முஸ்லிம் கட்சிகள் முடிவெடுப்பதில் முட்டி மோதத் தேவையில்லை

முஸ்லிம் கட்சிகள் முடிவெடுப்பதில் முட்டி மோதத் தேவையில்லை

இலங்கையில் எதிர்வரும் 2015ன் பொதுத் தேர்தல் சூடுபிடித்திருக்கின்றது, ட்சிகளுக்கிடையில் இரகசிய பரகசிய பேச்சிக்கள் மிகமும்முரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் பொது மக்களது கைகட்டி வாய் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் இனவாத ஆட்சி செய்துவந்த சால்வையை வீட்டுக்கி அனுப்பிய நிலையில் புதிய ஆட்சி அமுலுக்கு வந்தது. வீடு சென்ற சால்வையை மீண்டும் திருப்பி அழைத்து பிரதமர் பதவியில் அமரவைக்க சில சில்லறைகள் வேகமாக இயங்குகின்றனர்.

இந்த நிலையில் முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் தாம் யாருக்கு ஆதரிப்பது, யாருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்ற கேள்விகளுக்கு தீர்வுகாணும் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிகள் கட்சிகள், தலைவர்கள் முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபளிக்கும் நோக்கை முழுமையாக கவனத்தில்கொண்டு முன்நிற்பார்கள் என்றால் நிச்சயம் அனைத்து கட்சிகளும் ஒரே கூடையில் ஒருங்கிணைவார்கள்.

ஆனால்

சொந்த தேவை, நோக்கம் முதன்மைப்படுத்தப்படுமாக இருந்தால் முன்புபோன்று நிச்சயம் நம் சமூகம் விலைபேசப்படும்.

நம் சமூகத்தின் உரிமைகள், சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படுவதற்கு முஸ்லிம் கட்சிகள் முடிவெடுப்பதில் முட்டி மோதிக்கொள்ள தேவையில்லை. யாரை ஆதரிப்பது என்பது இன்றைய சூழலில் மிகத் தெளிவாகத்தான் இருக்கிறது.

ஆட்சியில் இருக்கும் புதிய ஜனாதிபதி மைத்திரி சிரிசேனா அவர்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு நாம் ஒன்றைணைய வேண்டும்.

இனவாதிகளான பொதுபல சேனா, சிங்கள ராவய போன்றவர்களை அடக்குவது, பிந்தங்கிய முஸ்லிம் கிராங்களை அபிவிருத்தி செய்வதுபோன்றனஅந்த முக்கிய நிபந்தனைகளாக இருக்க வேண்டும்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: