால்
இந்த பிள்ளை மனவருத்தப்படுவதுடன் நோயிலும் விழுந்துவிடுகிறது.
பெற்றோர்கள் படிப்பு விடயத்தில் குறிப்பாக அதிக மார்க்ஸ்களுக்கும்
திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என்பது பிள்ளைகளை பாதுகாப்பற்ற, வளர்ச்சிக்கு தடையான நிலைக்கு உட்படுத்த
தூண்டும் போக்காகும்.
இதன் போது போட்டிகளுக்கு முகங்கொடுப்பது கஸ்டமாக இருக்கின்றது.
அதனால் பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும் என்றால் அவர்களின் தியாகங்களையும்
விடாமுயற்சிகளையும் பாராட்டலாம்,
பிள்ளைகளின் செயல்களை பாராட்டுவது என்பது அவர்களுக்கு மன உறுதியை
அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்வரும் காலங்களில் அதிகம் முயற்சித்து, தொடர்ந்தும் புகழை
பெற வேண்டும் என்பதில் விரைந்து செயற்பட தூண்டும்.
பிள்ளைகளை வற்புறுத்துவதையும் அதிக
அழுத்தங்களை பிரயோகிப்பதையும் நிறுத்திவிட்டு அவர்களின் நல்ல நடத்தைகளுக்காகவும் முயற்சிக்காகவும்
அவர்களை பாராட்டலாம்,
அது அவர்களிடத்தில் விடா முயற்சி,
தொடராக பிரத்தியோக வகுப்புகளுக்கு
விருப்பத்துடன் செல்லுதல்,
உரிய நேரத்திற்கு வீட்டு வேiyகளை செய்தல்,
பரீட்சைக்கு முறையாக தயாராதல், என்று அவர்களின் செயற்பாடுகளில் பல மாற்றங்களை
கண்டுகொள்ள, பெற்றுக்கொள்ள உதவியாக அமையும்.
இந்த மாற்றங்கள் அவர்களின் வெற்றிக்கு
நல்ல முறையில் உதவும்.
எப்போதும் எமது பிள்ளைகள் குறைந்த
புள்ளிகளுடன் வீட்டுக்கு வந்தால்
“அடுத்த தடவை நன்றாக
படித்து நல்ல புள்ளிகளை வாங்கு”
என்று நாம் சொல்ல
வேண்டும், அது அந்த பிள்ளையின் தவறை உரிய நேரத்தில் உணரச் செய்வதுடன் மனதில் இருக்கும்
மன அழுத்தq;களை குறைக்கச் செய்து தொடர்ந்தும் முயற்சிக்க
உதவும்.
இந்த சாத்வீகமான உணர்வு எமது பிள்ளைகளை நன்றாக சிந்திக்கச் செய்யும்,
இந்த சிந்தனை நல்லமுறையில், துள்ளியமாகச் செயற்படச் செய்வதுடன்
இந்த செயற்பாடுகள் தகுந்த பெறுபேறுகளை எடுக்க உதவும்.
அதனால் எமது பிள்ளைகளை வெற்றியின் பால் செலுத்துவதற்கு அவர்களுக்கு
அதன் வழியை கற்றுக் கொடுப்போம்.
காட்டிக்
கொடுப்போம்.
3. பரீட்சையின்
முக்கியத்துவத்தை உணர்த்துதல், (Help Children to realize the benefits and importance of
all types of exams).
அதிகமாக பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றுவிப்பது? வித்தியாசமான பரீட்சைகளின் பயன் எனன? என்பது குறித்து போதிய அறிவற்றவர்களாக இருக்கின்றார்கள்.
பரீட்சைகளின் முக்கியத்துவங்களை எமது பிள்ளைகளுக்கு விளக்கப்படுத்த
வேண்டும். பரீட்சைகள் எமது பிள்ளைகளின் கல்வி
அறிவு, அது தொடர்பான நடத்தைகளின் எதிர்
விளைவை காட்டுகின்றது.
எமது பிள்ளைகள் உயர்தர வகுப்புகளில் சிறந்த பெருபேருகளை எடுப்பதற்கு
நாம் உதவ வேண்டும்.
உயர்படிப்புக்கள் சிறந்த
கல்வி தகமைகளை தருவதுடன் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களையும் நல்ல எதிர்கால வாழ்க்கையை
ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பங்களையும் கொண்டுவருகின்றது.
எமது பிள்ளைகளிடத்தில் எப்படியான வாழ்க்கை முறைமை தேவை என்றால் “வசதியான வாழ்க்கை என்பார்கள்” அப்படியென்றால் எதிர்கால வாழ்க்கையுடன் பரீட்சைகளின்
முக்கியத்துவங்களை தொடர்புபடுத்தி எமது பிள்ளைகளை சிந்திக்க செய்ய வேண்டும்.
பரீட்சைகளில் சிறந்த முறையில் சித்தியடைவது என்பது உயர்தர பரீட்சைகளுக்கு
அனுமதியை வெகு இலகுவில் பெற்று தருவதுடன் தொழில் வாய்ப்புக்கான நல்ல வழிகளையும் ஏற்படுத்தி தருகின்றன. சாதாரணமாக, இதனை உணர்கின்ற பிள்ளைகள் பரீட்சைகளை அதிக
விருப்புடையதாக எடுத்துக் கொண்டு அது தொடர்பான பயம், வெறுப்புக்களை போக்கி நல்ல முறையில் முயற்சிப்பார்கள்.
4. நல்லதற்கும்
கெட்டதற்குமுள்ள வித்தியாசத்தை கற்பித்தல், (Teach the Children to know the
difference between right and wrong)
எமது பிள்ளைகளுக்கு நன்மை எது தீமை எது
என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். எமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவற்றைவிட்டும் தவிர்ந்து நடக்க பழக்க வேண்டும்.
ஹஸன் (ரலி) ஸதகாப் பொருளான
ஒரு பேரீச்சம் பழத்தை
எடுத்து வாயில் போட்ட செயலைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "சீ, சீ,'' எனக் கூறி துப்பச் செய்து விட்டு, "நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?'' என்று கேட்ட சம்பவம் எமது பிள்ளைகளுக்கு
முன்ணுதாரமாக கற்பிக்கப்பட வேண்டும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1491)
நபி
(ஸல்) அவர்கள் தடுத்தது போன்று அல்-குர்ஆன் அல்-ஹதீஸில் இடம்பெருகின்ற ஏவல் விலக்கல்களை
பற்றிக் கற்றுக் கொடுப்பது அவர்களின் பயத்தை போக்கி எதையும் உற்சாகமாகச் செய்யத் தூண்டும்.
நன்மை தீமைகளை பேணுகின்ற விடயத்தில் பெற்றோர்களாகிய நாம் எமது
பிள்ளைகளுக்கு முன்னால் அவைகளை செயற்படுத்திக் காட்ட வேண்டும்.
நாம் நன்மை தீமைகளை பேணி நடக்கின்றோம் என்பது
நாம் என்ன ஏவுகின்றோம் என்பதை விட எதை செய்கின்றோம்
என்பதை எமது பிள்ளைகளுக்கு நடத்தைகளில் காண்பிப்பதாகும்.
தொடரும்………….தொடர் 10
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment