அவசரம்......!! சால்வையை ஓரங்கட்ட அவசரமாக பணியாற்றுவோம்

அவசரம்......!! சால்வையை ஓரங்கட்ட அவசரமாக பணியாற்றுவோம்
 - இஸ்ஸதீன் றிழ்வான் - 

இனவாதத்தை தூவி இனத்தை வேருபிரித்து ஆட்சி செய்த முன்னால் ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வர துடிப்பது எதற்கு.........?

தனது குடும்ப ஆட்சியை பல தசாப்தங்களுக்கு முன்னெடுக்கலாம் என்ற கனவை நனவாக்க தேவையான அனைத்து மாபியத்துகளையும் செய்து முடித்தவர்தான் இவர், இதனை மக்கள் சரியாக உணர்ந்து பாடம் படிப்பித்ததன் விளைவுகளின் ஓசைதான் அந்த ஊளைச் சத்தம்.

இந்த சிவப்பு சால்வையை அரசியலில் இருந்து தூரப்படுத்த வேண்டும் என்பதை இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் விளங்கி வைத்திருப்பதற்கு முன்னர் பொரும்பான்மை சிங்களச் சமூகம் சரியாக புரிந்துவைத்திருக்கின்றார்கள்.

மீண்டும் பதவிக்கு வரத்துடிப்பது என்பது தான் செய்த தவருகளை மறைப்பதற்கும், தனக்கு வழங்கப்பட இருக்கும் தண்டனைகளை தடுப்பதற்கும் எதிரிகளை தண்டிப்பதற்குமேயாகும்.

ஆதலால்....

நாம் இந்த சால்வையை முழுமையாக ஓரங்கட்டுவதற்கு தேவையான, எம்மால் முடியுமான அனைத்து முன்னெடுப்புக்களையும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: