எமது கோரிக்கையை ஏற்போருக்கே வாக்களிப்போம்

முசலிப் பிரதேச முக்கிராம மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் குறித்த கோரிக்கைகளை ஏற்போருக்கு வாக்களிப்போம்.

எதிர்வரும் 2015 பொதுத் தேர்தலில் ன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எமது மூவூர் சார்பாக நாம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

மன்னார் முசலிப் பிரதேச முக்கிராமங்களான மரிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி கிராமங்களைச் சேர்ந்த நாங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவருகிறோம். கல்வி, கலை, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் உட்கட்டமைப்பு என்று எல்லாத் துறைகளிலும் நாம் வீழ்ச்சி கண்டிருக்கின்றோம்.

இந்த அகதி, அநாதரவாக நிலை தொடர்ந்து எங்களது நாங்காவது தலைமுறையும் இந்நிலையை சந்திக்ககூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

இம்முக்கிராமங்களையும் இணைத்த தனித்த பிரதேச சபைக்கான கோரிக்கை வேண்டும், இதற்கான கடித்தம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, இந்த கோரிக்கையை ஏற்று உரிய சந்தர்ப்பம் வரும் போது நிறைவேற்றிதருவதாக வாக்களித்திருக்கிறார்.

இதே கோரிக்கையை மீண்டும் முன்வைக்கின்றோம், இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும்.

உங்களது வாக்குகளை பொருத்து எங்களது வாக்களிப்புக்கள் அமையும்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான் எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: