தனிப் பிரதேச சபைக்கான பரிந்துரை (மரிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி)



இஸ்ஸதீன் றிழ்வான்
தோஹா, கத்தார்
16/11/2014
கெளரவ அமைச்சர்
ரிஷாட் பதியுதீன்
வனிகம் மற்றும் கைத்தொழில் அமைச்சு, கொழும்பு
Sub: தனிப் பிரதேச சபைக்கான பரிந்துரை (மரிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி)
மன்னார் முசலி பிரதேச சபைக்குக் கீழ் இயங்கிவரும்மரிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி ஆகிய மூன்று கிராமங்களும் ஏனைய கிராமங்களுடன் ஒப்பீடும் போது பாரிய பின்னடைந்த கிராமங்களாக அடையாளம் காணக்கிடைக்கிறது.
முக்கோண வடிவில் அமைந்துள்ள, மன்னார் புத்தள பிரதான வீதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள் இயற்கை வளங்களை கொண்டமைந்த வெகுவிரையில் கட்டியெழுப்ப முடியுமான பிரதேசமாகும்.
ஆனால் உள்ளூர் அரசியல் செல்வாக்கின்மையும், ஏழைகள் அதிகம் வாழும் கிராமங்கள் என்ற வகையிலும் இந்த கிராமங்களின் வளர்ச்சி வேகம் மந்தகதியில் உள்ளது.
கல்வி, கலாச்சாரம், பண்பாடு, சுகாதரம், அரசியல் என்று எல்லாத் துறையிலும் இக்கிராம‌ங்களை முன்னேற்ற வேண்டிய அவசிய அவசரத்தேவை ஏற்பட்டிருக்கின்றது.
இம்முக் கிராமங்களையும் இணைத்து ஒரு பிரதேச சபையாக நிருவகிப்பதன் மூலம் இப்பிரதேசத்தை நவீன முன்மாதிரி கிராமங்களுக்கேற்றார் போல் அபிவிருத்தி செய்யமுடியும்.
இந்த வேண்டுகோளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு பணிவாய் வேண்டிக்கொள்கிறேன்.
இது தொடர்பாக மேலதிகமான விடயங்களை பேசுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
உங்களுடைய ஆக்க பூர்வமான பதிலை எதிர்பார்க்கின்றேன்
இப்படிக்கு,
இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர் ‍ "என் மகன் ஒரு லீடர்"
ஆய்வு மாணவன் University of Wolverhampton, UK


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: