குவேனிக்கும் மரிச்சிக்கட்டிக்குமிடையிலான தொடர்பு என்ன........? (The link between Kuveni and Marichchikatti)


குவேனியுடைய வரலாறு மரிச்சிக்கட்டியுடன் ஆரம்பிக்கிறது
-------------------------------------------- குவேனியின் வரலாற்றை தேடினால் மரிச்சிக்கட்டியின் வரலாறு கிடைக்கும். இலங்கை வரலாற்றில் முதல் அரசர் விஜயனுடைய (Vijaya) வருகையும் குவேனியுடைய (Kuveni or Sesapathi or Kuvanna) திருமணமும் முக்கியமான ஒன்றாகும். குவேனியுடைய வரலாறு தெரிந்த அனைவருக்கும் மரிச்சிக்கட்டியுடைய வரலாறு தெரிந்திருக்க வேண்டும், அதற்கு மரிச்சிக்கட்டி என்ற பெயரே சாட்சி. மரிச்சிக்கட்டி என்பது 'மறி' 'கட்டி' என்ற இரண்டு சொற்களை இணைத்த ஒரே சொல்லாகும். குவேனி வில்பத்து வழியாக பயணிக்கும் போது மரிச்சிக்கட்டி என்ற பகுதியில் வைத்து மறித்துக்கட்ட முனைந்த சம்பவத்தை வைத்தே இந்த கிராமத்திற்கு மரிச்சிக்கட்டி என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 2009களில் 'முசலிப் பிரதேச முக்கிராமங்கள்' புத்தகத்திற்குத் தேவையான தகவல்களை தேடி வீடுவீடாக பயணித்த போதே இந்த தகவல்களை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது. மரிச்சிக்கட்டியில் வாழ்ந்த முஸ்லிம்கள் யானை வேட்டையில் பெயர் போனவர்கள் என்பதை தளதா மாளிக்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எவரும் உறுதிப்படுத்திக்கொள்வர். மரிச்சிக்கட்டிக்கென தனித்த, நீண்ட வரலாறு இருக்கிறது, சிலறுடையை அரசியல் மற்றும் இனவாத போக்குகளின் மூலம் இந்த கிராமத்தை வில்பத்துடன் இணைத்து பேசுவது மனிதாபிமான செயலல்ல என்பது உண்மை.

எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: