மொட்டுக்கள் மலர - part 10


  5.   இலட்சியத்தை வரையறுத்தல் (Control the Ambition).
இயற்கையாகவே எல்லா பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் வெற்றிபெற வேண்டும் என்று எதிபார்கின்றார்கள். ஆனால் அதற்காக எல்லை மீறிய இலட்சியங்களையும், குறிகோள்களையும் விதித்துவிடக் கூடாது.

ஒரு மாணவன் அதி சிறந்தவனாக இருந்தான், நன்றாக படிக்க கூடியவன், அவனது பெற்றோர்களின் எதிபார்ப்பெல்லாம் உயர்தரப் பரீட்சையில் முதல் மார்க்ஸை பெற வேண்டும் என்பதுதான், அதற்காக அந்த மாணவனை அதிகம் தூண்டிக் கொண்டிருந்தார்கள், நாட்கள் கடக்க பரீட்சைக்குரிய காலம் நெருங்கிவிட்டது, பரீட்சைக்கு ஒரு நாளைக்கு முன்னால் அதிக தலையிடி என்று வைத்திaசாலைக்கு அனுமதிக்கப் பட்டான், பரீட்சை முடியும் வரை வைத்தியசாலையில் காலத்தைக் கடத்திவிட்டான். உண்மையில் அவனுக்கு மனப்பயம் மட்டும்தான் இருந்திருக்கின்றது. தாய் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியுமா? என்ற சந்தேகம் கலந்த முயற்சி, அவனை அறியாமலே அவன் நோயாspயானான்.

இது அதிக வீடுகளில் நடந்தேரிக்கொண்டிருக்கின்ற பல்லாயிரம் சம்பங்களிலிருந்து தேடியெடுத்த ஒன்று மட்டுமே.

முன் வாசலில் தந்தையைக் கண்டால் பின் வாசலால் வெளிச் செல்கின்ற பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

வீட்டில் தாயை கண்டால் பக்கமாக மறைந்துகொள்ளகின்ற பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
ஓய்வு நேரங்களில் ஏதாவது பொய்ச்சாட்டுச் சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியே தப்பிச் செல்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம், மகனை, மகளை கண்டவுடன் படி என்பது அல்லது படிக்கவில்லையா? என்கின்ற ஒரே கேள்வி மாத்திரமே.
இந்த நடத்தை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுத்தி வருகின்றது.

பிள்ளைகளுக்கு பின்னால் ஓடுவதை விட, படி என்று துuத்துவதை விட்டுவிட்டு பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்றால், அவர்கள் சிறந்த பெWபேWகளை பெற வேண்டும் என்றால் அவர்களை துணிவூட்ட வேண்டும், அவர்களை உற்சாகப்படுத்தி படிக்கச் செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் எப்போதும், எல்லா பெற்றோர்களும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன, அதே போல் எல்லா பிள்ளைகளும் மறக்கக்கூடாத சில விடயங்களும் இருகின்றன,
உதாரணமாக,
பெற்றோர்கள்
பிள்ளைகள்
·         நல்ல வழிகாட்டல்களை கொடுத்தல்
·         சிறந்த முறையில் பயிற்றுவித்தல்
·         படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்
·         பெற்றோர்களின் தண்டனைகளும் மெளனமும் அதிகரித்தால் பிள்ளைகள் தோல்வியடைவர் என்பதை புரிந்து நடத்தல்.
·         படிப்பதற்கு முயற்சித்தல்
·         புதியதை கற்க வேண்டும் என்று 
ஆர்வம் கொள்ளல்
·         அதற்காக தன்னை முழுமையாக பயன்படுத்துதல்,
·         கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து செயற்படல்



கல்வியைத்தேடிக் கற்பதில் பிள்ளைகளின் விருப்பம் அதிகரித்தால் பெWபேWகள் அதிகரிக்கும்.

இந்த வேறுபாடுகளில் பெற்றோர்களின் கடமைகளை பிள்ளைகள் செய்யலாம், ஆனால் பிள்ளைகளின் கடமைகளை பெற்றோர்கள் செய்ய நினைத்தால் இருவரும் தோy;வியடைவர்.
அதனால் பிள்ளைகளை அவர்களாக இலட்சியங்களை தீர்மானிக்கச் செய்து அதன்படி செயற்பட தூண்டுவோம்,

சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடைய தவwpய மகன் இஞ்ஜினியராக வரவேண்டும் என்பது அல்லது விஞ்ஞானப் படத்தில் சித்தியடையாதவன் உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுவதும், எதிர்பார்ப்பதும் சாத்தியமற்றதாகும்.

ஆனால் அவன் தனது ஆசையை அடையும் வரை முயற்சித்துப்பெற்றுக்கொள்ளும் தைரியத்துடன் கடமையில் இறங்குவானாக இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டியவனாக மாறுகின்றான்.

சாதனையாளர்கள் பட்டியலில் கூட தன்னை இணைத்துக்கொள்ளலாம்.

  6.   தோல்விகளை முகங்கொடுக்கப் பலக்குதல். (Guide to dealing with failure)

சில முக்கிய காரணங்கள் பிள்ளைகளின் தோல்விக்கு துணை நிற்கின்றன.

குறிப்பாக,
·        உற்சாகப் படுத்தாமை
·        எதையும் சாதாரணமாக நினைத்து படிக்க செய்யும் திட்டமின்மை

·     நிரந்தரமாக தீர்க்க முடியாத பிரச்சினைகள், (+மாக கண்பார்வை இன்மை, காது செவிடு)               

இந்த பிரச்சினைகள் காரணமாக அதிகமான பிள்ளைகள் கல்வியில் தோy;வியடைகின்றார்கள்.

இவைகளை கருத்தில் கொண்டு எமது பிள்ளைகளை  இந்த வகையான பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.

பாடசாலையில் இருந்து திரும்பி வரும் போது எமது பிள்ளைகளின் பரீட்சை பெWபேWகள் மிக Nkhசமானதாக இருந்தால் அதற்காக அவர்களை சத்தமாக திட்டுவதையும் குறைகூWவதையும் நி;Wத்திவிடவேண்டும். காரணம் இந்த மோசமான ரிபோட் மூலம் வகுப்பில் ஆசிரியர்களின் கண்டிப்பு வார்த்தைகள், சக மாணவர்களின் மோசமான, இழிவான சொற்கள் மூலம் எமது பிள்ளைகளின் மனதுகளில் கவலைகளும் மன அழுத்தங்களும் பதிந்துள்ளன, அவைகளை  போக்குவதற்கும் நீக்குவதற்கும் முதலில் நாம் உதவ வேண்டும். இந்த அனுபவங்கள் எமது பிள்ளைகளின் மனதுக்கு கிடைத்த பேரழிவாகும்.

இந்த நேரத்தில் எமது பிள்ளைகளுக்கு நாம் சொல்ல வேண்டியது உனது மோசமான பரீட்சை பெறுபேறு மூலம் நீ கவலையில் இருப்பது எனக்கு தெறியும், ஆனால் இதைவிடவும் நல்ல பெறுபேறுகளை எடுப்பதற்கும் உன்னால் முடியும் என இறுக்கிக் கட்டித்தழுவி ஆருதல் படுத்த வேண்டும். காரணம் இப்படிப்பட்ட மனவருத்தமான, கவலையான சந்தர்ப்பங்களில் எமது பிள்ளைகள் தனிமைப் படுத்தப்படுகின்றார்கள். இது தொடர்பான இன்னும் சில ஆலோசனைகளை (எமது என் மகன் ஒரு லீடர் என்ற புத்தகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்)

இந்த உலகில் யாருமே தோல்வியடைய விரும்புவதில்லை, சில நேரம் சில விடயங்கள் எமது கட்டுப்பாட்டைவிட்டும் எமது எல்லையை விட்டும் தாண்டிவிட்டால் நாம் தோy;வியை சந்திக்க நேரிடுகின்றது,

சிலர் நன்றாக முயற்சித்து படிப்பார்கள், வருகின்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து நாட்டில் உள்ள எந்த ஒரு முக்கியமான பல்கலைக்கழக பொUளியல் பீடத்திற்காகவோ நுழைவு பெற வேண்டும் என கனவு காணுவார்கள், ஆனால் ஒரு சில மார்க்ஸ்களால் தோல்வியடைந்து எந்த பல்கலைக்கழகத்திற்கும் செல்லமுடியாது என்ற நிலையை சந்திப்பார்கள்.
ஆனால் எப்போது முயற்சியை இடை நிWத்துகின்றோமோ, முடியாது என்று விட்டுக் கொடுக்கின்றோமோ அப்போதே தோல்வி என்பது தோல்வியாகும். அதே நேரம் விடாப்பிடியாக முயற்சித்தால் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவையில் எம்மால் நினைப்பதை சாதித்துவிட முடியும். இன்ஷா அல்லாஹ்.

உலகில் நாம் வெற்றிபெWவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன, ஒன்றில் தோல்வியடைந்து விட்டால் அடுத்த முறையை அல்லது துறையை தெhpவு செய்து அதன் வழியில் தொடர்ந்து சென்றால் வெற்றி நிச்சயம்.

பொருளியல் பாடத்தில் தோல்வியைத்தழுவிய மாணவன் சட்டத்துறையில் அடுத்த வருடத்தில் பல்கலைக்கழகம் நுழைய முடியும்.
எல்லோரும் எல்லா நேரத்திலும் தோல்வியடைவது கிடையாது. முயற்சிக்கேற்ப சாதிப்பர்.

எப்போதும் எமது பிள்ளைகளை சவால்களை முகங்கொடுப்பதற்கும் தோல்விகளுக்கு எதிராக போராடுவதற்கும் நாம் பயிற்றுவிக்க வேண்டும், எதிர்கால கனவுகளை அவர்களாகவே தீர்மானிப்பதற்கு உதவ வேண்டும், தீர்மானித்த கனவை நோக்கி தொடர்ந்தும் முயற்சிக்கச் செய்ய வேண்டும், அது தோல்வியடைகின்ற போது தொடர்ந்தும் முயற்சிப்பதற்கு அல்லது உடனே முடியுமான, விருப்பமான வேறு ஒரு துறையில் அவனது பயணத்தைத் தொடர நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.

இப்படி உரிய நேரத்தில் எமது பிள்ளைகளை நாம் வழிகாட்டும் போது எமது பிள்ளைகளை தோல்விகள் தீண்டாத விதத்தில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முயற்சிப்பது மற்றும் தான் அவர்களின் கடமை, அதன் முடிவை அல்லாஹ் தான் தீர்மானிக்கின்றான், அதனால் எமது பிள்ளைகளை அன்பாக உதவ வேண்டியதும் அவர்களின் கடுமையான முயற்சிக்கு ஊக்குவிப்பதும் எமது கடமையாகும்.

Ø   பிள்ளைகளுக்கு முன்னால் முன்மாதிரியாகச் செயற்படல் (Be a Role model to Children).
பிள்ளைகள் எமது ஏவல்களை செவிமடுத்து அதனை எடுத்து நடப்பதற்கு மேலாக நாம் என்ன செய்கின்றோம் என்பதை பார்த்து அதனை தங்களது வாழ்வில் பிரதிபலிப்பதில் உற்சாகமாக இருக்கின்றார்கள்.

எதிர் வீட்டு பிள்ளை ஓய்வு நேரங்களையும் விடுமுறை தினங்களையும்  நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலமும் வீட்டு பயிற்சிகளை செய்வதன் மூலமும் கடத்துவதை காண்கின்ற ஒரு சிறுவன் அதே எதிர்வீட்டு தந்தையும் அவ்வாறே புத்தகங்கள் மூலம் ஓய்வு நேரங்களை கடத்துவதை காண்கின்றான். இந்த பிள்ளை அதிகம் புத்தகங்களை நேசிக்கக் காரணம் அவரது தந்தையை பிரதிபண்ணுவதேயாகும்.

எமது பிள்ளைகள் எப்போதும் நல்ல பிரதிபண்ணும் மிசினாகவே இருக்கின்றார்கள் என்பதை அறிந்து எமது பிள்ளைகள் குறித்த ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை செய் (do it) என்று ஏவுவதைவிட மகனே வா, நாம் இருவரும் இதை செய்வோம் (let’s start) என்று அன்பாக அழைத்து நாம் எமது பிள்ளைகளுக்கு முன்னால் அதனை செய்ய ஆரம்பித்தால் இரண்டாவது தடவை தானாகவே எமது பிள்ளை செய்ய ஆரம்பிக்கும். இதுதான் முன்மாதிரியான பெற்றோருக்குரிய சிறந்த உதாரணமாகும்.

வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் போது எமது வீட்டுச் சூழலிலுள்ள கோழிகளையும் அதன் குஞ்சுகளையும் பார்த்தால் எமக்கு புதிய, போதிய அனுபவம் கிடைக்கும்.

தாய்க் கோழி ஒரு தீனியைக் கொத்தியதும் அதைக் காண்கின்ற குஞ்சுகள் பின்னால் நின்று அந்த உணவைச் சுவைக்கின்றன. கொஞ்ச நேரத்தில் தாய் ஒரு நிழலில் ஓய்வு எடுக்கும், ஆனால் குஞ்சுகள் ஆங்காங்கு உணவுக்காக ஓடித்திரியும். இதுதான் அது.

தொடர்வது 11வது பகுதி………………..


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

உண்மையில் அருமையான ஒரு தகவல் இது. குழந்தைகளை பாடசாலைக்கு, மாலை வகுப்புகளுக்குஅனுப்பி விட்டால்அவர்கள் படித்து பட்டம் பெற்று விடுவார்கள் என்று சில பெற்றோர் எந்த வித முயற்சியோ உரு துணையோ கொடுக்காமல் கனவு காணுகின்றனர். அதே நேரம் அவர்களது குழந்தைகளைப் பற்றி அறிந்து கொள்வதில் அக்கறை கூடக் காட்டாமல் கற்பிக்கும் ஆசிரிய சமூகத்தைக் கேள்வி கேட்கின்றார்கள்.எந்த வித முன்மாதிரியும் இல்லாமல் குழந்தைகளிடத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றார்கள். தன்னம்பிக்கையை வளர்க்க வழி செய்யாது கோழைகளாக திசைமாற எத்தனிக்கும் குழந்தைகளைக் கண்டிக்கின்றார்கள்.அப்படியான மனநிலையில் உள்ள பெற்றோர் கட்டாயம் இது போன்ற கருத்துக்களை அறிந்து கொள்வது அத்தியாவசியமானது என்று நினைக்கின்றேன்.


பெற்றோர் தமது குழந்தைகளுக்கு தாய் தந்தையாய் மட்டுமல்லாது
கற்பிக்கும் ஆசானாக,
தோல்விகளின் போது தோல் கொடுக்கும் சகோதரர்களாக, கருத்துக்களைப் பரிமாறி கருத்துச்சொல்லும் நண்பர்களாக இருக்கும் காலமெல்லாம் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.
ஆசைப்பட்ட சிகரங்களை எல்லாம் தொடுவார்கள்.

shadha